அடுத்த அதிர்ச்சி.. ரஜினிமுருகன் படத்தில் வாழைப்பழ காமெடியில் கலக்கிய நடிகர் பவுன்ராஜ் மரணம்

சென்னை: ஒரு பக்கம் கொரோனா என்றால் மறுபக்கம் மாரடைப்பு சினிமா பிரபலங்களை காவு வாங்கி வருகிறது.

வருத்தப்படாத வாலிபர் சங்கம், ரஜினிமுருகன் உள்ளிட்ட படங்களில் நடித்து பிரபலமான நடிகர் பவுன்ராஜ் மாரடைப்புக் காரணமாக காலமாகி உள்ளார்.

இயக்குநர் பொன்ராமின் இணை இயக்குநரான இவரது மரண செய்தியை அறிவித்த பொன்ராம் தனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளார்.

பவுன்ராஜ் மரணம்

பவுன்ராஜ் மரணம்

வருத்தப்படாத வாலிபர் சங்கம், ரஜினிமுருகன் உள்ளிட்ட படங்களில் நடித்து பிரபலமான நடிகர் பவுன்ராஜ் மாரடைப்புக் காரணமாக காலமாகி உள்ளார். அவரது மறைவுக்கு திரையுலக பிரபலங்களும் ரசிகர்களும் ஆழ்ந்த இரங்கல்களை தெரிவித்து வருகின்றனர்.

வருத்தப்படாத வாலிபர் சங்கம்

வருத்தப்படாத வாலிபர் சங்கம்

இயக்குநர் பொன்ராமின் இணை இயக்குநரான பவுன்ராஜ், பொன்ராமின் அறிமுக படமான வருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்தில், "அங்க தான் பா எங்க அக்கா மவன் முறுக்கு சுட்டு வித்திட்டு இருக்கான்" என சிவகார்த்திகேயன் மற்றும் சூரியிடம் லந்து செய்து கலக்கியிருப்பார்.

வாழைப்பழ காமெடி

வாழைப்பழ காமெடி

கவுண்டமணி, செந்தில் வாழைப்பழ காமெடிக்கு பிறகு செம ஹிட் ஆனது, ரஜினிமுருகன் படத்தில் இடம்பெற்ற வாழைப்பழ காமெடி தான். டீ கடைக்கு டீ குடிக்க வரும் பவன்ராஜ் வாழைப்பழத்தை பிய்க்க முடியாமல் சிரமப்பட என்ன மதுரைக்காரனுக்கு வந்த சோதனை என கடையையே காலி செய்து விடுவார்.

காமெடி நடிகர்கள் மரணம்

காமெடி நடிகர்கள் மரணம்

தமிழ் சினிமாவில் தொடர்ந்து நகைச்சுவை நடிகர்கள் பலரும் பலியாகி வருகின்றனர். நடிகர் விவேக், பாண்டு, மாறன் வரிசையில் தற்போது நடிகர் பவுன்ராஜும் உயிரிழந்து இருப்பது சினிமா உலகில் சிரிப்புக்கு பஞ்சத்தை ஏற்படுத்தி உள்ளது.

பொன்ராம் இரங்கல்

பொன்ராம் இரங்கல்

வருத்தப்படாத வாலிபர் சங்கம், ரஜினி முருகன் படங்களை இயக்கிய இயக்குநர் பொன்ராம் தனது ட்விட்டர் பக்கத்தில், " #RIPPawnraj வருத்தப்படாத வாலிபர் சங்கம் ரஜினிமுருகன், போன்ற படங்களில் நடித்தவரும் எனது கோ டைரக்டருமான பவுன்ராஜ் ஹார்ட் அட்டாக்கில் இறந்து விட்டார் அவருக்கு ஆழ்ந்த இரங்கல்கள்" என பதிவிட்டுள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X