Thalaivar 171: அடுத்த ஆண்டு துவக்கத்தில் சூட்டிங் துவங்கும் தலைவர்171 படம்.. லோகேஷ் சம்பவம் லோடிங்!

சென்னை: நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் அடுத்தமாதம் 10ம் தேதி ஜெயிலர் படம் சர்வதேச அளவில் திரையரங்குகளில் ரிலீசாகவுள்ளது.

நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் உருவாகியுள்ள ஜெயிலர் படத்தில் ரஜினியுடன் ரம்யா கிருஷ்ணன், தமன்னா உள்ளிட்டவர்கள் நடித்துள்ளனர்.

இந்தப் படத்தை தொடர்ந்து தன்னுடைய மகள் ஐஸ்வர்யா ரஜினி இயக்கத்தில் லால் சலாம் படத்திலும் நடித்து முடித்துள்ளார் ரஜினிகாந்த்.

Rajini -Lokesh combination Thalaivar 171 movie shooting kickstart From February 2024

அடுத்த ஆண்டு பிப்ரவரியில் சூட்டிங் துவங்கும் தலைவர் 171: நடிகர் ரஜினிகாந்தின் ஜெயிலர் படம் அடுத்த மாதம் 10ம் தேதி சர்வதேச அளவில் ரிலீசாகவுள்ளது. இந்தப் படத்தில் ரஜினியுடன் ரம்யா கிருஷ்ணன், தமன்னா, சுனில், சிவராஜ்குமார், மோகன்லால், ஜாக்கி ஷெராப் போன்றவர்களும் நடித்துள்ளனர். பான் இந்தியா படமாக வெளியாகவுள்ள இந்தப் படத்தில் ஒவ்வொரு மொழியிலும் முன்னணியில் உள்ள நடிகர்களை நடிக்க வைத்துள்ளார் படத்தின் இயக்குநர் நெல்சன் திலீப்குமார்.

இந்தப் படத்தின் சூட்டிங்கை நிறைவு செய்தவுடன் தன்னுடைய மகள் இயக்கத்தில் உருவாகிவரும் லால் சலாம் படத்தின் சூட்டிங்கில் இணைந்தார் ரஜினி. அவரது போர்ஷன்கள், மும்பை, பாண்டிச்சேரி மற்றும் திருவண்ணாமலை போன்ற இடங்களில் நடத்தப்பட்டு தற்போது அவரது போர்ஷன்கள் நிறைவடைந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. படத்தின் இரண்டாவது ஷெட்யூலும் நிறைவடைந்துள்ளதாக தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஐஸ்வர்யா ரஜினி அறிவித்திருந்தார்.

இந்தப் படங்களை தொடர்ந்து அடுத்ததாக ஞானவேல் இயக்கத்தில் தன்னுடைய தலைவர் 170 படத்தின் சூட்டிங்கில் இணையவுள்ளார் ரஜினிகாந்த். தற்போது லால் சலாம் படத்தின் சூட்டிங்கை நிறைவு செய்துவிட்டு மாலத்தீவில் அவர் தனது விடுமுறை கொண்டாட்டத்தில் ஈடுபட்டுள்ளார். மாலத்தீவு கடற்கரையில் அவர் ரிலாக்ஸாக இருக்கும் புகைப்படங்கள் வெளியாகி ரசிகர்களை கவர்ந்து வருகின்றன. இன்னும் சில தினங்களில் சென்னை திரும்பும் ரஜினியின் தலைவர் 170 படத்தின் சூட்டிங் குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதனிடையே, இந்தப் படத்தின் சூட்டிங் இந்த ஆண்டிற்குள்ளாகவே நிறைவு செய்யப்பட திட்டமிடப்பட்டுள்ளதாகவும் அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதத்தில் லோகேஷுடன் ரஜினிகாந்த் இணையும் தலைவர் 171 படத்தின் சூட்டிங் துவங்கவுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. வரும் அக்டோபர் 19ம் தேதி லோகேஷ் -விஜய் காம்பினேஷனில் உருவாகியுள்ள லியோ படம் சர்வதேச அளவில் ரிலீசாகவுள்ள நிலையில், இந்தப் படத்தை தொடர்ந்து ரஜினிக்கான ஸ்கிரிப்டை முடிக்க லோகேஷுக்கும் அதிகமான கால அவகாசம் ஏற்படும்.

தலைவர் 171 படத்தின் சூட்டிங் அடுத்த ஆண்டு பிப்ரவரியில் துவங்கவுள்ள நிலையில், அந்தப் படம் லோகேஷ் யூனிவர்சில் இணையுமா என்பது குறித்து அறிய ரசிகர்கள் மிகுந்த ஆர்வம் காட்டி வருகின்றனர். இந்தப் படத்தில் பிரபல நடிகர் பாபு ஆண்டனி இணைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. தன்னுடைய படங்களில் அதிகமான நட்சத்திரங்களை இணைப்பதை தன்னுடைய வழக்கமாக கொண்டுள்ளார் லோகேஷ். அதேபோல தலைவர் 171 படமும் திருவிழாவாக அமையும் என்று எதிர்பார்க்கலாம்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X