Rajini Kamal: கமல் மனசு ரஜினிக்கு வரவே வராது... ரசிகர்களை கூட அவர் கண்டுகொள்வதில்லை
சென்னை: சூப்பர் ஸ்டார் ரஜினியின் ஜெயிலர் திரைப்படம் வெளியாகி வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. இந்தப் படம் இதுவரை 550 கோடி வசூலித்துள்ளதாக பாக்ஸ் ஆபிஸ் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
கடந்தாண்டு வெளியான கமலின் விக்ரம் திரைப்படமும் 500 கோடிகளுக்கு மேல் வசூலித்து சாதனை படைத்தது. இந்நிலையில், கமலின் மனசு ரஜினிக்கு வரவே வராது என வலைப்பேச்சு அந்தணன் விமர்சித்துள்ளது வைரலாகி வருகிறது.

கமல் மனசு ரஜினிக்கு வராது: கடந்தாண்டு வெளியான திரைப்படம் கமல்ஹாசனுக்கு வெறித்தனமான கம்பேக் கொடுத்தது. அதேபோல், சூப்பர் ஸ்டார் ரஜினியும் ஜெயிலர் மூலம் கம்பேக் கொடுத்துள்ளார். கமலின் விக்ரம் பாக்ஸ் ஆபிஸில் 600 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்ததோடு, திரையரங்குகளில் 100 நாட்கள் ஓடி சாதனை படைத்தது. இந்த வெற்றியை கமல் ரொம்பவே உற்சாகமாக கொண்டாடித் தீர்த்தார்.
சினிமா செய்தியாளர்களுக்கு விருந்து, விக்ரம் படக்குழுவினருக்கு விருந்து, விநியோகஸ்தர்களுக்கும் திரையரங்க உரிமையாளர்களுக்கும் தனியாக விருந்து என அதகளம் செய்தார் கமல். இதனால் விக்ரம் படத்தின் வெற்றிவிழா கிட்டத்தட்ட ஒரு மாதம் வரை தொடர்ச்சியாக நடைபெற்றது. இறுதியாக 100வது நாள் வெற்றிக் கொண்டாட்டத்தையும் பிரம்மாண்டமாக நடத்தி, படக்குழுவினருக்கு சீல்ட் கொடுத்து அசத்தினார்.
இதனை குறிப்பிட்டுள்ள வலைப்பேச்சு அந்தணன், கமலின் இந்த மனசு ரஜினிக்கு வரவே வராது என விமர்சித்துள்ளார். அதாவது சூப்பர் ஸ்டார் ரஜினி, நெல்சன், சன் பிக்சர்ஸ், அனிருத் என மெகா கூட்டணியில் உருவான ஜெயிலர் கடந்த வாரம் 10ம் தேதி ரிலீஸானது. வழக்கமாக ரஜினி படத்திற்கு இருக்கும் ஓபனிங் ஜெயிலருக்கும் கிடைத்தது. அதன்படி முதல் வாரம் உலகம் முழுவதும் 375 கோடி ரூபாய் வரை வசூலித்த ஜெயிலர், இதுவரை மொத்தம் 550 கோடி கலெக்ஷன் செய்துள்ளதாக சொல்லப்படுகிறது.
ஆனாலும் இதுவரை ஜெயிலர் படக்குழுவினருக்கு எந்தவொரு சர்ப்ரைஸ்ஸும் கிடைக்கவில்லை. முதல் வாரம் நடைபெற்ற சக்சஸ் மீட்டில், இயக்குநர் நெல்சன், வசந்த் ரவி, ரெடின் கிங்ஸ்லி, மிர்ணா மேனன், பாடலாசிரியர் சூப்பர் சுப்பு உள்ளிட்ட ஒருசிலரே கலந்துகொண்டனர். அப்போதும் கூட பெரிதாக விருந்து நிகழ்ச்சிகள் ஏதும் நடைபெறவில்லை. ஜெயிலர் வெற்றிக்கு நன்றி சொல்வதாக மட்டுமே அமைந்தது.
இதனை குறிப்பிட்டுள்ள வலைப்பேச்சு அந்தணன், விக்ரம் படத்தின் வெற்றியை கமல் கொண்டாடியதை போல, ரஜினியும் ஜெயிலர் வெற்றியை படக்குழுவினருக்கு விருந்து கொடுத்து கொண்டாடியிருக்க வேண்டும். சினிமாவில் சம்பாதித்த எல்லாவற்றையும் சினிமாவிலேயே செலவு செய்தவர் கமல். இந்த மனசு சூப்பர் ஸ்டார் ரஜினிக்கு வரவே வராது. தனது மகள்களின் திருமணத்திற்குக் கூட ரசிகர்களுக்கு விருந்து வைப்பதாக சொல்லி ஏமாற்றிவிட்டார்.
இப்போது ஜெயிலர் படக்குழுவினர் அனைவரும் ரஜினி விருந்து வைப்பார் என எதிர்பார்த்துள்ளனர். இப்போதாவது ரஜினி, கமல் மாதிரி நடந்துகொள்வாரா என தெரியவில்லை என்றுள்ளார். விக்ரம் படத்தின் வெற்றியை பாராட்டி லோகேஷ் கனகராஜ்ஜுக்கு லம்போகினி கார், உதவி இயக்குநர்கள் பைக், சூர்யாவுக்கு ரோலக்ஸ் வாட்ச் என பல அன்பளிப்புகள் கொடுத்து அசத்தியவர் கமல் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், வலைப்பேச்சு அந்தணின் இந்த வீடியோவை கமல் ரசிகர்கள் ட்ரெண்ட் செய்து வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











