அரசியல் கதை.. தீபாவளிக்கு பின் ஷூட்டிங்.. அடுத்த படத்திற்கு ரஜினிகாந்த் ரெடி.. புது அப்டேட்!
நடிகர் ரஜினிகாந்த் நடிக்கும் அடுத்த படத்தில் அரசியல் தூக்கலாக இருக்கும் என்று கூறுகிறார்கள்.
Recommended Video
சென்னை: நடிகர் ரஜினிகாந்த் நடிக்கும் அடுத்த படத்தில் அரசியல் தூக்கலாக இருக்கும் என்று கூறுகிறார்கள்.
நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில், ஏஆர் முருகதாஸ் இயக்கத்தில் தர்பார் படம் தீவிரமாக தயாராகி வருகிறது.தர்பார் படத்தில் நடிகர் ரஜினிகாந்த் போலீஸ் கதாபாத்திரத்தில் நடிக்கிறார் .
இந்த படத்தின் படப்பிடிப்பு மொத்தமாக முடிந்துவிட்டது. வரும் பொங்கலுக்கு இந்த படம் வெளியாக உள்ளது.

எப்படி படம்
இந்த நிலையில் ரஜினிகாந்த் நடிக்கும் அடுத்த படத்தை இயக்குனர் சிவா இயக்குகிறார். வரிசையாக அஜித் உடன் 4 படங்களை சிவா இயக்கினார். இவர் சூர்யாவுடன் படம் இயக்குவதாக இருந்தது. ஆனால் தற்போது ரஜினியுடன் இணைந்துள்ளார்.

என்ன சந்திப்பு
இந்த நிலையில் ரஜினி நேற்று சிவாவை சந்தித்துள்ளார். போயஸ் கார்டனில் உள்ள ரஜினி வீட்டில் இந்த சந்திப்பு நடந்துள்ளது. ரஜினியிடம் சிவா இரண்டு கதைகளை கூறி உள்ளார். இதில் ரஜினி ஒரு கதைக்கு ஓகே சொன்னதாக கூறப்படுகிறது.

அரசியல் கதை
இந்த கதை அரசியல் சார்ந்து இருக்கும். தமிழக அரசியலை மையமாக வைத்து படம் இருக்கும். தேர்தல் தொடர்பான காட்சிகள் அதிகம் இருக்கும் என்று கூறுகிறார்கள், என்று தகவல்கள் வெளியாகி உள்ளது.

எப்போது
இந்த படத்தின் படப்பிடிப்பு தீபாவளிக்கு பிறகு தொடங்க உள்ளது. சரியாக சொல்ல வேண்டும் என்றால் 20 நாட்களில் படப்பிடிப்பு தொடங்க உள்ளது. அடுத்த மே மாதம் படத்தின் ரிலீஸை எதிர்பார்க்கலாம் என்று கூறுகிறார்கள்.


Click it and Unblock the Notifications











