Jailer Rajini - ரஜினியின் நம்பிக்கையை காப்பாற்றிய நெல்சன் - உச்சக்கட்ட மகிழ்ச்சியாம்
சென்னை: Jailer Rajini (ஜெயில்ர் ரஜினி) பெரும் ட்ரோல்களுக்கு மத்தியில் ஜெயிலர் படத்தை இயக்க கமிட்டான நெல்சன் தற்போது ரஜினியின் நம்பிக்கையை காப்பாற்றிவிட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் நடித்த தர்பார் படத்தையும், சிவா இயக்கத்தில் நடித்த அண்ணாத்த படத்தையும் ரஜினிகாந்த் ரொம்பவே எதிர்பார்த்திருந்தார். ஆனால் இரண்டு படங்களும் அவரை ஏமாற்றிவிட்டன. சிவாவுக்கு அவர் தங்க சங்கிலி பரிசளித்தாலும் சிவா மூலம் அஜித்துக்கு கிடைத்த மாஸ் ஹிட் ரஜினிக்கு கிடைக்கவில்லை. இதனால் ரொம்பவே அப்செட்டில் இருந்தாராம் ரஜினிகாந்த். இதனையடுத்துதான் இளம் இயக்குநருடன் இணையலாம் என முடிவு செய்து நெல்சனுடன் கை கோர்த்தார்.

நிரூபிப்பாரா நெல்சன் திலீப்குமார்: கோலமாவு கோகிலா, டாக்டர் என இரண்டு சூப்பர் டூப்பர் ஹிட் படங்களை இயக்கிய நெல்சன் திலீப்குமார் மூன்றாவது படமாக விஜய்யை வைத்து பீஸ்ட் படத்தை இயக்கினார். முதல் இரண்டு படங்கள் போலவே அந்தப் படமும் ஹிட் ஆகும் என எதிர்பார்த்திருந்த நெல்சனுக்கு பலத்த அடி விழுந்தது.
குறிப்பாக சமூக வலைதளங்களில் பலரும் அவரை ட்ரோல் மெட்டீரியலாக மாற்றினர். இப்படிப்பட்ட சூழலில்தான் ரஜினியை இயக்க ஒப்பந்தமானார் நெல்சன். எனவே விஜய்யிடம் விட்டதை ரஜினியை வைத்து பிடித்து மீண்டும் தன்னை நிரூபிக்க காத்திருக்கிறார் நெல்சன் திலீப்குமார்.
ரஜினி கொடுத்த ஐடியா?: பீஸ்ட் படத்தின் தோல்வியால் ரஜினிகாந்த் நெல்சன் மீது நம்பிக்கை இழந்துவிட்டார் எனவும், ஒருகட்டத்தில் அவரை படத்திலிருந்து தூக்குவதற்கு தயாராகிவிட்டார் எனவும் தகவல்கள் வெளியாகின. ஆனால், ஒருவழியாக ஜெயிலர் படத்துக்கு நெல்சனே இயக்குநராக இறுதி செய்யப்பட்டார்.
அதுமட்டுமின்றி படத்தை பான் இந்தியா படமாக ரிலீஸ் ஆக்குவதும், அதற்காக பல மொழிகளில் இருந்தும் ஸ்டார்களை களம் இறக்குவதும் என ரஜினிகாந்த் ஐடியா கொடுத்தாராம். அதன்படிதான், மோகன் லால், சிவராஜ்குமார், சுனில், ஜாக்கி ஷெராஃப் என நட்சத்திர பட்டாளம் களமிறக்கப்பட்டதாகவும் ஒரு பேச்சு ஓடிக்கொண்டிருக்கிறது.

ரஜினி போர்ஷன் ஓவர்: படத்தின் ஷூட்டிங் இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் நடந்துவந்த சூழலில் ரஜினிக்கான போர்ஷன் முடிவடைந்துவிட்டதாக இயக்குநர் நெல்சன் திலீப்குமார் சமீபத்தில் ஒரு விழாவில் அறிவித்திருந்தார். மற்றவர்களுக்கான போர்ஷன் விரைவில் முடிவடையவிருக்கிறது. இந்தப் படம் ரஜினி, நெல்சன் என இருவருக்குமே முக்கியமான படம் என்பதால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு எக்கச்சக்கமாக அதிகரித்துள்ளது.
ஆகஸ்ட் 10 ரிலீஸ்: படத்தின் ரிலீஸ் எப்போது என ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்த்திருந்த சூழலில் அதுகுறித்த அப்டேட் நேற்று வெளியானது. அதன்படி ஆகஸ்ட் 10ஆம் தேதி படம் ரிலீஸாகவிருக்கிறது. அதுகுறித்த அறிவிப்பில் படத்தில் நடித்திருக்கும் அத்தனை பேர் தொடர்பான காட்சிக்ளும் இடம்பெற்றிருந்தன. நேற்று ரிலீஸான ஜெயிலர் அறிவிப்புதான் இன்றுவரை சமூகவலைதளங்களில் ட்ரெண்டிங்கில் இருக்கிறது.
நம்பிக்கையை காப்பாற்றிய நெல்சன்: இந்நிலையில் ஜெயிலர் படம் குறித்த புதிய தகவல் வெளியாகியிருக்கிறது. அதன்படி இதுவரை எடுக்கப்பட்ட ஜெயிலர் படத்தின் காட்சிகளை பார்த்த ரஜினிகாந்த், தான் வைத்த நம்பிக்கையை நெல்சன் திலீப்குமார் காப்பாற்றிவிட்டார் என்ற பூரிப்பில் இருக்கிறாராம். அதுமட்டுமின்றி நேற்று வெளியான ஜெயிலர் அப்டேட்டுக்கு ரசிகர்கள் கொடுத்த ரெஸ்பான்ஸும் அவருக்கு மிகப்பெரிய மகிழ்ச்சியை கொடுத்திருப்பதாக விவரம் அறிந்தவர்கள் கூறுகிறார்கள்.


Click it and Unblock the Notifications











