»   »  80களின் நடிக - நடிகையர் சந்திப்பு... ஏராளமான நட்சத்திரங்கள் பங்கேற்பு.. ரஜினி, கமல் வரவில்லை!

80களின் நடிக - நடிகையர் சந்திப்பு... ஏராளமான நட்சத்திரங்கள் பங்கேற்பு.. ரஜினி, கமல் வரவில்லை!

Posted By:
Subscribe to Oneindia Tamil

எண்பதுகளின் பிரபல நாயக நாயகியர் சந்திப்பு நேற்று சென்னையில் நடந்தது. இதில் 1980-ல் பிரபலமாக இருந்த நடிகர்-நடிகைகள் பலரும் பங்கேற்று, விருந்துண்டு மகிழ்ந்தனர்.

தமிழ் பட உலகில், 1980 முதல் 1990-ம் ஆண்டு வரை பிரபலமாக இருந்த நடிகர்-நடிகைகள் ஆண்டு தோறும் சந்தித்து தங்கள் நட்பை புதுப்பித்துக் கொள்வது வழக்கம்.

முதன் முதலில் இதனை நடிகை லிஸி தொடங்கி வைத்தார். இந்த ஆண்டுக்கான சந்திப்பு, சென்னை சாந்தோமில் உள்ள லீலா பேலஸ் ஓட்டலில் நடந்தது.

ராதிகா - சரத்குமார்

ராதிகா - சரத்குமார்

தென்னிந்திய நடிகர் சங்க தலைவர் சரத்குமார், அவருடைய மனைவி ராதிகா சரத்குமார் ஆகிய இருவரும் இந்த சந்திப்புக்கான ஏற்பாடுகளைச் செய்து இருந்தார்கள்.

சிவகுமார்-பிரபு

சிவகுமார்-பிரபு

நடிகர்கள் சிவகுமார், பிரபு, ராதாரவி, வாகை சந்திரசேகர், விஜயகுமார், மோகன், சரத்பாபு, சுரேஷ், சரண்ராஜ், ராம்கி, அருண்பாண்டியன், ராஜா, பிரதாப் போத்தன், நாசர், எஸ்.வி.சேகர், சின்னி ஜெயந்த், தியாகு, டெல்லிகணேஷ், ராஜ்குமார், ரவிகுமார், நடிகைகள் ஸ்ரீப்ரியா, லதா, ரேவதி, குஷ்பு, பூர்ணிமா பாக்யராஜ், நதியா, மீனா, ரோஜா, ரேகா, அர்ச்சனா, ரம்யா கிருஷ்ணன், சீதா, மதுபாலா, ஊர்வசி, ரதி அக்னிஹோத்ரி, ரூபினி, லிசி, மேனகா, நிரோஷா, நளினி, அருணா, குயிலி, வடிவுக்கரசி, ஜோதிலட்சுமி, டான்ஸ் மாஸ்டர்கள் புலியூர் சரோஜா, கலா, பின்னணி பாடகி பவதாரணி ஆகியோர் இதில் கலந்து கொண்டார்கள்.

இளம் நடிகர்களும்

இளம் நடிகர்களும்

சிலம்பரசன், தனுஷ், விஜய் சேதுபதி, பிரசன்னா, கணேஷ் வெங்கட்ராம், வைபவ், இமான் அண்ணாச்சி, சங்கீதா, நமீதா, பிந்து மாதவி, நீதுசந்திரா, வேதிகா, ஐஸ்வர்யா, அபிராமி, பாடல் ஆசிரியர் மதன் கார்க்கி ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டார்கள்.

இயக்குநர்கள்

இயக்குநர்கள்

டைரக்டர்கள் பாரதிராஜா, எஸ்.பி.முத்துராமன், பாக்யராஜ், பாண்டியராஜன், ஆர்.சுந்தர்ராஜன், பி.வாசு, ஆர்.வி.உதயகுமார், விக்ரமன், ஹரி, சுந்தர் சி, வெற்றிமாறன், டி.பி.கஜேந்திரன், அரவிந்தராஜ், வசந்த், கஸ்தூரிராஜா, சந்தானபாரதி, மனோபாலா, சமுத்திரக்கனி, ஏ.வெங்கடேஷ், தயாரிப்பாளர்கள் ஏவி.எம்.சரவணன், பஞ்சு அருணாசலம், திருப்பூர் மணி, கேயார், ஜி.தியாகராஜன், டி.சிவா, கே.எஸ்.சீனிவாசன், சித்ராலட்சுமணன், அன்புசெழியன், புஷ்பா கந்தசாமி, வினியோகஸ்தர் திருப்பூர் சுப்பிரமணியம், கவிஞர் சினேகன் ஆகியோரும் நிகழ்ச்சிக்கு வந்திருந்தார்கள்.

ரஜினி - கமல் வரவில்லை

ரஜினி - கமல் வரவில்லை

இந்த ஆண்டு நிகழ்ச்சியில் நிச்சயம் வருவார்கள் என எதிர்ப்பார்க்கப்பட்ட ரஜினியும் கமலும் வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்கப் போய்விட்டதால், இந்த சந்திப்புக்கு வரவில்லை.

English summary
The 80's reunion event has held at Hotel Leela Palace on Thursday and most of the leading stars of 80's attended the event.
Please Wait while comments are loading...