»   »  ரஜினி முருகன் பர்ஸ்ட் லுக் … செம கலர்புல்… க்யூட்

ரஜினி முருகன் பர்ஸ்ட் லுக் … செம கலர்புல்… க்யூட்

Posted By:
Subscribe to Oneindia Tamil

ரஜினி முருகன் படத்தின் பர்ஸ்ட் லுக் சனிக்கிழமை 6 மணிக்கு வெளியிடப்பட்டது. இதனை ட்விட்டரில் உலாவ விட்டுள்ளனர் சிவகார்த்திக்கேயன் ரசிகர்கள்.

வருத்தப்படாத வாலிபர் சங்கத்தை இயக்கிய பொன்ராம் இயக்கத்தில் சிவகார்த்திக்கேயன் நடித்துள்ள படம் ரஜினி முருகன். திருப்பதி பிரதர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இந்த படத்துக்கு இப்போதே அதிக எதிர்பார்ப்பு நிலவுகிறது.

படத்தின் தமிழக விநியோக உரிமையை ஸ்டுடியோ கிரீன் வாங்கியுள்ளது. விநியோகஸ்தர்கள், திரையரங்கு உரிமையாளர்களின் திடீர் செல்லமாகியிருக்கிறார், சிவகார்த்திகேயன்.

பர்ஸ்ட் லுக் வெளியீடு

பர்ஸ்ட் லுக் வெளியீடு

இந்தப் பட்டியலில் ரஜினி, விஜய், அஜீத்துக்கு அடுத்த இடத்தில் இருக்கிறார் சிவ கார்த்திகேயன். படத்தின் பர்ஸ்ட் லுக்கை சனிக்கிழமையன்று ஏப்ரல் 25ஆம் தேதி வெளியிட்டனர்.

கலர்ஃபுல் லுக்

படத்தின் போஸ்டர் கலர்ஃபுல்லாக வந்துள்ளது. புளு சட்டை அணிந்த சிவகார்த்திக்கேயன் சிவப்பு கலர் ரிப்பனை தனது தலையில் கட்டியுள்ளார். இந்த போஸ்டரை சிவகார்த்திக்கேயன் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அவரது ரசிகர்கள் இந்த போஸ்டரை கொண்டாடி வருகின்றனர்.

சதீஷ் வாழ்த்து

நகைச்சுவை நடிகரும் சிவகார்த்திக்கேயனின் நண்பருமான சதீஷ் இந்த பர்ஸ்ட் லுக் போஸ்டருக்கு வாழ்த்து கூறியுள்ளார்.

சிவகார்த்திக்கேயன் – கீர்த்தி சுரேஷ்

சிவகார்த்திக்கேயன் – கீர்த்தி சுரேஷ்

ரஜினிமுருகனில் சிவகார்த்திக்கேயனுடன் கீர்த்தி சுரேஷ் முதன் முறையாக ஜோடி சேர்ந்துள்ளார். இந்த ஜோடி கலர்ஃபுல் ஆட்டம் போட்டுள்ளனர்.

ரம்ஜானுக்கு படம் ரிலீஸ்

ரம்ஜானுக்கு படம் ரிலீஸ்

டி.இமான் படத்துக்கு இசையமைத்துள்ளார். ஜுன் 7 -ஆம் தேதி பாடல்கள் வெளியிடப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஜுலை 17 ரம்ஜானுக்கு படத்தை வெளியிடுவதாக திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

English summary
Sivakarthikeyan’s Rajini Murugan first look was revealed short while ago. Sivakarthikeyan looks colorful in a blue short with a red ribbon tied on his head.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil