»   »  சினிமா நூற்றாண்டு விழா- ரஜினி- கமல் பங்கேற்கும் கேள்வி பதில் நிகழ்ச்சி!

சினிமா நூற்றாண்டு விழா- ரஜினி- கமல் பங்கேற்கும் கேள்வி பதில் நிகழ்ச்சி!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: சென்னையில் இன்று நடக்கும் சினிமா நூற்றாண்டு விழாவில் கேள்வி பதில் நிகழ்ச்சியில் பங்கேற்கிறார்கள் சூப்பர் ரஜினியும் கமல் ஹாஸனும்.

அவர்களிடம் இயக்குநர்கள் பி.வாசு, கே.எஸ்.ரவிகுமார் ஆகியோர் கேள்விகள் கேட்கிறார்கள்.

முதல்வர் ஜெயலலிதா

முதல்வர் ஜெயலலிதா

இந்திய சினிமா நூற்றாண்டு விழா, சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் (சனிக்கிழமை) மாலை 4 மணிக்கு தொடங்குகிறது. விழாவை, முதல்வர் ஜெயலலிதா குத்து விளக்கேற்றி தொடங்கி வைக்கிறார்.

அதைத்தொடர்ந்து, தென்னிந்திய திரைப்பட வர்த்தகசபை தலைவர் கல்யாண் வரவேற்று பேசுகிறார்.

50 பேருக்கு விருது

50 பேருக்கு விருது

இந்திய சினிமாவில் 50 ஆண்டுகளுக்கு மேல் சேவை செய்த பட அதிபர் ஏவி.எம்.சரவணன், நடிகைகள் சரோஜாதேவி, வைஜயந்திமாலா, சாரதா, ஜெயந்தி, குட்டி பத்மினி உள்பட 50 கலைஞர்களுக்கு முதல்வர் ஜெயலலிதா விருது வழங்கி பேசுகிறார்.

மாலை 6 மணிக்கு நடிகர்-நடிகைகளின் கலைநிகழ்ச்சிகள் தொடங்குகிறது.

ரஜினிகாந்த்–கமல்ஹாசன்

ரஜினிகாந்த்–கமல்ஹாசன்

கலைநிகழ்ச்சிகளில், ரஜினிகாந்த்-கமல்ஹாசன் கலந்து கொள்கிறார்கள். இயக்குநர்கள் பி.வாசு, கே.எஸ்.ரவிகுமார் ஆகிய இருவரின் கேள்விகளுக்கு ரஜினிகாந்த், கமல்ஹாசன் இரண்டு பேரும் பதில் அளிக்கிறார்கள்.

முதல்வர் ஜெயலலிதா முன்னிலையில் இந்த கேள்வி பதில் நிகழ்ச்சி இடம்பெறுகிறது.

இந்த நிகழ்ச்சியை ஒளிபரப்பும் உரிமையை ஜெயா டிவி பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

.

.

.

English summary
Superstar Rajinikanth and Kamal Hassan is participating a question - answer session in the centenary celebration of Indian Cinema today evening.
Please Wait while comments are loading...