எம்ஜிஆர் நடிக்கும் கிழக்கு ஆப்பிரிக்காவில் ராஜூ... தொடங்கி வைக்கிறார் ரஜினிகாந்த்!

By Shankar

சென்னை: புரட்சித் தலைவர், மக்கள் திலகம் எனப் போற்றப்படும் எம்ஜிஆர் மறைந்த பிறகும் கதாநாயகனாகத் தோன்றும் புதிய படம் கிழக்கு ஆப்ரிக்காவில் ராஜு. இந்தப் படத்தை இன்று தலைமையேற்றுத் தொடங்கி வைக்கிறார் ரஜினிகாந்த்.

எம்ஜிஆர் இயக்கம் மற்றும் தயாரிப்பில் வெளிவந்து மிகப் பெரிய வெற்றியைப் பெற்ற படம் உலகம் சுற்றும் வாலிபன். இந்தப் படத்தின் வெற்றிக்கு இணையாக இன்னொரு படத்தைச் சொல்ல முடியாது. அப்படியொரு மகத்தான சாதனைக்குச் சொந்தமான படம் உலகம் சுற்றும் வாலிபன்.

கிழக்கு ஆப்பிரிக்காவில் ராஜூ

கிழக்கு ஆப்பிரிக்காவில் ராஜூ

இந்தப் படத்தின் க்ளைமாக்ஸ் முடிந்ததும், இதன் தொடர்ச்சியாக கிழக்கு ஆப்ரிக்காவில் ராஜு என்ற பிரமாண்ட படத்தை எடுக்கப் போவதாக எம்ஜிஆர் அறிவிப்பு வெளியிட்டிருந்தார். ஆனால் பல்வேறு காரணங்களால் அந்த முயற்சி நடக்கவில்லை. எம்ஜிஆரும் முதல்வராகிவிட்டதால் படம் இயக்கும் எண்ணத்தையும் கைவிட்டுவிட்டார்.

மீண்டும் எம்ஜிஆர்

மீண்டும் எம்ஜிஆர்

இந்தப் படம் அறிவிக்கப்பட்டு 45 ஆண்டுகளுக்குப் பிறகு இப்போது மீண்டும் படமாகிறது. இந்தப் படத்தில் மறைந்த எம்ஜிஆரே நாயகனாக நடிக்கிறார். எப்படியெனில், அமெரிக்காவில் அனிமேஷன் தொழில் நுட்பத்தின் மூலம் எம்.ஜி.ஆரையே நடிக்க வைப்பதுபோல, இந்த படம் தயாரிக்கப்பட இருக்கிறது.

ஐசரி வேலன்

ஐசரி வேலன்

இந்த படத்தின் கதாநாயகி யார்? என்பது குறித்து அடுத்த ஒருமாதத்தில் ஐசரி கணேஷ் அறிவிக்க இருக்கிறார். இந்த படத்தில் நகைச்சுவை பாத்திரத்தில் ஐசரி கணேஷின் தகப்பனாரும், எம்.ஜி.ஆர். நடித்த பல படங்களில் நகைச்சுவை வேடத்தில் நடித்தவருமான மறைந்த ஐசரி வேலன் தோன்றுகிறார்.

ஐசரி கணேஷ்

ஐசரி கணேஷ்

வேல்ஸ் பல்கலைக்கழக வேந்தரும், மறைந்த நடிகர் ஐசரி வேலனின் மகனுமான ஐசரி கணேஷ் தயாரிக்க திட்டமிட்டுள்ளார். இந்தப் படத்தின் கதை, திரைக்கதை, இயக்கம் பொறுப்பை எம் அருள்மூர்த்தி ஏற்றுக்கொண்டிருக்கிறார். கவிஞர் வைரமுத்து பாடல்கள் எழுதுகிறார். டி இமான் இசையமைக்கிறார்.

ரஜினிகாந்த்

ரஜினிகாந்த்

படத்தின் தொடக்க விழா சத்யா ஸ்டுடியோ வளாகத்தில் இன்று மாலை நடக்கிறது. நடிகர் ரஜினிகாந்த் இந்த விழாவுக்கு தலைமை ஏற்று படத்தைத் தொடங்கி வைக்கிறார்.

101வது பிறந்த நாளில்

101வது பிறந்த நாளில்

எம்.ஜி.ஆரின் 101-வது பிறந்த நாளான இன்று இந்த படத்தின் தொடக்கவிழா நடக்கிறது. 102-வது பிறந்த நாளான 17.1.2019 அன்று இந்த படம் உலகம் முழுவதிலும் வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X