ரஜினியின் தலைவர் 171 படத்துக்கு கண்டிஷன் போட்ட லோகேஷ்... இதுக்கெல்லாம் கமல் தான் காரணமா?

சென்னை: சூப்பர் ஸ்டார் ரஜினியின் ஜெயிலர் திரைப்படம் இந்தாண்டு வெளியாவது கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டது.

இதனைத் தொடர்ந்து லால் சலாம் படத்தில் கேமியோ ரோலிலும், தலைவர் 170-ல் ஹீரோவாகவும் நடிக்கவுள்ளார்.

அதன்பின்னர் ரஜினி நடிக்கவுள்ள தலைவர் 171 படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்குவார் என சொல்லப்பட்டது.

ஆனால், தற்போது தலைவர் 171 படத்தை இயக்க லோகேஷ் கனகராஜ் கண்டிஷன் போட்டுள்ளதாக சொல்லப்படுகிறது.

 Rajini: Lokesh Kanagaraj conditions Rs 40 crore salary to direct Rajinikanth Thalaivar 171

தலைவர் 171 - லோகேஷ் கண்டிஷன்:சூப்பர் ஸ்டார் ரஜினியின் ஜெயிலர் படத்தின் ஷூட்டிங் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. நெல்சன் இயக்கும் இந்தப் படம் விநாயகர்சதுர்த்தி ஸ்பெஷலாக வெளியாகும் என சொல்லப்படுகிறது. இதனையடுத்து லைகா தயாரிப்பில் ஞானவேல் இயக்கும் தலைவர் 170 படத்தில் நடிக்கவுள்ளார். அதேபோல், தனது மகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கும் லால் சலாம் படத்தில் கேமியோ ரோலில் நடிக்கிறார்.

இந்நிலையில் தனது கடைசிப் படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்க வேண்டும் என ரஜினி விருப்பம் தெரிவித்ததாக செய்திகள் வெளியாகின. விக்ரம் படத்திற்காக ரஜினிக்காக லோகேஷ் ஒரு கதையை ரெடியாக வைத்திருந்ததாகவும் சொல்லப்பட்டது. இதனால், இக்கூட்டணி கண்டிப்பாக இணையும் என்றே தெரிகிறது. ரஜினி - லோகேஷ் இணையும் பட்சத்தில், அந்தப் படம் LCU கான்செப்ட்டில் இருக்கும் எனவும் சொல்லப்படுகிறது.

மாநகரம் முதல் விக்ரம் தான் இயக்கிய 4 படங்களையும் சூப்பர் ஹிட்டாக்கியவர் லோகேஷ் கனகராஜ். இப்போது இயக்கி வரும் விஜய்யின் லியோவும் இண்டஸ்ட்ரி ஹிட் அடிக்கும் என பாக்ஸ் ஆபிஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதனால் ரஜினி - லோகேஷ் இணையும் படத்தை இயக்க பல தயாரிப்பு நிறுவனங்கள் வரிசைக் கட்டி நிற்கின்றன. ராஜ்கமல் பிலிம்ஸ் சார்பில் ரஜினியின் நெருங்கிய நண்பர் கமல்ஹாசனே தலைவர் 171 படத்தை தயாரிக்கலாம் என சொல்லப்பட்டது.

 Rajini: Lokesh Kanagaraj conditions Rs 40 crore salary to direct Rajinikanth Thalaivar 171

ஆனால், தற்போது இந்த ரேஸில் சன் பிக்சர்ஸ் தான் வாய்ப்பை தட்டித் தூக்கியுள்ளதாம். அதேநேரம், தயாரிப்பு நிறுவனம் உறுதியானதும் தலைவர் 170 படத்தை இயக்க லோகேஷ் கனகராஜ் கண்டிஷன் போட்டுள்ளாராம். லோகேஷ் கனகராஜ்ஜின் மேக்கிங்கில் இம்ப்ரஸ்ஸான தெலுங்கு தயாரிப்பாளர்கள் அவர் கேட்கும் சம்பளத்தை கொடுக்க சம்மதம் கூறிவிட்டனர்.

ஆனால், பட்ஜெட் விஷயத்தில் எப்போதுமே கொஞ்சம் கறாராக இருக்கும் சன் பிக்சர்ஸ், லோகேஷின் சம்பள விஷயத்தில் இறுக்கம் காட்டியுள்ளது. அதனால், 40 கோடி சம்பளம் என்றால் மட்டுமே தலைவர் 170 படத்தை இயக்குவேன் என லோகேஷ் கனராஜ் சொல்லிவிட்டாராம். ரஜினிக்காக தலைவர் 170 படத்தை தயாரிக்க ஆசைப்பட்ட சன் பிக்சர்ஸ், தற்போது வேறு வழியே இல்லாமல் லோகேஷுக்கு 40 கோடி சம்பளம் கொடுக்க ஓக்கே சொல்லிவிட்டதாம்.

இதனால், ரஜினி - லோகேஷ் கூட்டணி கன்ஃபார்ம் என்றே சொல்லப்படுகிறது. முன்னதாக சம்பளம் அதிகம் கேட்டதால் லோகேஷுக்கு பதிலாக வேறு இயக்குநரை புக் செய்ய ஆர்வம் காட்டியுள்ளது சன் பிக்சர்ஸ். ஆனால், ரஜினியும் லோகேஷ் தான் வேண்டும் என கன்ஃபார்மாக சொல்லிவிட்டாராம். இதற்கெல்லாம் காரணம் கமல் தான் என்று பேச்சு அடிபடுகிறது. அவர் நடித்த விக்ரம் திரைப்படம் இண்டஸ்ட்ரி ஹிட் அடித்ததால் தான், லோகேஷின் மார்க்கெட் எகிறிவிட்டதாக கூறி வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X