ரஜினி வீட்ல இருக்காரோ இல்லையோ ஆன்லைனில் இருக்கார்: எத்தனை ட்வீட்டு!
Recommended Video

சென்னை: ரஜினி இன்று ஆன்லைனில் இருக்கிறார்.
ரஜினிகாந்தின் பிறந்தநாளை அவரின் ரசிகர்கள் அமர்க்களமாக கொண்டாடி வருகிறார்கள். அவரின் பிறந்தநாள் ட்ரீட்டாக பேட்ட பட டீஸர் வேறு வெளியாகியுள்ளது.
தலைவர் ரசிகர்கள் செம மகிழ்ச்சியாக உள்ளனர். டீஸர் அவர்களுக்கு மிகவும் பிடித்துள்ளது.
ட்விட்டர்
பிறந்தநாள் அன்று நான் வீட்டில் இருக்க மாட்டேன் என்று பேட்ட இசை வெளியீட்டு விழாவில் தெரிவித்தார் ரஜினிகாந்த். அவர் வீட்டில் இருக்கிறாரோ இல்லையோ ஆனால் ஆன்லைனில் இருக்கிறார். காலையில் இருந்து ட்வீட் செய்து கொண்டிருக்கிறார் அவர். தனக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த பிரபலங்களுக்கு நன்றி தெரிவித்துள்ளார்.
பிறந்தநாள்
ரஜினி ஆண்டுதோறும் தனது பிறந்தநாள் அன்று மட்டும் தான் அதிகமாக ட்வீட் செய்கிறார். அதுவும் தன்னை வாழ்த்தியவர்களுக்கு நன்றி தெரிவித்து. அந்த நாள் இன்று.
கமல்
தனக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த நண்பன் கமலுக்கு நன்றி தெரிவித்துள்ளார் ரஜினி.
ஷங்கர்
தனக்கு 2.0 என்ற மெகா ஹிட் படத்தை கொடுத்த ஷங்கர் தன்னை வாழ்த்தியதை பார்த்து நன்றி தெரிவித்துள்ளார் ரஜினிகாந்த்.


Click it and Unblock the Notifications











