twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    ரஜினி, கமல்: கார்த்தியின் ஆதரவு யாருக்கு?

    By Siva
    |

    Recommended Video

    அரசியலில் கார்த்தியின் ஆதரவு யாருக்கு ?

    புதுக்கோட்டை: கமல் ஹாஸன், ரஜினிகாந்த் பணம் சம்பாதிக்க அரசியலுக்கு வரவில்லை என்று கார்த்தி தெரிவித்துள்ளார்.

    உலக நாயகன் கமல் ஹாஸன் மற்றும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ஆகியோர் தனிக்கட்சி துவங்கி அரசியலுக்கு வருகிறார்கள். அதிலும் ரஜினி தமிழக சட்டசபை தேர்தலில் அனைத்து தொகுதிகளிலும் போட்டியிட விரும்புகிறார்.

    இந்நிலையில் இது குறித்து கார்த்தி செய்தியாளர்களிடம் கூறியதாவது,

    அரசியல்

    அரசியல்

    விஷால் அரசியல் கட்சி எதுவும் துவங்கவில்லை. அது குறித்து அவர் பேசவும் இல்லை. அவர் தனி மனிதராக தமிழக மக்களுக்கு உதவ விரும்பினார். அதனால் தேர்தலில் போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்தார்.

    புரிந்தது

    புரிந்தது

    அரசியலில் உள்ள கஷ்டங்கள் விஷாலுக்கு புரிந்துவிட்டது. அவர் யாருக்கும் பயப்படாமல் வேட்புமனு தாக்கல் செய்தார். அவருக்கு டெபாசிட் பணம் திரும்பிக் கிடைக்காவிட்டாலும், போட்டியிட முன்வந்ததை பாராட்ட வேண்டும்.

    கமல்

    கமல்

    ரஜினி, கமல் விஷயத்தில் சில மாதங்கள் பொறுத்திருப்போம். அவசரப்பட வேண்டாம். அவர்கள் தங்களின் திட்டங்களை அறிவிக்கட்டும். அதன் பிறகு யாருக்கு ஆதரவு என்று முடிவு செய்வோம்.

    மக்கள்

    மக்கள்

    ரஜினியும், கமலும் லெஜண்டுகள். அவர்கள் சினிமாவில் நிறைய சம்பாதித்துவிட்டார்கள். அதனால் அவர்கள் பணம் சம்பாதிக்க அரசியலுக்கு வரவில்லை. தங்களை வாழ வைக்கும் தமிழக மக்களுக்கு நல்லது செய்ய விரும்புகிறார்கள். அவர்கள் எங்கும் ஓடிவிட மாட்டார்கள் என்றார் கார்த்தி.

    English summary
    Karthi said that legends Rajinikanth and Kamal Haasan are not coming to politics to earn money as they have earned more in cinema. He appreciated his good friend Vishal for his guts.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X