twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    வசூல் ராஜாவாக மாறிய ரஜினிமுருகன்: 4 நாட்களில் ரூ.19.5 கோடி வசூல்

    By Siva
    |

    சென்னை: சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான ரஜினிமுருகன் படம் ரிலீஸான நான்கே நாட்களில் தமிழகத்தில் மட்டும் ரூ.19.5 கோடி வசூல் செய்துள்ளது.

    இந்த ஆண்டு பொங்கலுக்கு தல, தளபதி, சூப்பர் ஸ்டார் படங்கள் எதுவும் ரிலீஸாகவில்லை. சிவகார்த்திகேயனின் ரஜினிமுருகன், விஷாலின் கதகளி, சசிகுமாரின் தாரை தப்பட்டை, உதயநிதி ஸ்டாலினின் கெத்து ஆகிய நான்கு படங்கள் பொங்கல் பண்டிகை அன்று ரிலீஸாகின.

    நான்கு படங்களுமே ரசிகர்களை கவர்ந்துள்ளன.

    ரஜினிமுருகன்

    ரஜினிமுருகன்

    பொங்கலுக்கு நான்கு படங்கள் ரிலீஸானபோதிலும் பொன்ராம் இயக்கத்தில் சிவா, கீர்த்தி சுரேஷ் நடித்த ரஜினிமுருகன் தான் வெற்றியாளராக ஆகியுள்ளது.

    வசூல்

    வசூல்

    ரஜினிமுருகன் ரிலீஸான நான்கே நாட்களில் தமிழகத்தில் மட்டும் ரூ. 19.5 கோடி வசூல் செய்துள்ளது. பாக்ஸ் ஆபீஸில் தொடர்ந்து தனது வசூல் வேட்டையை நடத்தி வருகின்றது.

    சென்னை

    சென்னை

    ரஜினிமுருகன் சென்னையில் மட்டும் நான்கு நாட்களில் ரூ.96.21 லட்சம் வசூலித்துள்ளது. ரஜினிமுருகனை அடுத்து சென்னையில் தாரை தப்பட்டை ரூ. 79.73 லட்சம் வசூல் செய்துள்ளது.

    குடும்ப படம்

    குடும்ப படம்

    ரஜினி முருகன் படத்தை மக்கள் குடும்பம், குடும்பமாக சென்று பார்த்து வருகிறார்கள். அதனால் படம் நிச்சயம் பல கோடிகளை வசூல் செய்யும் என்று கூறப்படுகிறது.

    English summary
    Sivakarthikeyan's Rajinimurugan has emerged as the winner of the Pongal release movies. It has collected Rs. 19.5 crore in just four days in TN alone.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X