»   »  ஏ ஆர் முருகதாஸ், ஷங்கர், சுந்தர், ராகவா லாரன்ஸ், கார்த்திக் சுப்பராஜ்... 'லக்கி' ரஞ்சித்!

ஏ ஆர் முருகதாஸ், ஷங்கர், சுந்தர், ராகவா லாரன்ஸ், கார்த்திக் சுப்பராஜ்... 'லக்கி' ரஞ்சித்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

திரையுலகில் ஒரு இயக்குநராக நுழையும் எவருக்கும், ஓரிரு படங்கள் இயக்கி முடித்ததும் துளிர்க்கும் ஆசை.. 'ரஜினியை இயக்க வேண்டும்... ரஜினிக்காக ஒரு கதை வைத்திருக்கிறேன்' என்று கிளம்பும்.

இன்றைய இளம் இயக்குநர்களில் பலர் அடிப்படையில் ரஜினியின் தீவிர ரசிகர்கள்.

குறிப்பாக ராகவா லாரன்ஸ், எஸ் எஸ் ராஜமவுலி, கார்த்திக் சுப்பராஜ், இப்போது தேர்வாகியிருக்கும் ரஞ்சித்... அனைவருமே ரஜினியின் முதல் நாள் முதல் காட்சி பார்க்கும் தீவிர ரசிகர்கள்.

Rajini movie: How Ranjith joined in borad?

லிங்காவுக்குப் பிறகு, உடனடியாக ரஜினி படம் நடிக்கப் போகிறார் என்பது தகவலாகப் பரவியது. அதுவும் குறிப்பிட்ட சில இயக்குநர்களுக்குத்தான் என்றில்லாமல், இன்றைய இளம் இயக்குநர்களுக்கும் அவர் வாய்ப்பு தரப் போகிறார் என்ற தகவல் கிடைத்ததும், பலரும் கதைகளோடு அணுகியிருக்கிறார்கள்.

ரஜினி முதலில் கேட்டது ஷங்கரின் எந்திரன் 2-வைத்தான். இதை இப்போது முதல் முறை அவர் கேட்கவில்லை. பலமுறை கேட்டதுதான். ஆனால் இந்த முறை எத்தனை நாளில் இந்தப் படம் முடியும்.. பட்ஜெட் என்ன என்பதைத்தான். அதற்கு ஒரு இறுதி வடிவமும் கொடுக்கப்பட்டுவிட்டது.

ஆனால் அந்தப் படம் துவங்க குறைந்தது 6 மாதங்களுக்கு மேலாகும் என்பதால், அதற்குள் ஒரு படம்.. அதுவும் ஒரு பரபர ஆக்ஷன் படம் பண்ணும் எண்ணம் ரஜினிக்கு.

அதனால் சுந்தர் சி, ராகவா லாரன்ஸ், கார்த்திக் சுப்பராஜ், ரஞ்சித் ஆகியோரிடமும் கதைகள் கேட்டுள்ளார். ரஞ்சித்தின் கதை ரொம்பவே பிடித்துப் போக... அவரையே தன் அடுத்த பட இயக்குநராக டிக் செய்துவிட்டார்.

ரஞ்சித் இதுவரை இரு முறை ரஜினியைச் சந்தித்துவிட்டார். முதல் சந்திப்பின்போது அவர் சொன்ன கதைச் சுருக்கம் மிகவும் பிடித்துப் போனதால், அவரைக் கட்டிப் பிடித்து பாராட்டி, முழுக் கதையையும் தயார் செய்யச் சொன்னாராம் ரஜினி.

முழுக் கதையும் தயாராக இருக்கிறது சார்... என ரஞ்சித் சொல்ல, வெரி குட் என்று பாராட்டிய ரஜினி, உடனே தாணுவைப் பார்த்துவிடுங்கள் என்று அனுப்பி வைத்திருக்கிறார். தாணுவைப் பார்த்து படம் குறித்துப் பேசி அட்வான்ஸ் வாங்கிய கையோடு நண்பர்கள் அனைவருக்கும் விருந்து வைத்துக் கொண்டாடினாராம் ரஞ்சித்.

தாணுவும் ரஜினியும் கடந்த பத்து தினங்களாகவே, ஷூட்டிங், கால்ஷீட் என பலவற்றையும் பேசி முடிவு செய்து வைத்துவிட்டது குறிப்பிடத்தக்கது.

ஜூனில் படப்பிடிப்பு, பொங்கலுக்கு ரிலீஸ் என்பதை ஏற்கெனவே நாம் தெரிவித்திருக்கிறோம்.

English summary
Here is the story of how Rajinikanth selects his next movie director Ranjith.
Please Wait while comments are loading...

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil