Rajini Kamal: ஆதிக் ரவிச்சந்திரன் - ஐஸ்வர்யா தம்பதியை வாழ்த்திய ரஜினி, கமல்... நெகிழ்ந்துபோன பிரபு

சென்னை: இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் திருமணம் நேற்று பிரம்மாண்டமாக நடைபெற்றது. அதில், சூப்பர் ஸ்டார் ரஜினி, உலக நாயகன் கமல்ஹாசன் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தினர். அப்போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.

பிரபு வீட்டு திருமணத்தில் ரஜினி, கமல்: கோலிவுட்டின் இளம் இயக்குநர்களில் ஒருவரான ஆதிக் ரவிச்சந்திரன், அடுத்து அஜித்துடன் இணைகிறார். ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் சமீபத்தில் வெளியான மார்க் ஆண்டனி, சூப்பர் டூப்பர் ஹிட்டானது. பாக்ஸ் ஆபிஸிலும் 100 கோடி ரூபாய் கலெக்‌ஷன் செய்த இந்தப் படம், ஓடிடியிலும் சக்கைப் போடு போட்டது. இதனால் அஜித்தின் ஏகே 63 படத்தை இயக்கும் வாய்ப்பு கிடைத்துள்ளது.

 Rajini Kamal: Rajini and Kamal greetings to Adhik Ravichandran and Prabhus daughter Aishwarya wedding

இந்நிலையில், ஆதிக் ரவிச்சந்திரன் இளைய திலகம் பிரபுவின் மகள் ஐஸ்வர்யாவை திருமணம் செய்துகொண்டார். இதன் மூலம் மறைந்த நடிகர் திலகம் சிவாஜி வீட்டு மருமகனாகியுள்ளார் ஆதிக் ரவிச்சந்திரன். பிரபு மகள் ஐஸ்வர்ய ஏற்கனவே திருமணமாகி விவாகரத்தானவர் என்பது குறிப்பிடத்தக்கது. ஆதிக் ரவிச்சந்திரனும் ஐஸ்வர்யாவும் நண்பர்களாக பழகி வந்த நிலையில், அது காதலாக மாறி இருவீட்டாரின் சம்மதத்துடன் திருமணம் நடைபெற்றது.

 Rajini Kamal: Rajini and Kamal greetings to Adhik Ravichandran and Prabhus daughter Aishwarya wedding

ஆதிக் ரவிச்சந்திரன் திருமணத்தில் விஷால், லெஜண்ட் சரவணன், அஜித்தின் மனைவி ஷாலினி, அவர்களது மகள் ஆகியோர் பங்கேற்றிருந்தனர். இந்த வரிசையில் சூப்பர் ஸ்டார் ரஜினி, உலக நாயகன் கமல்ஹாசன் ஆகியோரும் ஆதிக் ரவிச்சந்திரன் - ஐஸ்வர்யா திருமண நிகழ்ச்சியில் பங்கேற்றனர். ரஜினி, கமல் இருவருமே சிவாஜி, பிரபு குடும்பத்துக்கு ரொம்ப நெருக்கமானவர்கள் என்பது அனைவரும் அறிந்ததே. இதனால் அவர்களும் பிரபு வீட்டு சுப நிகழ்ச்சியில் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தியுள்ளனர்.

 Rajini Kamal: Rajini and Kamal greetings to Adhik Ravichandran and Prabhus daughter Aishwarya wedding

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், உலகநாயகன் கமல்ஹாசன் இருவரும் திருமண நிகழ்ச்சிக்கு சென்றிருந்ததை பார்த்த பிரபு அப்படியே நெகிழ்ந்துபோனார். ரஜினி, கமல் இருவரையும் கையை பிடித்தபடி பிரபு அழைத்துச் சென்று மணமக்களை வாழ்த்த வைத்தார். சூப்பர் ஸ்டார் ரஜினி மணமக்களுக்கு அன்பளிப்பு வழங்கி ஆசிர்வாதம் செய்ய, கமல்ஹாசனும் தனது வாழ்த்துகளை தெரிவித்துக்கொண்டார்.

 Rajini Kamal: Rajini and Kamal greetings to Adhik Ravichandran and Prabhus daughter Aishwarya wedding

ஆதிக் ரவிச்சந்திரன் - ஐஸ்வர்யா திருமணத்தில் ரஜினியும் கமலும் கலந்துகொண்ட புகைப்படங்கள் வைரலாகி வருகின்றன. ரஜினி, கமல் இருவரும் சிவாஜி, பிரபுவுடன் நடித்துள்ளனர். ரஜினி, கமல் இருவருக்கும் தம்பி அல்லது நண்பன் கேரக்டரில் நடித்துள்ளார் பிரபு. சினிமாவில் மட்டுமின்றி நிஜ வாழ்விலும் இவர்களது நட்பு ரசிகர்களை நெகிழச் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X