Don't Miss!
- Sports GT vs DC : அந்த இந்திய வீரரை தான் மிஸ் செய்கிறோம்..ஹர்திக் பாண்டியாவை மறைமுகமாக தாக்கிய ரஷீத் கான்!
- Automobiles ஸ்கோடா கார்களை வாங்க ஆள் இல்ல!! கம்மியான விலையில் கார்களை விற்பனை செய்தும் பயன் இல்லை!
- Technology இனி நோக்கியா போன் எதுக்கு? 50MP செல்பி கேமரா.. 128ஜிபி மெமரி.. புது HMD போன் ரெடி.. எந்த மாடல்?
- Finance நெருங்கிய தேர்தல்.. பெட்ரோல், டீசல் விலையில் மாற்றம் ஏற்படுமா? இன்றைய ரேட் என்ன?
- News மதுரை தொகுதி: 'மாமதுரை' மண்ணில் மீண்டும் செங்கொடி பறக்கும்? இரட்டை இலை இனி ஒருமுறை துளிர்க்கும்?
- Lifestyle வெங்காயம் தக்காளி இல்லாமலே கார சட்னியை எப்படி செய்யணும்-ன்னு தெரியுமா?
- Travel தமிழ்நாட்டுக்கு உள்ளேயும், பக்கத்துலயும் இவ்வளோ அழகான பெரிய நீர்வீழ்ச்சிகள் இருக்கு தெரியுமா?
- Education யுபிஎஸ்சி தேர்வு முடிவுகள் ரிலீஸ்..லக்னோ இளைஞர் ஆதித்யா ஸ்ரீவஸ்தவா முதலிடம்
அஜித்துக்கு தலன்னு பேரு வச்சது யாரு தெரியுமா? ஏஆர் முருகதாஸ் கூறிய முக்கிய தகவல்!
சென்னை: நடிகர் அஜித்துக்கு தல என்று பெயர் வைத்தது யார் என்ற தகவலை இயக்குநர் ஏஆர் முருகதாஸ் தெரிவித்துள்ளார்.
ஏஆர் முருகதாஸ் இயக்கத்தில் முதல் முறையாக ரஜினி நடித்திருக்கும் படம் தர்பார். இந்த படம் வரும் பொங்கலுக்கு ரிலீஸ் ஆகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
ரஜினிகாந்த் நீண்ட ஆண்டுகளுக்குப் பிறகு காக்கிச்சட்டையில் போலீஸ் அதிகாரியாக இந்தப் படத்தில் நடித்திருக்கிறார். இதனால் படம் எப்போது ரிலீஸ் ஆகும் என்று ரசிகர்கள் பெரும் எதிர்பார்ப்பில் காத்திருக்கின்றனர்.
லேடி ஆக்ஷன் சூப்பர்ஸ்டாராக மாறிய த்ரிஷா.. ராங்கி டீஸர் ரிலீஸ்!
நிலாவில் இறங்கியது போல்
இந்நிலையில் நேற்றைய நிகழ்ச்சியில் பேசிய இயக்குநர் ஏஆர் முருகதாஸ், சின்ன வயதில் நிலாவை பார்த்து சாப்பாடு சாப்பிடுவோம். இப்போது நிலாவில் இறங்கியது போல் உள்ளது.
மூத்த ரசிகன்
அந்தளவுக்கு மகிழ்ச்சியாக உள்ளது. ரஜினியை பார்த்து பார்த்து ரசித்தவன் நான். உங்கள் எல்லோரையும் விட ரஜினிக்கு மூத்த ரசிகன் என்றார்.
ஆடத் தொடங்கிவிடும்
சினிமா திமிரையும் ஆணவத்தையும் கொடுக்கும். ஒரு குச்சியை கதாநாயகன் என்று சொன்னாலே அது திமிருடன் ஆடத் தொடங்கிவிடும்.
வாழ்க்கை முழுவதும்
ஆனால் 40 ஆண்டுகளுக்கும் மேலாக எந்த கர்வமும் இல்லாமல் இருப்பவர் ரஜினி. வாழ்க்கை முழுவதும் ரஜினியை பின்பற்ற நினைக்கிறேன்.
அஜித்துக்கு தல என்ற பெயர்
ஸ்டைலில் எம்ஜிஆருக்கு பிறகு ரஜினிதான் என்று ஏஆர் முருகதாஸ் கூறியதும் அரங்கம் கரகோஷத்தால் அதிர்ந்தது. தொடர்ந்து பேசிய ஏஆர் முருகதாஸ் அஜித்துக்கு தல என்று பெயர் வைத்ததே ரஜினி தான் என்றார்.
டிவிட்டரில் ட்ரென்டிங்
இந்த தகவலால் அஜித் ரசிகர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். நேற்று தர்பார் இசை வெளியீட்டு விழா நிறைவடைந்த நிலையில் இன்றும் #DarbarAudioLanuch என்ற ஹேஷ்டேக் டிவிட்டரில் ட்ரென்ட்டாகி வருகிறது.