நண்பன் அம்பரீஷின் உடலை பார்த்து அழுத ரஜினி: வீடியோ
Recommended Video

பெங்களூர்: நண்பன் அம்பரீஷ் உயிரற்று கிடப்பதை பார்த்த ரஜினி துக்கம் தாங்காமல் கண் கலங்கிவிட்டார்.
பிரபல கன்னட நடிகர் அம்பரீஷ் உடல் நலக்குறைவு காரணமாக பெங்களூரில் உள்ள விக்ரம் மருத்துவமனையில் நேற்று அனுமதிக்கப்பட்டார். அங்கு அவர் மாரடைப்பால் மரணம் அடைந்தார்.

அவரின் மரண செய்தி அறிந்து கன்னட திரையுலகினர் கவலை அடைந்துள்ளனர். அம்பரீஷ் ரசிகர்கள் தகவல் அறிந்ததும் மருத்துவமனைக்கு முன்பு கூடி கண்ணீர் விட்டனர். அம்பரீஷின் மரணம் குறித்து அறிந்த ரஜினிகாந்த், நல்ல மனிதர், சிறந்த நண்பனை இழந்துவிட்டேன். உங்களை மிஸ் பண்ணுவேன் என்று ட்விட்டரில் தெரிவித்தார். இதையடுத்து தனது நண்பருக்கு இறுதி அஞ்சலி செலுத்த ரஜினி இன்று காலை விமானம் மூலம் சென்னையில் இருந்து பெங்களூருக்கு கிளம்பிச் சென்றார்,
பெங்களூரில் உள்ள கந்தீரவா ஸ்டேடியத்தில் வைக்கப்பட்டுள்ள அம்பரீஷின் உடலுக்கு ரஜினி இறுதி அஞ்சலி செலுத்தினார். அம்பரீஷின் உடலை பார்த்ததும் கன்னத்தில் கையை வைத்த அவர் துக்கம் தாங்க முடியாமல் கண் கலங்கிவிட்டார்.
அம்பரீஷின் உடலுக்கு அருகே நின்று கொண்டிருந்த அவரின் மனைவி சுமலதா மற்றும் மகன் அபிஷேக் ஆகியோருக்கு ரஜினி ஆறுதல் கூறினார். அம்பரீஷின் இறுதிச் சடங்கு அரசு மரியாதையுடன் நாளை நடைபெறுகிறது.


Click it and Unblock the Notifications











