நிஜமான “ரஜினிமுருகன் டீ ஸ்டால்“..வாழ்த்து கூறிய சிவகார்த்திகேயன்!
சென்னை : சிவகார்த்திகேயன், கீர்த்தி சுரேஷ் நடிப்பில் கலக்கலான காமெடியுடன், பல சென்டிமென்ட் காட்சிகளை கொண்டு வெளியாகி வெற்றிப்பெற்ற திரைப்படம் தான் ரஜினிமுருகன்.
இயக்குனர் பொன்ராஜ் உடன் இணைந்து இரண்டாவது முறையாக பணியாற்றிய இந்த படம் பல தரப்பு மக்களையும் கவர்ந்து மிகப்பெரிய வெற்றி பெற்றது.
இந்நிலையில் இந்த படத்தில் சிவகார்த்திகேயன் மற்றும் சூரி என இருவரும் டீக்கடை வைத்து நடத்தி இருந்ததை போன்று நிஜத்திலும் ஒரு நிகழ்வு நடந்துள்ளதை பார்த்த சிவகார்த்திகேயன் அவருக்கு வாழ்த்துக்களை கூறியுள்ளார்.

அசால்ட்டான நகைச்சுவை
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக உயர்ந்து வரும் சிவகார்த்திகேயன் தனது இயல்பான நடிப்பின் மூலமும், அசால்ட்டான நகைச்சுவை உணர்வின் மூலம் தொலைக்காட்சி தொகுப்பாளராக இருந்து தற்போது தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத மிகப்பெரிய ஹீரோவாக வளர்ந்து நிற்கிறார்.

மீண்டும் இரண்டாம் முறையாக
மெரினா, எதிர்நீச்சல் போன்ற திரைப்படங்கள் நடித்துக்கொண்டிருந்த சிவகார்த்திகேயன் முதல் முறையாக இயக்குனர் பொன்ராம் உடன் இணைந்து கிராமத்து பின்னணி கதையம்சத்தில் உருவான வருத்தப்படாத வாலிபர் சங்கம், யாரும் எதிர்பாராத வகையில் மிகப்பெரிய வெற்றி அடைந்ததை தொடர்ந்து இந்தக் கூட்டணி மீண்டும் இரண்டாம் முறையாக ரஜினிமுருகன் திரைப்படத்தில் இணைந்துள்ளது.

ரஜினியின் பெயரில்
இயல்பிலேயே ரஜினிகாந்தின் தீவிர ரசிகரான சிவகார்த்திகேயன், இந்தப்படத்தில் ரஜினி ரசிகராக மட்டுமல்லாமல் ரஜினியின் பெயரில் ஒரு டீ கடையை நடத்துவது போல நடித்திருப்பார். இயக்குனர் லிங்குசாமியின் திருப்பதி பிரதர்ஸ் நிறுவனம் தயாரித்திருந்த இந்த திரைப்படம் பல்வேறு சிக்கல்களைத் தாண்டி வெளியிடப்பட்டு மிகப்பெரிய வெற்றி பெற்றது.

இரண்டு வேடங்களில்
சிவகார்த்திகேயனுக்கு மற்றுமொரு கமர்சியல் ஹிட்டாக அமைந்த ரஜினிமுருகன் திரைப்படத்தில் சிவகார்த்திகேயன், சூரி, கீர்த்தி சுரேஷ், ராஜ்கிரண் உள்ளிட்ட பல முன்னணி திரை நட்சத்திரங்கள் நடித்து இருக்க முதல்முறையாக சிவகார்த்திகேயன் இரண்டு வேடங்களில் இந்த திரைப்படத்தில் தோன்றி இருப்பார்.

அதே பெயரில்
ரஜினிமுருகன் திரைப்படத்தின் போக்கில் சிவகார்த்திகேயன் மற்றும் சூரி இணைந்து ரஜினிமுருகன் டீ ஸ்டால் என்ற டீக்கடையை நடத்தி வருவார்கள். தற்பொழுது அதே பெயரில் சிவகார்த்திகேயனின் தீவிர ரசிகர் ஒருவர் ரஜினிமுருகன் டீ ஸ்டால் என்ற பெயரிலேயே டீக்கடை ஒன்றை புதிதாக திறந்துள்ளார்.

ட்விட்டர் பக்கத்தில்
இதைப்பார்த்த சிவகார்த்திகேயன் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் அந்த தீவிர ரசிகரின் "ரஜினிமுருகன் டீ ஸ்டால் பதிவை பகிர்ந்து " நம்ம நண்பருக்கு வாழ்த்துக்கள் ப்ரோ" என தனது பாணியில் அந்த டீக்கடை ரசிகருக்கு தனது வாழ்த்துக்களை கூறியுள்ளார். இதைப்பார்த்த சிவகார்த்திகேயன் ரசிகர்கள் இதை பாராட்டி வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











