ரஜினியின் தலைவர் 171 போட்டோ ஷூட் ஓவர்... லோகேஷின் ரியல் சம்பவம் லோடிங்... பிரபலம் சொன்ன அப்டேட்

சென்னை: சூப்பர் ஸ்டார் ரஜினியின் தலைவர் 171 படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்குவது உறுதியாகியுள்ளது.

சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவாகும் இந்தப் படத்தின் அப்டேட் விரைவில் வெளியாகும் என சொல்லப்படுகிறது.

ஜெயிலர் படத்தில் நடித்து முடித்துவிட்ட ரஜினி, அடுத்து லால் சலாம் ஷூட்டிங்கில் பங்கேற்கிறார்.

அதற்கு முன்பாக தலைவர் 171 படத்தின் போட்டோ ஷூட்டை லோகேஷ் கனகராஜ் முடித்துவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

 Rajini-Lokesh Kanagaraj alliance Thalaivar 171 photoshoot has been completed

தலைவர் 171 போட்டோ ஷூட் ஓவர்:சூப்பர் ஸ்டார் ரஜினியின் ஜெயிலர் திரைப்படம் ஆகஸ்ட் 10ம் தேதி வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது. இந்தப் படத்தில் ரஜினியின் போர்ஷன் முழுவதுமே படமாக்கப்பட்டு முடிந்துவிட்டதாம். இதனால் அடுத்ததாக தனது மகள் ஐஸ்வர்யா இயக்கும் லால் சலாம் படப்பிடிப்புக்காக மும்பை பறந்துவிட்டார்.

ஆனால், கடந்த சில தினங்களாக ரஜினி சென்னையில் தான் இருந்துள்ளார். அப்போது லோகேஷ் கனகராஜ்ஜும் காஷ்மீர் ஷெட்யூலை முடித்துவிட்டு சென்னையில் தான் இருந்தார். அப்போது ரஜினியும் லோகேஷ் கனகராஜ்ஜும் நேரில் சந்தித்துக்கொண்டதாக தகவல் வெளியானது. அது உண்மை தான் என நடிகரும் சினிமா பிரபலமுமான சாய் வித் சித்ரா கன்ஃபார்ம் செய்துள்ளார்.

அதுமட்டும் இல்லாமல் ரஜினியின் தலைவர் 171 படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கவுள்ளதையும் அவர் கன்ஃபார்ம் செய்துள்ளார். சமீபத்தில் நடைபெற்ற தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் ரஜினியை நேரில் சந்தித்ததாகவும், அப்போது ஜெயிலர், லால் சலாம் படங்கள் பற்றி பேசியதாக சாய் வித் சித்ரா தனது யூடியூப்பில் வெளியிட்டுள்ள வீடியோவில் கூறியுள்ளார்.

மேலும், தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் வாக்களித்துவிட்டு ரஜினி அவசரமாக கிளம்பிச் சென்றார். அதன்பின்னர் தான் அவர் எங்கு சென்றார் என தனக்கு தெரியவந்தது. அன்றைய தினத்தில் தான் தலைவர் 171 படத்தின் போட்டோ ஷூட்டை லோகேஷ் நடத்தி முடித்தாராம். அதில், ரஜினியின் கேரக்டர் போட்டோ ஷூட் நடத்தப்பட்டதாகவும் சாய் வித் சித்ரா தெரிவித்துள்ளார்.

 Rajini-Lokesh Kanagaraj alliance Thalaivar 171 photoshoot has been completed

மேலும், ரஜினியை செம்ம ஸ்டைலிஷாக லோகேஷ் போட்டோ ஷூட் எடுத்துள்ளார். இந்தப் புகைப்படங்கள் தலைவர் 171 அப்டேட் அறிவிக்கப்படும் போது வெளியாகும் எனவும் அவர் கூறியுள்ளார். தலைவர் 171 படம் குறித்து இதுவரை வெளியான தகவல்களிலேயே சாய் வித் சித்ரா தெரிவித்துள்ளது மிக முக்கியமானதாக பார்க்கப்படுகிறது. உறுதியில்லாத எந்த அப்டேட்டையும் அவர் இதுவரை சொன்னதில்லை என்பதால், ரஜினி - லோகேஷ் கூட்டணி கன்ஃபார்ம் தான் என கோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

அதேபோல், தலைவர் 171 படத்தை சன் பிக்சர்ஸ் தயாரிப்பதும் உறுதியாகியுள்ளது. தனது கடைசிப் படத்தை லோகேஷ் இயக்க வேண்டும் என ரஜினி விருப்பம் தெரிவித்ததாக செய்திகள் வெளியாகின. அது தற்போது சன் பிக்சர்ஸ் மூலம் நடக்கவுள்ளது குறிப்பிடத்தக்கது. இந்தப் படத்தை இயக்க லோகேஷுக்கு 40 கோடியும், ரஜினிக்கு 100 கோடி ரூபாய்க்கு அதிகமாகவும் சம்பளம் கொடுக்க சன் பிக்சர்ஸ் சம்மதம் தெரிவித்துள்ளதாம்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X