Rajini: பீஸ்ட்டை ரோஸ்ட் செய்த ஜெயிலர்... ரஜினிக்கு Cash Cheque... விஜய்க்கு செக்மேட்... கேம் ஓவர்

சென்னை: ரஜினியின் ஜெயிலர் திரைப்படம் பாக்ஸ் ஆபிஸில் 600 கோடி ரூபாய் வரை வசூலித்துள்ளது.இதனையடுத்து ஜெயிலர் பாக்ஸ் ஆபிஸ் வசூலில் 100 கோடி ஷேருடன் BMW X7 காரையும் ரஜினிக்கு பரிசாக கொடுத்தார் கலாநிதிமாறன்.

இதனால் உற்சாகமான ரஜினி ரசிகர்கள், விஜய்யையும் அவரது பீஸ்ட் படத்தையும் ட்ரோல் செய்து வருகின்றனர்.பீஸ்ட் படத்தால் சன் பிக்சர்ஸ் அடைந்த நஷ்டத்தையும் ஜெயிலர் தான் தீர்த்துவைத்துள்ளது என பங்கமாக கலாய்த்து வருகின்றனர்.

 Rajini: Netizens troll that Rajinis Jailer is more successful than Vijays Beast

பீஸ்ட்டை ரோஸ்ட் செய்த ஜெயிலர்: சூப்பர் ஸ்டார் ரஜினி நடிப்பில் நெல்சன் இயக்கிய ஜெயிலர் திரைப்படம் ஆகஸ்ட் 10ம் தேதி வெளியானது. சன் பிக்சர்ஸ் தயாரித்த இந்தப் படத்துக்கு முதல் நாளில் இருந்தே நல்ல ஓபனிங் கிடைத்தது. முக்கியமாக முதல் ஒரு வாரத்துக்கான டிக்கெட் புக்கிங் வேகமாக விற்றுத் தீர்ந்தன. இதனால், முதல் வாரத்தில் உலகம் முழுவதும் 375 கோடி ரூபாய் வசூலித்தது ஜெயிலர்.

இரண்டாவது 150 கோடி உட்பட மொத்தமாக 525 கோடி வசூலை கடந்த ஜெயிலர், இதுவரை 600 கோடி ரூபாய் வரை கலெக்‌ஷன் செய்துள்ளதாக சொல்லப்படுகிறது. இதனையடுத்து ரஜினியை நேரில் சந்தித்த கலாநிதி மாறன், ஜெயிலர் லாபத்தில் சூப்பர் ஸ்டாருக்கு ஷேர் கொடுத்திருந்தார். அதன்படி சம்பளம் 80 கோடி ரூபாய் தவிர, லாபத்தில் பங்காக 100 கோடி ரஜினிக்கு கொடுக்கப்பட்டதாக சொல்லப்படுகிறது. அதனைத் தொடர்ந்து ரஜினிக்கு இன்னொரு சர்ப்ரைஸ்ஸும் கொடுத்தார் கலாநிதிமாறன்.

 Rajini: Netizens troll that Rajinis Jailer is more successful than Vijays Beast

அதாவது ரஜினியின் வீட்டுக்கே இரண்டு BMW கார்களை கொண்டு சென்ற கலாநிதிமாறன், அதில் ஒன்றை ரஜினியே தேர்ந்தெடுக்கலாம் என்றார். அவரும் சுமார் 1.5 கோடி மதிப்பிலான BMW X7 காரை செலக்ட் செய்து கலாநிதி மாறனுக்கு நன்றி தெரிவித்தார். இதனால், உற்சாகமான ரஜினி ரசிகர்கள் ரஜினிக்கு BMW X7 கார் பரிசாக கொடுக்கப்பட்ட வீடியோவை ட்ரெண்ட் செய்து வருகின்றனர். அதுமட்டும் இல்லாமல் விஜய்யையும் ட்ரோல் செய்துவருவது வைரலாகியுள்ளது.

வாரிசு இசை வெளியீட்டு விழாவில், விஜய் தான் அடுத்த சூப்பர் ஸ்டார் என சரத்குமார் பேசியிருந்தார். இந்த சர்ச்சை ஜெயிலர் இசை வெளியீட்டு விழா வரையிலும் தொடர்ந்தது. ஜெயிலர் படத்தின் பாடல்களிலும் சூப்பர் ஸ்டார் டைட்டில் சர்ச்சைக்கு பஞ்ச் கொடுத்த ரஜினி, இசை வெளியீட்டு விழாவிலும் குட்டி ஸ்டோரி சொல்லி மாஸ் காட்டினார். அப்போது பேசிய கலாநிதி மாறனும், ரஜினி தான் நிரந்தரமான சூப்பர் ஸ்டார், அவரைப் போல 70 வயது வரை நடித்துவிட்டு சூப்பர் ஸ்டார் டைட்டிலுக்கு மற்ற நடிகர்கள் ஆசைபடலாம் என்றிருந்தார்.

ரஜினி, கலாநிதி மாறன் இருவருமே விஜய்யை தான் அட்டாக் செய்ததாக சொல்லப்பட்டது. அதேபோல், பீஸ்ட் படத்தின் தோல்வி குறித்து ஜெயிலர் மேடையில் ரஜினி பேசியிருந்தார். மேலும் பீஸ்ட் தோல்வியால் இயக்குநர் நெல்சனை தூக்கிவிடலாம் எனவும் சிலர் அட்வைஸ் செய்ததாகக் கூறியிருந்தார். பின்னர் நெல்சன் மீது நம்பிக்கை வைத்தே ஜெயிலரில் நடித்தது குறித்தும் ரஜினி குறிப்பிட்டார்.

இந்நிலையில், பீஸ்ட் படத்தின் தோல்விக்கும் சேர்த்து ஜெயிலர் பாக்ஸ் ஆபிஸில் வசூல் செய்துள்ளதாக நெட்டிசன்கள் ட்ரோல் செய்து வருகின்றனர். பீஸ்ட் வெளியான போது விஜய்யை சந்திக்காத கலாநிதி மாறன், இப்போது ரஜினியை சந்தித்து அவரது ஷேருடன் BMW X7 காரும் பரிசாக கொடுத்துள்ளார். இதிலிருந்தே யார் பாக்ஸ் ஆபிஸ் கிங் என தெரிவதாக ரஜினி ரசிகர்கள் விஜய்யை ட்ரோல் செய்து வருகின்றனர். இதற்கு லியோ படம் வெளியாகும் போது இதற்கு விடை தெரியும் என விஜய் ரசிகர்கள் பதிலடி கொடுத்து வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X