வெளியானது ரஜினியின் கோச்சடையான் டீசர்... 24 மணி நேரத்துக்குள் 9 லட்சம் பார்வையாளர்கள்!

By Shankar

சென்னை: ரசிகர்கள் ஆவலுடன் எதிர்ப்பார்த்துக் கொண்டிருந்த சூப்பர் ஸ்டார் ரஜினியின் கோச்சடையான் முதல் டீசர் நேற்று பிற்பகல் யுட்யூபில் வெளியிடப்பட்டது.

டீசர் வெளியான சில மணி நேரங்களில் அதனை 9 லட்சம் பார்வையாளர்கள் பார்த்துள்ளனர். 24 மணி நேரத்துக்குள் இது ஒரு மில்லியனைத் தாண்டிவிடும் என்பதால் இயக்குநர் சவுந்தர்யா ரஜினிகாந்த் மிகுந்த சந்தோஷத்தில் உள்ளார்.

இந்தியாவின் முதல் மோஷன் கேப்சரிங் 3டி படம் என்ற பெருமையுடன் வெளியாகும் படம் கோச்சடையான்.

ராணாவுக்கு பதில்

ராணாவுக்கு பதில்

எந்திரனுக்குப் பிறகு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கவிருந்த படம் ராணா. ஆனால் படம் தொடங்கிய நாளன்றே ரஜினிக்கு உடல்நிலை பாதிக்க, அந்தப் படம் தள்ளிப் போடப்பட்டது. ரஜினி உடல்நிலை சீரடைந்து சென்னை திரும்பிய பிறகு, ராணாவுக்கு பதில் கோச்சடையானை அறிவித்தார்கள்.

3 ஆண்டுகள் இடைவெளி

3 ஆண்டுகள் இடைவெளி

எந்திரன் வெளியாகி கிட்டத்தட்ட 3 ஆண்டுகள் கடந்த நிலையில் கோச்சடையான் வருவதால், இந்தப் படம் குறித்த சின்னச் சின்ன செய்திகள், படங்களைக் கூட ரசிகர்கள் கொண்டாடி வந்தனர். ஆனால் கடந்த 3 மாதங்களாக படம் குறித்து எதையும் தெரிவிக்காமல் அமைதி காத்து வந்தார் சவுந்தர்யா.

டீசர்

டீசர்

இந்த நிலையில், திடீரென கடந்த வாரம் கோச்சடையான் டீசர் குறித்து அறிவிப்பு வெளியிட்டார். 9-ம் தேதி பிள்ளையார் சதுர்த்தி தினத்தன்று யுட்யூபில் வெளியாகும் என தெரிவிக்கப்பட்டதும் ரசிகர்கள் பெரும் ஆவலுடன் காத்திருந்தனர். நேற்று பிற்பகலில் முதல் அதிகாரப்பூர்வ ட்ரைலர் வெளியிடப்பட்டது.

ரசிகர்கள் கொண்டாட்டம்

ரசிகர்கள் கொண்டாட்டம்

இந்த டீசரை சில ரசிகர்கள் திரையரங்கில் அகன்ற திரையில் வெளியிட்டு பார்த்து மகிழ்ந்தனர். சமூக வலைத் தளங்களான யுட்யூப், ட்விட்டர், பேஸ்புக் என எங்கும் கோச்சடையான் டீசர் பற்றிய பேச்சுதான்.

24 மணிநேரத்துக்குள் 1 மில்லியன்

24 மணிநேரத்துக்குள் 1 மில்லியன்

டீசர் வெளியான 16 மணி நேரத்துக்குள் 9 லட்சம் பார்வையாளர்கள் அதைப் பார்த்துள்ளனர். 24 மணி நேரத்துக்குள் 1 மில்லியனைக் கடந்துவிடும் என்பதால், சவுந்தர்யா பெரும் மகிழ்ச்சியில் உள்ளார்.

கேஎஸ் ரவிக்குமார்

கேஎஸ் ரவிக்குமார்

இந்தப் படத்துக்கு கதை திரைக்கதை வசனம் எழுதியதோடு, ரஜினி நடித்த காட்சிகளை சவுந்தர்யா இயக்கியபோது, மேற்பார்வையாளராகவும் பணியாற்றியுள்ளார் கே எஸ் ரவிக்குமார். படத்தில் ரஜினி லைவாக வரும் காட்சிகள் உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X