ரஜினி உடல் நிலை குறித்து வீண் வதந்தி!

By Shankar

Rrajini
சென்னை: சூப்பர் ஸ்டார் ரஜினியின் உடல் நிலை குறித்து இன்று பிற்பகலிலிருந்து பரவிய வதந்திகளால் ரசிகர்கள் மிகுந்த பரிதவிப்புக்கு உள்ளாகினர்.

ரஜினி நலமுடன் இருப்பதாகவும், அவர் பட வேலைகளில் பிஸியாக இருப்பதாகவும் அவரது வீட்டில் தகவல் தெரிவித்துள்ளனர்.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் கடந்த ஆண்டு ஏப்ரல் 29-ம் தேதி, ராணா படப்பிடிப்பின்போது உடல் நலக்குறை ஏற்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அன்றே அவர் டிஸ்சார்ஜ் ஆனாலும், அவர் உடல்நிலை மீண்டும் பாதிக்கப்பட, அடுத்தடுத்து பல்வேறு மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டு, கடைசியில் சிங்கப்பூர் மவுன்ட் எலிசபத் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று, நலமுடன் வீடு திரும்பினார்.

அதன் பிறகு சில மாத ஓய்வுக்குப் பிறகு, வழக்கம் போல விழாக்களில் பங்கேற்று வருகிறார். கோச்சடையான் படத்திலும் நடித்து முடித்துள்ளார்.

இந்த நிலையில் கடந்த வாரம் ரஜினிக்கு உடல் நிலை பாதிக்கப்பட்டதாகவும், அப்பல்லோ மருத்துவனையில் சில மணி நேர சிகிச்சைக்குப் பிறகு வீடு திரும்பியதாகவும் ஒரு நாளிதழ் செய்தி வெளியிட்டது.

ஆனால் அது பொய்யான தகவல் என்று பின்னர் தெரிய வந்தது.

இந்த நிலையில், இன்று பிற்பகல் ரஜினி அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பதாக தனியார் தொலைக்காட்சி ஒன்று தகவல் வெளியிட்டது.

இதனால் ரஜினியின் ரசிகர்கள் மிகுந்த பரிதவிப்புக்கு உள்ளாகினர். தங்களுக்கு தெரிந்தவர்களிடமெல்லாம் தொடர்ந்து விசாரிக்க ஆரம்பித்தனர்.

இதுகுறித்து ரஜினியின் வீட்டிலும், அலுவலகத்திலும் தொடர்பு கொண்டு விசாரித்தபோது, "ரஜினி சார் நல்லா இருக்கார். வழக்கம்போல அவர் படவேலைகளில் பிஸியாக இருக்கிறார். வீண் வதந்தி. ரசிகர்கள் பதட்டமடைய வேண்டாம்," என்றனர்.

இந்த பொய்யான செய்தி ரசிகர்களை கோபத்துக்குள்ளாக்கியுள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X