ராயன் படத்தில் ரஜினிகாந்த்.. பல பிரச்னைகளிலும் ரஜினி மீது தனுஷுக்கு இவ்வளவு அன்பா?
சென்னை: தனுஷ் நடிப்பில் கடைசியாக வெளியான கேப்டன் மில்லர் திரைப்படம் கலவையான விமர்சனத்தையே பெற்றது. முக்கியமாக போட்டிக்கு களமிறங்கிய அயலானைவிட கேப்டன் மில்லர் வசூலில் கொஞ்சம் டல்லடித்ததாகவே கூறப்பட்டது. சூழல் இப்படி இருக்க தனுஷ் இப்போது ராயன் படத்தை இயக்கி நடித்திருக்கிறார். சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்திருக்கும் அந்தப் படமானது ஜூலை 26ஆம் தேதி வெளியாகிறது. எனவே படத்தின் ப்ரோமோஷன் பணிகள் சூடுபிடித்திருக்கின்றன.
கோலிவுட்டின் சிறந்த நடிகர்களில் ஒருவரான தனுஷ் கடைசியாக கேப்டன் மில்லர் படத்தில் நடித்தார். அருண் மாதேஸ்வரன் இயக்கியிருந்த அந்தப் படம் பெரும் எதிர்பார்ப்போடு வெளியாகி கலவையான விமர்சனத்தை பெற்றது. எனவே கண்டிப்பாக ஒரு ஹிட் கொடுக்க வேண்டும் என்ற முடிவில் இருக்கும் தனுஷ்; தனது 50ஆவது படத்தை தானே இயக்கி நடிக்கிறார். படத்துக்கு ராயன் என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது. ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்க, சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்திருக்கிறது.

நட்சத்திர கூட்டம்: இப்படத்தில் ஏகப்பட்ட நட்சத்திரங்கள் நடிக்கிறார்கள். தனுஷுடன் காளிதாஸ் ஜெயராம், சந்தீப் கிஷன், அபர்ணா, துஷாரா விஜயன், எஸ்.ஜே.சூர்யா, பிரகாஷ் ராஜ், செல்வராகவன் என ஏகப்பட்ட பேர் களமிறங்கியிருக்கிறார்கள். பெரும் ஸ்டார் காஸ்ட் என்பதால் இந்தப் படத்தின் மீது எக்கச்சக்க எதிர்பார்ப்பு இப்போதே எழுந்திருக்கிறது. இந்த மாதம் 26ஆம் தேதி படமானது திரையரங்குகளில் வெளியாகவிருப்பது குறிப்பிடத்தக்கது.
நிறைய வன்முறை காட்சிகள்: படத்தை சென்சார் குழுவினர் பார்த்து ஏ சர்ட்டிஃபிக்கேட் கொடுத்திருக்கிறார். சென்சார் வட்டாரத்திலிருந்து வந்த தகவல்படி படம் நன்றாக இருக்கிறது. அதேசமயம் நிறைய வன்முறை காட்சிகள் இடம்பெற்றிருந்ததால் ஏ சான்றிதழ் கொடுக்கப்பட்டதாக தெரிகிறது. படமானது வடசென்னை பேக் ட்ராப்பில் உருவாகியிருக்கிறது. ஏற்கனவே அந்த பேக் ட்ராப்பில் தனுஷ் நடித்த புதுப்பேட்டை, வடசென்னை ஆகிய படங்கள் மிகப்பெரிய வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது.
இயக்குநர் தனுஷ்: அதேபோல் தனுஷ் முதலில் இயக்கிய பவர்பாண்டி திரைப்படம் சூப்பர் டூப்பர் ஹிட்டடித்தது. எனவே ராயன் படத்திலும் இயக்குநராக தனுஷ் தனது முத்திரையை பதிப்பார் அவரது ரசிகர்கள் ஆர்வத்துடன் காத்திருக்கிறார்கள். தன் குடும்பத்தை அழித்தவர்களை டானாக மாறி தனுஷ் பழி வாங்குவதுதான் படத்தின் ஒன் லைன் என்று சொல்லப்படுகிறது.
ட்ரெய்லருக்கு கலவையான விமர்சனம்: படத்தின் ட்ரெய்லர் சில நாட்களுக்கு முன்பு வெளியானது. ட்ரெய்லரை பார்த்த ரசிகர்கள், ரொம்ப சுமாராத்தான் இருக்கு.. திரைக்கதை ஒழுங்காக இருந்தால்தான் படம் தப்பிக்கும் என்று ஓபனாகவே பேச ஆரம்பித்தார்கள். மேலும் படமும் வடசென்னை, புதுப்பேட்டை சாயலில் இருந்துவிடுமோ என்ற சந்தேகத்தையும் அவர்கள் தொடர்ந்து எழுப்பிவருகிறார்கள்.
தனுஷின் செம பதில்: இந்நிலையில் படம் ரிலீஸாக இன்னும் நான்கு நாட்களே இருப்பதால் படத்தின் ப்ரோமோஷன் பணிகள் சூடுபிடித்திருக்கின்றன. அந்தவகையில் ஒரு நிகழ்வில், தனுஷிடம் நடிகர் காளிதாஸ் ஜெயராம், 'ராயன் கதாபாத்திரத்தில் நீங்கள் நடிக்கவில்லை என்றால் வேறு யாரை நடிக்க வைத்திருப்பீர்கள்’ என்று கேட்டார். அதற்கு பதிலளித்த தனுஷு, 'ரஜினிகாந்த் சார்’ என்று பதிலளித்தார். இதனைப் பார்த்த ரசிகர்கள் அட இவ்வளவு பிரச்னையிலும் ரஜினியின் மீது தனுஷுக்கு அன்பு குறையவில்லையே என்று கமெண்ட்ஸ் செய்துவருகின்றனர்.


Click it and Unblock the Notifications











