சிவகார்த்திகேயன் நடிக்கும் படத்தலைப்பு 'ரஜினி முருகன்'!
சென்னை: இளம் நடிகர்கள் தங்கள் வளர்ச்சிக்கும் பப்ளிசிட்டிக்கும் தங்கள் படத்தின் இயக்குநர் - தயாரிப்பாளர்களை விட அதிகம் நம்புவது சூப்பர் ஸ்டார் ரஜினியைத்தான்.
நான் தீவிர ரஜினி ரசிகன் என்று சொல்லித்தான் பெரும்பாலான நடிகர்கள் அறிமுகமாகிறார்கள்.

அஜீத்
அவ்வளவு ஏன், நான் தலைவர் ரசிகன் என்றுதான் அஜீத் ஆரம்பப் படங்களில் நடித்தார். வான்மதி படத்தில் ரஜினி ரசிகர் மன்றத்தைச் சேர்ந்தவராக வரும் அவர், ரஜினி போஸ்டர்களை ஒட்டுவர்.

விஜய்
நானும் சளைத்தவனில்லை என்ற ரீதியில் களமிறங்கிய விஜய் என் தலைவர் ரஜினிதான் என்று ஒவ்வொரு படத்திலும் தவறாமல் சொல்வார்.

சிம்பு
சிம்பு பண்ணதெல்லாம் மீண்டும் நினைவுபடுத்த வேண்டியதில்லை. நான் சூப்பர் ஸ்டார் ரசிகன் என்றவர், இப்போது நானே சூப்பர் ஸ்டார் என்று சொல்லிக் கொள்கிறார். சூர்யா, ஆர்யா, விஷால், மிர்ச்சி சிவா, சந்தானம், கருணாஸ்.. ரஜினி ரசிகனாக நடிக்காதவர்களை விரல் விட்டு எண்ணிவிடலாம்.

சிவகார்த்தி
சிவகார்த்திகேயன் தன்னை தீவிர ரஜினி ரசிகனாக படங்களில் காட்டிக் கொள்கிறார். இவரும் விமலும் நடித்த கேடி பில்லா கில்லாடி ரங்காவில் இருவரும் ரஜினி ரசிகர்களாகத்தான் வருவார்கள்.

ரஜினி முருகன்
அடுத்தடுத்த படங்களிலும் அப்படியேதான் தன்னைக் காட்டிக் கொள்கிறார் சிவகார்த்திகேயன். இப்போது இன்னும் ஒருபடி மேலே போய் தனது அடுத்த படத்துக்கு 'ரஜினி முருகன்' என தலைப்பு வைத்துள்ளார்.

சூரி
வருத்தப்படாத வாலிபர் சங்கம்' திரைப்படத்தைத் தந்த இயக்குநர் பொன்ராம்தான் இந்தப் படத்தின் இயக்குநர். படத்தின் இன்னொரு ஹீரோ சூரி!
டாணா படத்தில் நடித்து வரும் சிவகார்த்தி அடுத்து ரஜினி முருகனில் நடிக்கிறார்.


Click it and Unblock the Notifications