Rajini: ஜெயிலர் ரிலீஸுக்கு முன்னாடி இது நடக்கல... ரஜினி கிரேட் எஸ்கேப்... பங்கம் செய்த நெட்டிசன்கள்
சென்னை: ரஜினிகாந்த் நடித்த ஜெயிலர் திரைப்படம் கடந்த 10ம் தேதி ரிலீஸானது.
ஜெயிலர் ரிலீஸாகும் போது ரஜினி இமயமலைக்கு பயணம் சென்றுவிட்டார்.

அதனைத் தொடர்ந்து உபி சென்றுள்ள ரஜினிகாந்த், அம்மாநில முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் காலில் விழுந்து ஆசிப் பெற்றார்.
இந்த வீடியோ வைரலான நிலையில், நெட்டிசன்கள் ரஜினியை ட்ரோல் செய்து வருகின்றனர்.
ரஜினியை பங்கம் செய்த நெட்டிசன்கள்: ரஜினி நடிப்பில் நெல்சன் இயக்கிய திரைப்படம் ஜெயிலர். சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் பிரம்மாண்டமாக உருவான இந்தப் படம், கடந்த வாரம் வெளியானது. ரஜினியுடன் ரம்யா கிருஷ்ணன், தமன்னா, மோகன்லால், சிவராஜ்குமார், ஜாக்கி ஷெராஃப், யோகி பாபு, வசந்த் ரவி, ரெடின் கிங்ஸ்லி, விநாயகன் உட்பட இன்னும் ஏராளமான நட்சத்திரங்கள் நடித்திருந்தனர்.
பக்கா கமர்சியல் படமாக வெளியான ஜெயிலருக்கு ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு கிடைத்தது. நீண்ட இடைவேளைக்குப் பிறகு இது சூப்பர் ஸ்டாரின் சம்பவம் என ரசிகர்கள் கொண்டாடித் தீர்த்தனர். தமிழ்நாடு மட்டுமின்றி கேரளா, ஆந்திரா உட்பட உலகம் முழுவதும் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. இதனால் உலகம் முழுவதும் 10 நாட்களில் 450 கோடி ரூபாய் வரை வசூலித்துள்ளது ஜெயிலர்.
இதனால், இனிவரும் நாட்களில் ஜெயிலர் வசூல் அதிகரிக்கும் என பாக்ஸ் ஆபிஸ் வட்டாரங்கள் நம்பிக்கை தெரிவித்து இருந்தன. ஆனால், இதையெல்லாம் சூப்பர் ஸ்டார் ரஜினியே நேற்று சுக்குநூறாக உடைத்துவிட்டார். ஜெயிலர் ரிலீஸ் நேரத்தில் இமயமலை சென்றிருந்த ரஜினி, தற்போது உபியில் வலம் வருகிறார். நேற்று அம்மாநில முதலமைச்சர் யோகி ஆதித்யநாத்தை சந்தித்த ரஜினி, அவரது காலில் விழுந்து ஆசி வாங்கினார்.

அதனைத் தொடர்ந்து உபி முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் ரஜினியின் குடும்பத்தினருடன் இணைந்து ஜெயிலர் படம் பார்க்கவிருப்பதாக சொல்லப்பட்டது. ஆனால், யோகி ஆதித்யநாத் ரஜினியுடன் இணைந்து ஜெயிலர் பார்க்க நேரம் இல்லையென கூறிவிட்டாராம். அதனால் அம்மாநில துணை முதலமைச்சர் கேஷ்வ் பிரசாத் மவுரியா ரஜினி, அவரது மனைவி லதாவுடன் இணைந்து ஜெயிலர் பார்த்தார். அவரும் பாதியிலேயே கிளம்பிவிட்டது குறிப்பிடத்தக்கது.
இந்த சம்பவத்தை வைத்து சூப்பர் ஸ்டார் ரஜினியை நெட்டிசன்கள் ட்ரோல் செய்து வருகின்றனர். "நல்லவேளை இந்த சம்பவம் ஜெயிலர் ரிலீஸுக்கு முன்னாடியே நடக்கல. அப்படி நடந்திருந்தா படம் படுதோல்வி அடைந்திருக்கும். நிச்சயமாக தமிழ்நாட்டு ரசிகர்களிடம் ஜெயிலருக்கு வரவேற்பு இருந்திருக்காது" என ட்ரோல் செய்து வருகின்றனர். அதேபோல், வாரிசு வசூலை கூட இந்நேரம் ஜெயிலரால் பிரேக் செய்திருக்க முடியாது எனவும் கமெண்ட்ஸ் செய்து வருகின்றனர்.
ஜெயிலர் ரிலீஸுக்கு முன்பே உபி முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் காலில் ரஜினி விழுந்திருந்தால், ஜெயிலர் படத்தின் நிலை இப்போது படுமோசமாக இருந்திருக்கும் எனவும் கமெண்ட்ஸ் செய்து வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











