நாங்க தம்மடிப்போம், சரக்கடிப்போம்.. கதையை மட்டும் எழுத மாட்டோம்.. கடைசியில கருமம் பவர்ஹவுஸ்னா இதுவா?

சென்னை: லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியான படங்களில் கடும் விமர்சனங்களை எதிர் கொண்ட படமாக கூலி படம் உருமாறி இருக்கிறது. படத்தின் திரைக்கதையில் தான் அனைத்து பிரச்னையும். படம் குறித்து பல விமர்சனங்களை படக்குழு எதிர்கொண்டு வந்தாலும், அதிகம் அட்டாக் செய்யப்படுவது லோகி தான். அனைத்து படங்களிலும் மது கூடாது, புகை கூடாது எனக் கூறிவிட்டு படத்தில் மதுவையும் புகையையும் ரொமான்டிசைஸ் செய்வது என்பது 'இட்ஸ் வெரி ராங் ப்ரோ' எனக் கூற வைக்கிறது.

லோகேஷ் கனகராஜின் கைதி படத்தில் இருந்து கடைசியாக வெளியான கூலி படம் வரை போதைக்கு எதிரான காட்சிகள் திரைக்கதையிலேயே இடம் பெற்று வருகிறது. கைதியில் போதைப் பொருள் கடத்தல், விக்ரமில் விஜய் சேதுபதி கேப்சூல் போன்ற ஒன்றைக் கடித்தால் வீரியம் பெருகி வன்முறையில் ஈடுபடுவது, மாஸ்டரில் கதாநாயகனே பாதி படம் வரை போதை ஆசாமியாக இருப்பது, லியோவில் கதாநாயகன் தனது இளம் வயதில் போதைப் பொருட்களை விற்பனை செய்பவராக இருப்பது என இருந்தாலும் பாடலில், அவ்வப்போது திரைக்கதையில் போதை கூடாது எனக் கூறுவார்.

Take a Poll

ஆனால் படத்தின் பெரும்பான்மை காட்சியை போதைப் பொருட்களை பயன்படுத்துவதை கெத்து, போதைப் பொருளைப் பயன்படுத்தும் போது மிகவும் கொண்டாட்டமான பின்னணி இசையை சேர்ப்பது என படத்தில் போதைப் பொருளை பயன்படுத்துவதை ரொமான்டிசைஸ் செய்வது போன்ற காட்சிகள்தான் அதிகம். இது போன்ற காட்சிகளைத்தான் கூலி படத்திலும் வைத்துள்ளார் லோகி.

முரண்: படத்தின் தொடக்கத்தில், அண்டா நிறைய உள்ள மதுவை முதல் மாடியில் இருந்து தள்ளி விடுகிறார். ஆனால் இடைவேளை காட்சிக்கு முன்னதாகவே, அவரே மது அருந்துகிறார். அதற்கு பவர் ஹவுஸ் என்ற பாடலையும் தனியாக உருவாக்கி படத்தில் வைத்துள்ளார்கள். அதேபோல் படத்தின் கிளைமாக்ஸ் காட்சியில் தேவையில்லாமல் வந்த ஆமிர் கான் உபேந்திராவிடம் பீடி கேட்பதும், அந்த பீடியை மூவரும் இணைந்து பற்றவைத்து புகைப்பதும் என புகைப்படிப்பதை மேலும் ரொமான்டிசைஸ் செய்வது போல உள்ளது.

Rajini Lokesh Kanagaraj Coolie Movie Scenes And Songs Romanticise Smoking And Alcohol Consumption
Photo Credit:

ரொமான்டிசைஸ்: ரஜினி பவர் ஹவுஸ் என மதுவின் பெயரைச் சொல்லும் போதும் சரி, பீடி குடிக்கும் போதும் சரி தியேட்டரில் ரசிகர்கள் விசில், ஆரவாரம் என கொண்டாடி விட்டார்கள். தியேட்டரை விட்டு வெளியே வந்ததும் ரஜினியின் பழைய படங்களில் எப்படி பீடியை, சிக்ரெட்டை வீசி வாயில் பிடிப்பாரோ அதேபோல் வீசிப் பிடித்து, இந்த படத்தில் காட்டப்பட்ட காட்சியான பீடியை சுழற்றுவது என ரசிகர் ஒருவர் செய்ததும், அதை மற்றவர்கள் உற்சாகப்படுத்திய சம்பவமும் அரங்கேறியது.

இதுதான் பவர் ஹவுஸா?: பவர் ஹவுஸ் என்ற பாடலை வெளியிட்ட போது, ரசிகர்கள் பலரும் ஏதோ, சண்டைக் காட்சியில் அல்லது மாஸான காட்சியில் இந்த பாடல் இடம் பெறப் போகிறது என நினைத்துக் கொண்டு இருக்க, பவர் ஹவுஸ் என்றால் சரக்கா எனத் தெரிந்ததும் டோட்டல் அப்செட். சரக்கு வேண்டாம் என ரஜினி சொல்லும் போது வந்த அப்லாஸ்களை விட, அவர் பவர் ஹவுஸ் எனக் கூறிவிட்டு சரக்கடிக்கும் போது வந்த அப்லாஸ்கள் அதிகம். படம் முழுக்க சாதிப் பெருமையை பேசிவிட்டு படத்தின் கிளைமாக்ஸ் காட்சியில் போய் புள்ள குட்டிய படிக்க வைங்கடா என கமல் பேசிய வசனம் எடுபட்டதை விட, சாதிய பெருமையை பேசிய வசனங்களும், பாடல்களும் தான் பலரது வாழ்க்கையை சீரழித்தது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X