ரஜினி- கே.வி.ஆனந்த் சேரலையாமே?
சென்னை: ரஜினியின் கோச்சடையான் முடிந்து ரிலீசுக்கு தயாராகிவிட்டது. அந்த பரபரப்பு முடிவடைவதற்குள் அடுத்த படம் பற்றிய பேச்சு தொடங்கிவிட்டது. அது ரஜினியை வைத்து அடுத்த படத்தை இயக்குவது யார் என்பதுதான்.
கே.வி.ஆனந்த் இயக்கத்தில் ரஜினி நடிக்கிறார் என்று அரசல் புரசலாக காதில் தகவல் விழுந்தாலும் அதற்கான பேச்சுவார்த்தை அமைதியாக நடந்து வந்தது என்றே கூறுகின்றனர் கோலிவுட் வட்டாரங்களில். இருதரப்பிலும் அதுபற்றிய தகவல் வெளியாகவில்லை என்றாலும் அது உண்மைதான் என்பது போல ஊடகங்களில் செய்தி பரபரத்தது.
இதனால் ரஜினி அப்செட் ஆனதாகவும், பின்னர் கே.வி. பிரபல டிவி நிறுவனத்தின் பேட்டியின் போது ரஜினிக்கு எல்லாம் என்னால் கதை சொல்ல முடியுமா என்பது போல பேட்டி கொடுத்து அந்த பரபரப்பிற்கு முற்றுப் புள்ளி வைத்ததும் வேறு கதை.

கதை டிஸ்கஸன் கமுக்கமாக?
என்னதான் இரு தரப்பிலும் ஒத்துக்கொள்ளவில்லை என்றாலும், பேச்சுவார்த்தை நடந்தது என்னவோ நிஜம். கே.வி.ஆனந்த், ரஜினியிடம் ஒரு கதையை சொல்லி ஒ.கே. வாங்கியிருந்தார். அந்த விபரத்தை வைத்து, ஏ.ஜி.எஸ். நிறுவனம் ரஜினியோடு பேசியது என்கிறார்கள்.

அட்வான்ஸ் கொடுத்த ஏ.ஜி.எஸ்
தொடர்ந்து, ஒரு பண்டிகை தினத்தன்று கே.வி.ஆனந்த்தை வரவழைத்த நிறுவனம், ஒரு மரியாதையான தொகையை அட்வான்சாக கொடுத்ததாம். இந்த விவகாரம் ஆனந்த் சைடில் இருந்தே லேசாக கசிய, சூப்பர் ஸ்டார் அப்செட் ஆனதாக தகவல்

ஐடியா இல்லையே…
உடனே, ஆனந்த் ரஜினி படத்தை நான் டைரக்ட் பண்ணுவதாக ஐடியா ஏதுமில்லை" என்று கூறி , செய்தியை பரப்பினார். பிரபல சேனலில் பேட்டி வேறு கொடுத்தார்.

மாற்றான் படத்தின் ரிசல்ட்தான்..
ஆனால் கதை டெவலெப்மென்ட் மூழு மூச்சாக நடந்தது. ரஜினியும் அவ்வப்போது தொடர்புக்கு வந்துகொண்டிருந்தார். ஆனால் மாற்றான் படத்தின் ரிசல்ட்தான் மறுபடியும் யோசிக்க வைத்துள்ளது ஏ.ஜி.எஸ் நிறுவனத்தை.

கதையும், ஒளிப்பதிவும் போதும்
மாற்றான் படத்தினால் மனமாற்றம் அடைந்த ஏ.ஜி.எஸ் நிறுவனம், கதையும், கேமராவும் பண்ணிடுங்க. சூப்பர் ஸ்டார் படத்தை ஷங்கரோ, முருகதாஸோ இயக்கட்டும் என்று கூறி முற்றுப்புள்ளி வைத்துவிட்டனராம்.

அடி பலமா இருக்கேப்பா
இதனால் அதிர்ச்சியடைந்த ஆனந்த், இதெல்லாம் ரஜினிக்கு தெரிந்து நடக்கிறதா, அல்லது, நிறுவனம் எடுத்த முடிவா என்று யோசித்துக் கொண்டிருக்கிறாராம். மாற்றான் கொடுத்த அடியைவிட, இந்த அடி வலிக்குதேப்பா என்று நட்பு வட்டாரங்களில் வருத்தப்பட்டாராம் ஆனந்த்.


Click it and Unblock the Notifications











