ரஜினிகாந்த்தை அடுத்து இயக்கப் போவது மணிரத்தினம்?

By Sudha

Rajini
கோச்சடையான் படத்துக்குப் பின்னர் ரஜினிகாந்த், இயக்குநர் மணிரத்தினத்துடன் கை கோர்க்கப் போவதாக ஒரு செய்தி வெளியாகியுள்ளது.

கோச்சடையான் படத்தில் ரஜிநி நடித்து முடித்துள்ளார். இப்படத்தை அவரது இளைய மகள் செளந்தர்யா இயக்கியுள்ளார். இதைத் தொடர்ந்து அடுத்து யார் படத்தில் ரஜினி நடிப்பார் என்பது குறித்து வழக்கம் போல ஊகங்கள் கிளம்பின. அவர் இயக்கப் போகிறார், இவர் இயக்குவார் என்று புற்றீசல் போல செய்திகள் வெளியாகிய வண்ணம் உள்ளன.

ஆனால் தற்போது ரஜினி தனது அடுத்த இயக்குநராக மணிரத்தினத்தைத் தேர்வு செய்துள்ளதாக ஒரு புதுச் செய்தி வெளியாகியுள்ளது. இருவரும் இதுதொடர்பாக சமீபத்தில் சந்தித்துப் பேசி முடித்து விட்டதாகவும் கூறப்படுகிறது. கதை குறித்துக் கூட விவாதம் நடந்து வருகிறதாம்.

ஏற்கனவே ரஜினியை வைத்து தளபதி என்ற வெற்றிப் படத்தைக் கொடுத்தவர் மணிரத்தினம். ரஜினி, இளையராஜா என்ற மாயாஜாலம் காரணமாக அப்படம் பெரும் வெற்றி பெற்றது.

இந்த நிலையில் இவர்கள் இருவரும் மீண்டும் இணையப் போவதாக செய்திகள் வெளியாகியுள்ளன. தற்போது கடல் என்ற படத்தை இயக்கி வருகிறார் மணிரத்தினம். அதை முடித்து விட்டு ரஜினியிடம் அவர் வரலாம் என்று தெரிகிறது.

இப்படத்தைத் தயாரிக்கப் போவது யார் என்று தெரியவில்லை. ஆனால் கண்டிப்பாக இசை ஏ.ஆர்.ரஹ்மானாக இருக்கும் என்பதை இப்போதே சொல்லி விடலாம்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X