ரஜினி - கார்த்திக் சுப்பராஜ் படம்... ஜூனில் தொடங்குகிறது!
Recommended Video

கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்கும் புதிய படம் வரும் ஜூன் மாதத்தில் தொடங்கும் என தகவல் வெளியாகியுள்ளது.
ரஜினிகாந்த் தற்போது அமெரிக்காவில் தங்கியுள்ளார். மே முதல் வாரத்தில் அவர் சென்னை திரும்புவார் எனக் கூறப்படுகிறது.

வந்த கையோடு தனது மக்கள் மன்ற நிர்வாகிகளைச் சந்திக்கும் ரஜினி, மாநில அளவிலான பொறுப்புகளுக்கு நிர்வாகிகளை அறிவிக்கவிருக்கிறார். இதற்கு பொருத்தமான நபர்களையும் அவர் தேர்வு செய்துவிட்டதாகத் தெரிகிறது.
அதன் பிறகு மாவட்ட நிர்வாகிகளை மொத்தமாகச் சந்திக்கும் ரஜினி, கட்சி அறிவிப்பு குறித்துப் பேசுவார் என்கிறார்கள்.
மே மாதம் முழுக்க கட்சிப் பணிகளில் கவனம் செலுத்தும் ரஜினி, ஜூன் மாதத்திலிருந்து தொடர்ந்து 40 நாட்கள் கார்த்திக் சுப்பராஜ் படத்தில் நடிக்கவிருக்கிறார்.
சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் இந்தப் படத்துக்கு, அனிருத் இசையமைக்கிறார். இந்தப் படமும் முழுக்க முழுக்க ஆக்ஷனை மையப்படுத்தி உருவாகவிருக்கிறது.
இதுகுறித்து இயக்குநர் கார்த்திக் சுப்பராஜிடம் கேட்டபோது, "ஸ்க்ரிப்ட் பணிகளில் தீவிரமாக உள்ளோம். ரஜினி சார் வந்ததும் ஷூட்டிங் குறித்த அதிகாரப்பூர்வ தகவலை வெளியிடுவோம். மற்ற நடிகர் நடிகைகள் பற்றிய விவரம் விரைவில் வெயிடப்படும்," என்றார்,


Click it and Unblock the Notifications











