Jailer Success Meet: விக்ரம் ஸ்டைலில் ஜெயிலர் சக்சஸ் மீட்... ரஜினிக்காக ஓடிவந்த மோகன்லால்!

சென்னை: ரஜினி நடிப்பில் நெல்சன் இயக்கிய ஜெயிலர் திரைப்படம் கடந்த மாதம் 10ம் தேதி ரிலீஸானது.

உலகம் முழுவதும் வெளியான ஜெயிலர், பாக்ஸ் ஆபிஸில் 600 கோடி ரூபாய் வரை வசூலித்துள்ளது.

ஜெயிலர் வெற்றியை கொண்டாடும் விதமாக, ரஜினி, நெல்சன், அனிருத் ஆகியோருக்கு சொகுசு கார் பரிசாக கொடுத்திருந்தார் சன் பிக்சர்ஸ் கலாநிதி மாறன்.

இதனைத் தொடர்ந்து தற்போது ஜெயிலர் படத்தின் சக்சஸ் மீட் ரஜினி தலைமையில் நடைபெற்றது.

 Rajini: Mohanlal along with Rajinikanth attended Jailer Success Meet

பிரம்மாண்டமாக நடைபெற்ற ஜெயிலர் சக்சஸ் மீட்: சூப்பர் ஸ்டார் ரஜினிக்கு மிகப் பெரிய வெற்றிப் படமாக அமைந்துள்ளது ஜெயிலர். பேட்ட, தர்பார், அண்ணாத்த படங்களால் தடுமாறி நின்ற தலைவரை, ஜெயிலர் நிம்மதி பெருமூச்சுவிட வைத்துள்ளது. சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் நெல்சன் இயக்கிய இந்தப் படம் இதுவரை 600 கோடிக்கும் மேல் வசூலித்து மாஸ் காட்டியுள்ளது.

அதேபோல், திரையரங்குகளைத் தொடர்ந்து தற்போது அமேசான் ப்ரைம் ஓடிடியிலும் ஜெயிலர் வரவேற்பைப் பெற்றுள்ளது. இதனையடுத்து ஜெயிலர் படத்தின் சக்சஸ் மீட்டிங் பிரம்மாண்டமாக நடைபெற்றது. ஏற்கனவே படம் வெளியாகி முதல் வாரத்தில், இயக்குநர் நெல்சன் தலைமையில் ஒருசிலர் மட்டும் செய்தியாளர்களை சந்தித்து நன்றி கூறினர். ஆனால், தற்போது சூப்பர் ஸ்டார் ரஜினி தலைமையில் ஜெயிலர் சக்சஸ் மீட் பிரம்மாண்டமாக நடைபெற்றது.

 Rajini: Mohanlal along with Rajinikanth attended Jailer Success Meet

சன் பிக்சர்ஸ் ஏற்பாடு செய்த இந்நிகழ்ச்சியில் ரஜினியுடன் மோகன்லாலும் கலந்துகொண்டார். அதுமட்டும் இல்லாமல் இருவரும் இணைந்து படக்குழுவினருக்கு ஷீல்டு கொடுத்து சிறப்பித்தனர். முன்பெல்லாம் திரைப்படங்கள் வெற்றிப் பெறும் போதும், 100 நாட்கள் ஓடினாலும் வெற்றி விழா நடத்தி, ஷீல்டு கொடுப்பது வழக்கம். இப்போதைய சூழலில் ஒரு படம் திரையரங்குகளில் அதிகபட்சம் ஒரு மாதம் ஓடுவதே பெரிது தான்.

ஆனாலும், கடந்தாண்டு வெளியான விக்ரம் திரைப்படம் திரையரங்குகளில் 100 நாட்கள் ஓடி சாதனை படைத்தது. இதனையடுத்து 100வது நாள் வெற்றி விழாவில் விக்ரம் படத்தில் நடித்த, பணியாற்றிய அனைவருக்கும் கமல் ஷீல்டு கொடுத்து அசத்தினார். தற்போது அதே பாணியில் ஜெயிலர் வெற்றி விழாவில் படக்குழுவினர் அனைவருக்கும் ஷீல்டு கொடுக்கப்பட்டுள்ளது. ரஜினியும் மோகன்லாலும் இந்த கேடயங்களை வழங்கினர்.

 Rajini: Mohanlal along with Rajinikanth attended Jailer Success Meet

இதனிடையே ஜெயிலர் இசை வெளியீட்டு விழாவில் குட்டி ஸ்டோரி சொன்ன ரஜினி, இப்போதும் சக்சஸ் பஞ்ச் அடிப்பாரா என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிகழ்ச்சி விரைவில் சன் டிவியில் ஒளிபரப்பாகும் என ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X