முதல் ஆளாக ஓட்டு போட்ட அஜித், மும்பையில் இருந்து வந்த ரஜினி, வரிசையில் நின்ற விஜய்
Recommended Video
சென்னை: அஜித் தனது மனைவி ஷாலினியுடன் முதல் ஆளாக 7 மணிக்கே ஓட்டு போட்டுவிட்டார்.
தமிழகத்தில் லோக்சபா மற்றும் இடைத்தேர்தல் இன்று நடைபெற்றது. பொதுமக்கள், திரையுலக பிரபலங்கள் என்று பலரும் வாக்களித்தனர். அரசியல் தலைவர்கள் வரிசையில் நின்று வாக்களித்தார்கள்.
இந்நிலையில் திரையுலக பிரபலங்கள் பலரும் காலையிலேயே ஓட்டு போட்டுவிட்டனர்.

தர்பார்
தர்பார் படப்பிடிப்புக்காக மும்பை சென்றிருந்த ரஜினி சென்னை திரும்பி காலையிலேயே ஓட்டு போட்டுவிட்டார். அவர் இன்றே மும்பை திரும்பி செல்லக்கூடும் என்று கூறப்படுகிறது.

அஜித்
அஜித் தனது மனைவி ஷாலினியுடன் திருவான்மியூரில் உள்ள துவக்கப்பள்ளி ஒன்றில் காலை 7 மணிக்கே வாக்களித்தார். அஜித் வரிசையில் நின்று வாக்களிப்பது வழக்கமான ஒன்றாகிவிட்டது.

விஜய்
தளபதி 63 படப்பிடிப்பில் பிசியாக இருக்கும் விஜய் சாலிகிராமத்தில் தனது வாக்கை பதிவு செய்தார். அவர் வரிசையில் மக்களோடு மக்களாக நின்று வாக்களித்தார்.
கார்த்தி
நடிகர் சிவக்குமார் தனது மனைவி, மகள், மகன்கள் சூர்யா, கார்த்தி, மருமகள்கள் ஜோதிகா, ரஞ்சினியுடன் வந்து வாக்களித்தார்.

கமல் ஹாஸன்
மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல் ஹாஸன் தனது மூத்த மகள் ஸ்ருதியுடன் வரிசையில் நின்று வாக்களித்தார்.

விக்ரம் பிரபு
நடிகர் பிரபு தனது மனைவி, மகன் விக்ரம் பிரபுவுடன் வந்து காலையிலேயே ஓட்டு போட்டுவிட்டார்.

அர்ஜுன்
நடிகர் அர்ஜுன் வாக்களித்தபோது எடுத்த புகைப்படம் வெளியாகியுள்ளது. நடிகர்கள் விஜய் ஆண்டனி, ஸ்ரீகாந்த், நடிகைகள் ஆர்த்தி, மீனா ஆகியோரும் வெயில் வருவதற்கு முன்பே வாக்களித்துவிட்டனர்.


Click it and Unblock the Notifications











