ஜெயிலர் 2 ஷூட்டிங் ஸ்டார்ட்?.. ரஜினிக்கு பிடித்த ஃபேவரட் ஆன இடம்!
சென்னை: நெல்சன் இயக்கத்தில் கடந்த 2023இல் வெளியான ஜெயிலர் படம் மெஹா ஹிட் ஆனது. இப்படத்தில் இடம்பெற்ற ரா காவலா பாடல்கள் பட்டி தொட்டியெங்கும் கலக்கியது. இன்ஸ்டா பக்கங்களை திறந்தாலே இந்த பாடல்கள் ரீல்ஸ் மோடில் இருந்தன. ரசிகர்களும் தமன்னாவின் ஆட்டத்தை பார்த்து வியந்து ரசித்தனர். அதிரிபுதிரி ஹிட் அடித்த நிலையில் இப்படத்தின் 2ஆம் பாகத்தின் முதற்கட்ட பணிகள் நடைபெற்று வருகிறது.
ஜெயிலர் 2 அறிவிப்பு தொடர்பான மாஸ் ஆன டீஸர் உடன் சன் பிக்சர்ஸ் வெளியிட்டு இருந்தது. அறிவிப்பு வந்து சில மாதங்கள் ஆன நிலையில் ஷூட்டிங் எப்போது தொடங்கும் என்று தான் ரசிகர்களும் காத்திருந்தனர். தற்போது அதற்கான மாஸ் அப்டேட்டும் வெளியாகியுள்ளது.

மாபெரும் வெற்றி: ஜெயிலர் படத்தில் ரம்யா கிருஷ்ணன், யோகி பாபு, சிவராஜ்குமார், மோகன்லால் என நட்சத்திர பட்டாளமே நடித்திருந்தனர். ரஜினியின் மகனாக வசந்த் ரவி நடித்திருந்தார். வில்லனாக வினாயகன் மிரட்டியிருந்தார். யாரும் எதிர்பார்க்காத ஹிட் படமாக அமைந்தது. ரஜினிக்கு 700 கோடி வசூலை அள்ளி தந்த படம் என்ற பெருமையும் பெற்றது. குறிப்பாக தமன்னாவும் காவாலா பாடலுக்கு குத்தாட்டம் போட்டிருந்தார். இந்த பாடலும் ஜெயிலர் பட விழாவில் ரஜினி பேசியதும் ரசிகர்களை தியேட்டருக்கு வரவழைத்தது. அனிருத்தின் இசை இந்த படத்தின் வெற்றிக்கு முக்கிய காரணமாக இருந்தது.
கார் பரிசு: சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவான இப்படம் 700 கோடி வசூலை குவித்ததால், ரஜினிக்கு மிகப்பெரிய பரிசுத்தொகையை கொடுத்தும் விலை உயர்ந்த கார் ஒன்றையும் பரிசாக கொடுத்தார். அதனோடு, நெல்சனுக்கும் ஒரு காரை பரிசளித்தார். இந்த வெற்றியை தொடர்ந்து ஜெயிலர் 2 எடுப்பதாக முடிவெடுக்கப்பட்டது. கடந்த சில மாதங்களாகவே இப்படத்திற்கான கதையை நெல்சன் எழுதி வந்தார்.
படப்பிடிப்பு எப்போது?: ஜெயிலர் 2 படம் குறித்த அறிவிப்பு வெளியான நிலையில், படப்பிடிப்பு எப்போது தொடங்கும் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்தது. இந்நிலையில், வரும் 10ஆம் தேதி படப்பிடிப்பு தொடங்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.இதில் ஹைலைட்டான ஒன்று ரஜினி சினிமாவில் நடிக்க தொடங்கிய. ஆரம்ப காலகட்டத்தில் அதிக நேரம் செலவழித்தது பழைய உட்லண்ட் என்ற இடத்தில் தானாம். தற்போது தனது நண்பர்களை அழைத்து வந்து மலரும் நினைவுகளை பகிர்ந்து நெகிழ்ச்சி அடைந்தாராம்.

மலரும் நினைவுகள்: 80களில் நடிகர் ரஜினிகாந்த் நடிக்கும் போது மாதக்கணக்கில் பழைய உட்லண்ட் ஹோட்டலில் தங்கியிருப்பது வழக்கம். ஒரு கட்டத்தில் அந்த ஹோட்டல் மூடப்பட்டு படப்பிடிப்பு வாடகைக்கு விடப்பட்டு வருகிறது. தற்போது அதே இடத்தில் ஜெயிலர் 2 பட ஷூட்டிங்கும் இங்கு தான் நடைபெறுகிறது. அங்கு வந்த ரஜினி எப்போதும் அங்கு போனாலும் இந்த இடத்தில்தான் நான் ஓய்வு எடுப்பேன். இங்குதான் படுத்திருப்பேன் பழைய கால நினைவுகளை படக்குழுவினருடன் பகிர்ந்துள்ளாராம்.
பேன் இண்டியா: ஜெயிலர் படத்தை போன்றே பார்ட் 2விலும் சிவராஜ்குமார் கேமியோ ரோலில் வருவது உறுதியாகியுள்ளது. அதேபோன்று மற்ற நடிகர்கள் யார் என்பது குறித்த பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. பேன் இண்டியா படமாக ஜெயிலர் 2 உருவாகவுள்ளது. பாலிவுட் பிரபலங்கள் கேமியோ ரோலில் நடிப்பது கன்ஃபாரம் என்ற பேச்சும் அடிபடுகிறது.


Click it and Unblock the Notifications











