ரஜினியும், கமலும் அரசியலுக்கு வந்து இதைச் செய்ய வேண்டும்! - பிரபல நடிகர்
சென்னை : வெற்றிமாறன் இயக்கிய 'பொல்லாதவன்' படத்தின் மூலம் தமிழுக்கு வந்தவர் கன்னட நடிகர் கிஷோர். அதன்பின் 'ஆடுகளம் படத்தில் சிறப்பாக நடித்து ரசிகர்கள் மனதில் இடம்பிடித்தார்.
தற்போது இவர் போலீசாக நடித்துள்ள 'யார் இவன்' படம் வெளியாகியிருப்பதை அடுத்து இவர் நாயகனாக நடித்துள்ள 'களத்தூர் கிராமம்' திரைப்படம் விரைவில் வெளியாக உள்ளது.

இந்நிலையில், கிஷோர் ரஜினி மற்றும் கமலின் அரசியல் பிரவேசம் குறித்து அவர் பேசியிருக்கிறார். 'ரஜினி, கமல் இருவரும் நல்ல நடிகர்கள். சினிமா மூலம் மக்களைச் சென்றடைந்தவர்கள். இப்போது சினிமாவில் இருந்து கொண்டே மக்களுக்கு நன்மை செய்து வருகிறார்கள்.

எதிர்காலத்தில் அரசியலுக்கு வந்து மக்களுக்கு நல்லது செய்ய விரும்புகிறார்கள். இது வரவேற்க வேண்டிய விஷயம்தான். கமல், அரசியலுக்கு ஏற்கனவே வந்து விட்டதாக சொல்லிவிட்டார். ரஜினியும் வர வேண்டும்.
ரஜினியும், கமலும் நேரடி அரசியலுக்கு வந்து தமிழ் மக்களுக்கு நல்லது செய்ய வேண்டும் என்பதே எனது ஆசை' எனக் கூறியிருக்கிறார் கிஷோர். கிஷோர், ரஜினியுடன் 'கபாலி' படத்திலும், கமலுடன் 'தூங்காவனம்' படத்திலும் நடித்திருப்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











