Rajini Kamal: 21 வருடங்களுக்குப் பிறகு இணைந்த ரஜினி, கமல்... லைகா வெளியிட்ட சர்ப்ரைஸ் போட்டோஸ்

சென்னை: ரஜினி, கமல் இருவரும் கோலிவுட்டின் உச்ச நட்சத்திரங்களாக வலம் வருகின்றனர்.

இருவருமே அடுத்தடுத்து ஒன்றுக்கும் மேற்பட்ட படங்களில் நடித்து வருவது குறிப்பிடத்தக்கது.

 Rajini Kamal: Rajini and Kamal met at the same shooting spot After 21 years

இந்நிலையில், சூப்பர் ஸ்டார் ரஜினியும் உலகநாயகன் கமல்ஹாசனும் திடீரென சந்தித்துக்கொண்ட புகைப்படங்கள் வைரலாகி வருகின்றன.

லைகா நிறுவனம் வெளியிட்டுள்ள இந்த புகைப்படங்களை லைகா நிறுவனம் வெளியிட்டுள்ளது ஹைப்பை எகிற வைத்துள்ளது.

ஒரே ஸ்பாட்டில் ரஜினி, கமல்
சூப்பர் ஸ்டார் ரஜினியும் உலகநாயகன் கமல்ஹாசனும் நெருங்கிய நண்பர்கள். ஆரம்ப காலங்களில் இருவரும் இணைந்து 20க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளனர். இயக்குநர் கே பாலச்சந்தரின் பயிற்சிப் பட்டறையில் இருந்தே இருவரும் நல்ல நண்பர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. ஒரு கட்டத்தில் இனி சேர்ந்து நடிக்க வேண்டாம் என கமல் ரஜினியிடம் சொன்னது முதல், இருவரும் தனியாக நடிக்கத் தொடங்கினர்.

 Rajini Kamal: Rajini and Kamal met at the same shooting spot After 21 years

படங்களில் இணைந்து நடிக்கவில்லை என்றாலும், அன்று முதல் இன்று வரை இருவரது நட்பிலும் கொஞ்சம் கூட விரிசல் ஏற்படவில்லை. கடந்தாண்டு நடைபெற்ற பொன்னியின் செல்வன் இசை வெளியீட்டு விழாவில் ரஜினியும் கமலும் கலந்துகொண்டனர். அப்போது அவர்களது நட்பு குறித்து இருவருமே சிலாகித்து பேசிக் கொண்டனர். இந்நிலையில், தற்போது இருவரும் ஒன்றாக எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் வைரலாகி வருகின்றன.

சூப்பர் ஸ்டார் ரஜினியின் தலைவர் 170, இந்தியன் 2 படங்களை லைகா புரொடக்சன்ஸ் தயாரித்து வருகிறது. இந்நிலையில், தலைவர் 170 படப்பிடிப்பும், இந்தியன் 2 பட ஷூட்டிங்கும் சென்னையில் ஒரே அரங்கில் நடைபெற்று வருகிறது. இதனையறிந்த ரஜினியும் கமல்ஹாசனும் ஷூட்டிங் ஸ்பாட்டில் சந்தித்துக்கொண்டனர். அப்போது இருவரும் ஒருவரையொருவர் அரவணைத்துக்கொண்டது அங்கிருந்தவர்களை நெகிழ்ச்சியில் ஆழ்த்தியது.

 Rajini Kamal: Rajini and Kamal met at the same shooting spot After 21 years

பிரசாத் ஸ்டூடியோவில் நடைபெற்ற இந்த சந்திப்பில் எடுக்கப்பட்ட புகைப்படங்களை லைகா நிறுவனம் வெளியிட்டுள்ளது. சுமார் 21 ஆண்டுகளுக்குப் பின்னர் ஒரே ஷூட்டிங் ஸ்பாட்டில் ரஜினியும் கமலும் சந்தித்துக்கொண்டது குறிப்பிடத்தக்கது. பிரசாத் ஸ்டுடியோவில் இந்தியன் 2 படப்பிடிப்பு நடப்பதை அறிந்த சூப்பர் ஸ்டார், கமல்ஹாசனைச் சந்திக்க வருவதாகத் தெரிவித்துள்ளார். அதேபோல், கமலும் "என் நண்பனைச் சந்திக்க நானே வருகிறேன்" என காலை 8 மணிக்கே தலைவர் 170 ஷூட்டிங் ஸ்பாட்டிற்கு விசிட் அடித்துள்ளார்.

அதன்படி, சூப்பர் ஸ்டாருக்கு சர்ப்ரைஸ் கொடுத்த கமலை ரஜினி கட்டித் தழுவிக் கொண்டார். முன்னதாக பாபா, பஞ்ச தந்திரம் படங்களின் ஷூட்டிங் இதே இடத்தில் நடைபெற்றதாம். அப்போது இருவரும் சந்தித்துக் கொண்டதாகவும், அதன்பின்னர் தற்போது தான் சந்திக்க முடிந்ததாகவும் அவர்கள் பேசிக்கொண்டனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X