Rajini Kapil Dev: சூப்பர் ஸ்டார் Vs கிரிக்கெட் கிங்... ரஜினி கபில்தேவ் சந்திப்பின் பின்னணி என்ன?

சென்னை: சூப்பர் ஸ்டார் ரஜினியின் ஜெயிலர், லால் சலாம் படங்கள் அடுத்தடுத்து வெளியாகவுள்ளன.

இதனைத் தொடர்ந்து ஞானவேல் இயக்கத்தில் தலைவர் 170, லோகேஷ் இயக்கும் தலைவர் 171 படங்களில் நடிக்கவுள்ளார்.

இந்நிலையில், முன்னாள் கிரிக்கெட் வீரர் கபில் தேவ் சூப்பர் ஸ்டார் ரஜினியை நேரில் சந்தித்துள்ளார்.

அப்போது இருவரும் எடுத்துக்கொண்ட போட்டோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றன.

 Rajini Kapil Dev: Superstar Rajinikanth met with legendary cricketer Kapil Dev

ரஜினிகாந்த் - கபில்தேவ் சந்திப்பு:சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ஜெயிலர் படத்தைத் தொடர்ந்து லால் சலாம் படப்பிடிப்பில் பிஸியாகிவிட்டார். நெல்சன் இயக்கும் ஜெயிலர் ஆகஸ்ட் 10ம் தேதி வெளியாகவுள்ள நிலையில், லால் சலாம் படத்தின் ரிலீஸ் தேதியும் விரைவில் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்தப் படத்தின் படப்பிடிப்புக்காக ரஜினி சில தினங்களுக்கு முன்னர் மும்பை சென்று வந்தார்.

இந்நிலையில், விரைவில் தலைவர் 170 படத்தின் படப்பிடிப்பும் தொடங்கவுள்ளதாக சொல்லப்படுகிறது. அதேபோல், தலைவர் 171 படம் பற்றிய தகவல்களும் அடுத்தடுத்து வெளியாகி வருகின்றன. அதன்படி, இந்தப் படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கவுள்ளதாகவும், இதுதான் ரஜினியின் கடைசிப் படமாக இருக்கலாம் எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும், இதுகுறித்து அபிஸியல் அப்டேட் விரைவில் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில், சூப்பர் ஸ்டார் ரஜினியும் முன்னாள் கிரிக்கெட் வீரர் கபில் தேவும் திடீரென சந்தித்துக்கொண்டனர். இந்தியாவுக்கு முதல் உலகக் கோப்பையை வென்று வந்த கபில் தேவ், இந்திய கிரிக்கெட்டின் கிங் என ரசிகர்களால் அழைக்கப்படுவதுண்டு. தற்போது கிரிக்கெட் ரசிகர்களால் கொண்டாடப்படும் ஐபிஎல் கபில்தேவின் ஐடியாவில் உருவானது தான் என்பது குறிப்பிடத்தக்கது.

 Rajini Kapil Dev: Superstar Rajinikanth met with legendary cricketer Kapil Dev

தற்போதும் விளம்பரங்களில் பிஸியாக நடித்து வரும் கபில் தேவ், அடிக்கடி பல்துறை சார்ந்த பிரபலங்களையும் சந்தித்து வருகிறார். அந்த வரிசையில் திடீரென சூப்பர் ஸ்டார் ரஜினியையும் சந்தித்து ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ் கொடுத்துள்ளார். ரஜினியை சந்தித்தபோது அவருடன் எடுத்துக் கொண்ட போட்டோவை தனது இன்ஸ்டா ஸ்டோரியிலும் ஷேர் செய்துள்ளார் கபில் தேவ். ஆனாலும், இருவரும் சந்தித்ததன் பின்னணி குறித்து இதுவரை எந்த தகவலும் வெளியாகவில்லை.

சூப்பர் ஸ்டார் ரஜினி வெள்ளை நிற டீ-ஷர்ட்டிலும் கபில் தேவ் நேவி ப்ளூ டீ-ஷர்ட்டும் அணிந்து செம்ம கம்பீரமாக நிற்கின்றனர். இந்த புகைப்படம் டிவிட்டர் உட்பட சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அறுபது வயதை கடந்த இருவரும் சிங்கங்களை போல கெத்தாக நிற்பது ரசிகர்களை சிலிர்க்க வைத்துள்ளது. மேலும், இந்த போட்டோவை ரஜினிகாந்த் என்ற ஹேஷ்டேக்கிலும் ரசிகர்கள் ட்ரெண்ட் செய்து வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X