»   »  கூகுளில்...10 ஆண்டுகளாக ரஜினி, கமலை போட்டிபோட்டு தேடிய இந்தியர்கள்!

கூகுளில்...10 ஆண்டுகளாக ரஜினி, கமலை போட்டிபோட்டு தேடிய இந்தியர்கள்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: 2006 முதல் 2016 வரையிலான 10 ஆண்டுகளில் இந்தியர்கள் அதிகம் தேடிய நடிக,நடிகையரின் பட்டியல் வெளியாகியுள்ளது.

நடிகர் சல்மான் கானும், நடிகை சன்னி லியோனும் இந்தப் பட்டியலில் முதலிடத்தைப் பிடித்துள்ளனர். அதற்கடுத்த இடங்களை அக்ஷய் குமார், அமிதாப் உள்ளிட்ட இந்தி நடிகர்கள் தக்க வைத்துக் கொண்டுள்ளனர்.

கோலிவுட்டில் இருந்து நடிகர் ரஜினி, கமல் இருவர் மட்டும் இடம் பிடித்திருக்கும் இந்தப் பட்டியலின் முழு விவரங்களையும் இங்கே பார்க்கலாம்.

ரஜினி

ரஜினி

இந்தியர்களால் அதிகம் தேடப்பட்ட நடிகர்கள் பட்டியலில் சல்மான் கான் முதலிடம் பிடித்திருக்கிறார். 2 வது மற்றும் 3 வது இடங்களை ஷாரூக்கான், அக்ஷய் குமார் இருவரும் கைப்பற்றியுள்ளனர். 4 வது இடத்தில் அமிதாப் பச்சனும், 5 வது இடத்தில் ரஜினியும் உள்ளனர்.

சன்னி லியோன்

சன்னி லியோன்

நடிகைகளில் சன்னி லியோன் முதலிடத்தைப் பிடித்திருக்கிறார். 2 வது இடத்தில் காத்ரீனா கைப்பும் 3 வது இடத்தில கரீனா கபூரும் இருக்கின்றனர்.

4 இடத்தை காஜல் அகர்வால் தக்க வைத்துக் கொண்டிருக்கிறார். 5 வது இடத்தில் தீபிகா படுகோனே இருக்கிறார்.

கிளாசிக் நடிகர்கள்

கிளாசிக் நடிகர்கள்

இந்தியர்கள் அதிகம் தேடிய கிளாசிக் நடிகர்கள் பட்டியல் 1. அமிதாப் பச்சன் 2.கமல் ஹாசன் 3.ராஜேஷ் கண்ணா 4. மிதுன் சக்கரவர்த்தி 5. ராஜ்குமார்

நடிகைகள் பட்டியல்: 1. ரேகா 2. ஸ்ரீதேவி 3. மதுபாலா 4.ஹேமமாலினி 5. ஜீனத் அமன்.

பாகுபலி

பாகுபலி

இந்தியர்கள் அதிகம் தேடிய படங்கள்: 1. பிகே 2. கஹானி 3. பாகுபலி 4. ஆஷிக் 2 5. தூம் 3. இந்தப் பட்டியலில் தென்னிந்தியப் படமான பாகுபலி 3 வது இடத்தைப் பிடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

English summary
Most Searched Indian Actor, Actress and Movies Listed Here.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil