Rajini: “ரஜினியோட வன்மம் தான் நீலாம்பரி கேரக்டர்... பெண்களை கேவலப்படுத்துறது தான் வேலையே..”

சென்னை: சூப்பர் ஸ்டார் ரஜினி தற்போது தசெ ஞானவேல் இயக்கும் தலைவர் 170 படத்தில் நடித்து வருகிறார்.

முன்னதாக அவர் நடித்த ஜெயிலர் திரைப்படம் கடந்த ஆகஸ்ட் மாதம் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றது.

இந்நிலையில், ரஜினியின் படையப்பா படத்தில் பிரபலமான நீலாம்பரி கேரக்டரை நெட்டிசன்களை திடீரென விமர்சித்து வருகின்றனர்.

ரஜினியின் வன்மம் தான் நீலாம்பரி கேரக்டர் உருவாக காரணம் என கூறிவருவது வைரலாகி வருகிறது.

 Rajini: Netizens are criticizing Rajini for Padayappa Neelambari character

ரஜினியோட வன்மம் தான் நீலாம்பரி கேரக்டர்
கோலிவுட் சூப்பர் ஸ்டார் ரஜினி நடிப்பில் கடைசியாக ஜெயிலர் திரைப்படம் வெளியானது. நெல்சன் இயக்கத்தில் சன் பிக்சர்ஸ் தயாரித்த ஜெயிலர், பாக்ஸ் ஆபிஸில் 600 கோடிக்கும் மேல் வசூலித்தது. அதனைத் தொடர்ந்து தற்போது தசெ ஞானவேல் இயக்கும் தலைவர் 170 படத்தில் நடித்து வருகிறார் ரஜினி. இந்நிலையில், படையப்பா படத்தின் நீலாம்பரி கேரக்டர், ரஜினியின் வன்மத்தால் உருவானது என நெட்டிசன்கள் திடீரென விமர்சனம் செய்து வருகின்றனர்.

அதாவது, சினிமாவில் பெண்களை உயர்த்தியது சூப்பர் ஸ்டார் ரஜினி தான் என, அவரது ரசிகர் டிவிட்டர் போஸ்ட் போட்டிருந்தார். அதில், "ஆண்கள் மட்டுமே ஆதிக்கம் செலுத்தி வந்த 100 ஆண்டு தமிழ் சினிமாவில், ஆண்களுக்கு நிகராக பெண்களையும் உயர்த்திய பெருமை சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தையே சேரும். வில்லன்கள் என்றாலே அது ஆண்களாக தான் இருக்க வேண்டும் என்ற பிம்பத்தை உடைச்சு, வில்லன்களுக்கு நிகரா வில்லிகளை உருவாக்கி பெண்களுக்கென தனி கவுரவத்தையம் அங்கீகாரத்தையும் பெற்றுகொடுத்த கலைஞன்னா அது சூப்பர் ஸ்டார் தான்.

கத்தி, அருவா, சைக்கிள் செயின், துப்பாக்கி இவர்களை கொண்டு உருவாக்கப்பட்ட கொடூர வில்லன்களுக்கு சற்றும் சளைத்தவர் அல்ல என்பதை நிரூபித்து காட்டியவர் நீலாம்பரி. எத்தனையோ கொடூர வில்லன்களை பார்த்த 100 ஆண்டு கால தமிழ் சினிமா, நீலாம்பரி என்ற பிடிக்கவாதக்கார வில்லியை அவ்வளவு எளிதில் மறந்து விடுமா? அல்லது மறக்க கூடிய கேரக்டர் தான் நீலாம்பரியா! காலங்கள் கடக்க கடக்க வில்லன்கள் மறையலாம் ஆனால் நீலாம்பரி எனும் வில்லி மக்கள் மனதில் வாழ்ந்துகொண்டு இருப்பார்.

நீலாம்பரி எனும் ரம்யா கிருஷ்ணனுக்கு முன்பே சாந்திதேவி என்ற விஜயசாந்திக்கு, மதிப்பும் மரியாதையையும் கௌரவத்தையும் ஏற்படுத்திக்கொடுத்த கலைஞன் சூப்பர் ஸ்டார். பெண்களுக்கு மரியாதையை ஏற்படுத்திக்கொடுத்த சூப்பர் ஸ்டாருக்கு பெண்களும் அதற்கு நிகரான நன்றிக் கடனை செலுத்தியிருக்கிறார்கள் என்பதே நிதர்சனமான உண்மை. அதற்கு இன்று வரை 7 முதல் 70 வயது வரை உள்ள பெண் ரசிகைகளே சாட்சி.

 Rajini: Netizens are criticizing Rajini for Padayappa Neelambari character

எனவே, வெள்ளையாக இருப்பவர்கள் மட்டுமே சாதிக்க முடியும் என்ற பிம்பத்தை உடைத்து கறுப்பானவர்களும் சாதிக்க முடியும் என்பதை நிரூபித்ததை போல, ஆண்களுக்கு நிகர் பெண்கள் இல்லையா? என்ற கேள்வியையும் உடைத்து தூக்கி எறிந்தவர் சூப்பர் ஸ்டார். டைட்டில் கார்டு, ஹீரோ அறிமுகம், இன்ட்ரோ சாங், பஞ்ச் டயலாக், ஓவர்சீஸ் பாக்ஸ் ஆபிஸ் என தமிழ் சினிமாவையே மாற்றியமைத்த ரஜினிகாந்த் பெண்களுக்கென புது பாதையையும் உருவாக்கி ஆண்களுக்கு நிகராக பெண்களையும் உயர்த்தியவர் என்பதே நிதர்சனமான உண்மை.

வெறும் ஆன்ஸ்க்ரீன் சூப்பர் ஸ்டார் மட்டுமல்ல, எத்தனை ஆண்டுகள் கடந்தாலும் OFF SUPERSTAR-ம் ரஜினிகாந்த் மட்டும தான் என்பதை தலைமுறைகள் பல கடந்தும் வரலாறு பேசும். அன்றும் இன்றும் என்றும் சூப்பர் ஸ்டார் ஒருவரே" என பதிவிட்டுள்ளார். இதற்கு பதிலடி கொடுத்துள்ள நெட்டிசன்கள், "எல்லா பெண்களையும் நெகட்டிவாக காட்டி, திருத்துற மாதிரி காட்டி பெண்கள கேவலப்படுத்தியது ரஜினி தான். ஜெயலலிதா கூட நடிக்க முடியலைன்னு அவங்கள மனசுல நினைச்சு நடித்தது ரஜினியின் வன்மம், இதுல பெரும வேற" என விளாசியுள்ளனர்.

 Rajini: Netizens are criticizing Rajini for Padayappa Neelambari character

ரஜினி ரசிகர் ஒருவர் சில ஆண்டுகளுக்கு முன் டிவிட்டரில் பதிவிட்டதற்கு, நெட்டிசன்கள் தற்போது பதிலடி கொடுத்துள்ளது வைரலாகி வருகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X