லோகேஷ் பாணியில் பொன்ராம் யுனிவர்ஸ்… ரெடியான சிவகார்த்திகேயன்… விரைவில் ரஜினி முருகன் 2?
சென்னை: சிவகார்த்திகேயனுக்கு அவரது கேரியரில் மிகப் பெரிய கம்பேக் கொடுத்த திரைப்படம் வருத்தப்படாத வாலிபர் சங்கம்.
பொன்ராம் இயக்கத்தில் 2013ம் ஆண்டும் வெளியான இந்தப் படம் சூப்பர் ஹிட் அடித்தது.
இதனைத் தொடர்ந்து ரஜினிமுருகன், சீமராஜா படங்களில் இணைந்த சிவகார்த்திகேயன் - பொன்ராம் ஜோடி, மீண்டும் ஒரு படத்தில் கூட்டணி வைக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஓடிடியில் வெளியான பிரின்ஸ்
சிவகார்த்திகேயன் நடிப்பில் தீபாவளி ஸ்பெஷலாக திரையரங்குகளில் ரிலீஸான பிரின்ஸ் திரைப்படம், எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை. இந்நிலையில், இந்தத் திரைப்படம் இன்று முதல் ஹாட்ஸ்டார் ஓடிடியில் ஸ்ட்ரீமிங் ஆகிறது. அனுதீப் இயக்கியுள்ள பிரின்ஸ் படத்தில் சிவகார்த்திகேயனுடன் சத்யராஜ், மரியா உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். பிரின்ஸை தொடர்ந்து மாவீரன் படத்தின் ஷூட்டிங்கில் பிஸியாக இருக்கிறார் சிவகார்த்திகேயன்.

வருத்தப்படாத வாலிபர் சங்கம்
சிவகார்த்திகேயனை கமர்சியல் ஹீரோவாக ரசிகர்களிடம் கொண்டு சேர்த்த திரைப்படம் வருத்தப்படாத வாலிபர் சங்கம். பொன்ராம் இயக்கத்தில் 2013ம் ஆண்டு வெளியான இந்தப் படம், சிவகார்த்திகேயனுக்கு தரமான கம்பேக் கொடுத்தது. சிவகார்த்திகேயனுடன் ஸ்ரீதிவ்யா, சூரி, சத்யராஜ் உள்ளிட்ட பலர் வருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்தில் நடித்திருந்தனர். இந்தப் படத்தில் சிவாவின் போஸ் பாண்டி என்ற கேரக்டர் இன்றும் ரசிகர்களின் ஃபேவரைட்டாக உள்ளது.

மீண்டும் இணையும் கூட்டணி?
வருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்தைத் தொடர்ந்து, ரஜினிமுருகன், சீமராஜா படங்களில் சிவகார்த்திகேயன் - பொன்ராம் ஜோடி இணைந்தது. இதில், ரஜினிமுருகன் ஓரளவு தாக்குப்பிடிக்க, சீமராஜா தோல்வியடைந்தது. இதனால், சிவகார்த்திகேயன் - பொன்ராம் ஜோடி தற்காலிகமாக பிரிந்தது. இதனிடையே வருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்தின் செகண்ட் பார்ட் எடுக்க சிவாவை அணுகினார் பொன்ராம். ஆனால், சிவகார்த்திகேயன் அதற்கு சம்மதம் சொல்லவில்லை, அதேநேரம் கண்டிப்பாக வருத்தப்படாத வாலிபர் சங்கம் 2 உருவாகும் என பொன்ராம் அடித்துக் கூறினார்.

பொன்ராம் சினிமாட்டிக் யுனிவர்ஸ்
இதனால், விஜய் சேதுபதி நடித்த DSP படத்தை இயக்கினார் பொன்ராம். இந்தப் படம் டிசம்பர் 2ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. இந்நிலையில், ரஜினிமுருகன் இரண்டாம் பாகத்திற்கான கதையை பொன்ராம் எழுதி வருவதாகவும், அதில் வருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்தில் வரும் போஸ் பாண்டி கேரக்டரை பயன்படுத்த உள்ளதாகவும் சொல்லப்படுகிறது. இதுகுறித்து சமீபத்தில் சிவகார்த்திகேயனை சந்தித்து ரஜினிமுருகன் சீக்வெல், அதில் போஸ் பாண்டி கேரக்டர் பற்றி கூறியுள்ளார் பொன்ராம். இந்த கான்செப்ட் பிடித்துவிட சிவகார்த்திகேயனும் ஓக்கே சொல்லிவிட்டதாக கூறப்படுகிறது. இதனால் ரஜினிமுருகன் 2 எப்போது வேண்டுமானாலும் தொடங்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications











