Rajini: ரஜினிக்கு BMW கார்... சூர்யவம்சம் சின்ராசு நிலைக்கு ஆளான நெல்சன்... உச்சக்கட்ட பரிதாபம் இது!

சென்னை: சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான ஜெயிலர் மிகப் பெரிய வெற்றிப் பெற்றுள்ளது.

நெல்சன் இயக்கிய இந்தப் படத்துக்கு கலவையான விமர்சனங்கள் கிடைத்தாலும் 600 கோடிக்கும் மேல் வசூலித்துள்ளது.

இதனையடுத்து ஜெயிலர் வெற்றியை கொண்டாடும் விதமாக் ரஜினிக்கு BMW X7 காரை பரிசாக கொடுத்துள்ளார் கலாநிதி மாறன்.

ஆனால் இயக்குநர் நெல்சனுக்கு இதுவரை ரஜினியோ கலாநிதி மாறனோ கார் பாரிசளிக்கவில்லை என நெட்டிசன்கள் ட்ரோல் செய்யத் தொடங்கிவிட்டனர்.

 Rajini: Nelson fans are criticizing Rajini for gifting him a BMW car

உச்சக்கட்ட பரிதாபத்தில் நெல்சன்: பேட்ட, தர்பார், அண்ணாத்த படங்களின் தோல்வியால் துவண்டு இருந்த ரஜினி, நெல்சன் இயக்கிய ஜெயிலர் படத்தில் நடித்தார். விஜய்யின் பீஸ்ட் தோல்வியால் நெல்சன் மீதும் பல விமர்சனங்கள் இருந்தன. ஆனாலும் நெல்சனை நம்பி ஜெயிலர் படத்தில் நடித்தார் சூப்பார் ஸ்டார். இறுதியாக இந்தப் படம் கடந்த மாதம் 10ம் தேதி வெளியாகி இந்தாண்டின் சூப்பர் ஹிட் லிஸ்ட்டில் இணைந்துள்ளது.

ஜெயிலர் திரைப்படம் மூன்று வாரங்களில் 600 கோடி ரூபாய் வரை வசூலித்துள்ளதாக சொல்லப்படுகிறது. இதன்மூலம் இந்தப் படம் ரஜினிக்கு மிகப் பெரிய கம்பேக் கொடுத்துள்ளதோடு, அவரது மார்க்கெட் வேல்யூவையும் எகிற வைத்துள்ளது. இதனால், ரஜினிகாந்த், இயக்குநர் நெல்சன், சன் பிக்சர்ஸ் கலாநிதிமாறன் உட்பட ஜெயிலர் படக்குழுவினர் அனைவரும் உற்சாகமாக உள்ளனர்.

இதனையடுத்து ஜெயிலர் சக்சஸ் பார்ட்டியில் கேக் வெட்டி ரஜினி, இயக்குநர் நெல்சன் உட்பட அனைவருக்கும் வாழ்த்துகள் மட்டும் கூறிவிட்டு விடைபெற்றார். விக்ரம் படத்தின் வெற்றியை பாராட்டி லோகேஷ் கனகராஜ்ஜுக்கு கார் பரிசளித்தார் கமல். அதுபோல ரஜினியும் நெல்சனுக்கு கார் பரிசு கொடுப்பார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், நெல்சனுக்கு ஏமாற்றமே மிஞ்சியது. இந்நிலையில் ரஜினிக்கு கலாநிதிமாறன் செக் கொடுக்கும் போட்டோவும் நேற்று வெளியானது. இது ஜெயிலர் லாபத்தில் ரஜினிக்கு வழங்கப்பட்ட ஷேர் 100 கோடி ரூபாய் என சொல்லப்படுகிறது.

இந்நிலையில், தற்போது ரஜினிக்கு BMW X7 காரை பரிசாக கொடுத்துள்ளார் கலாநிதி மாறன். இரண்டு BMW கார்களை ரஜினியின் முன்பு நிறுத்திய கலாநிதிமாறன், அதில் ஒன்றை செலக்ட் செய்யுமாறு கேட்டுக் கொள்கிறார். அப்போது ரஜினி BMW X7 காரை தேர்ந்தெடுக்க, அதன் கீயை ரஜினியிடம் வழங்கியுள்ளார் கலாநிதிமாறன். அதேநேரம் இன்னொரு BMW கார் யாருக்கு கொடுக்கப்பட்டது என்பது இன்னும் தெரியவில்லை.

 Rajini: Nelson fans are criticizing Rajini for gifting him a BMW car

இதனிடையே நெல்சனின் நிலையை மீம்ஸ் போட்டு கலாய்த்து வருகின்றனர் நெட்டிசன்கள். அதாவது ஜெயிலர் வெற்றிக்கு இயக்குநர் நெல்சனும் கடுமையாக உழைத்துள்ளார். அப்படி இருக்கையில் ஹீரோ ரஜினிக்கு மட்டும் BMW X7 கார் பரிசாக கொடுக்கப்பட்டுள்ளது. ஆனால், நெல்சனை இதுவரை ரஜினியும் கண்டுகொள்ளவில்லை, சன் பிக்சர்ஸும் கவனிக்கவில்லை என நெட்டிசன்கள் கலாய்த்து வருகின்றனர்.

முக்கியமாக சூர்யவம்சம் படத்தில் வரும் ஒரு காட்சியில், ஃபேமிலி போட்டோ எடுக்கும் போது சின்ராசு மட்டும் தனியாக ஓரமாக நின்றுகொண்டு இருப்பார். அதேபோல், நெல்சனை சன் பிக்சர்ஸும் ரஜினியும் ஓரங்கட்டிவிட்டதாக மீம்ஸ் போட்டு ட்ரோல், செய்து வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X