Rajini: மீனாவ அப்படி பார்த்து ஆடி போய்ட்டேன்... அதனால இன்னும் என் மேல கோவமா இருக்காங்க: ரஜினி ஓபன்!

சென்னை: 1990களில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் கண்ணழகி மீனா.

குழந்தை நட்சத்திரமாக சினிமாவில் அறிமுகமான மீனா, டாப் ஹீரோக்களுடன் ஜோடியாக நடித்து அசத்தியுள்ளார்.

இந்நிலையில், திரையுலகில் 40 ஆண்டுகளை கடந்துவிட்ட மீனாவை பாராட்டும் வகையில், 'மீனா 40' என்ற நிகழ்ச்சி நடத்தப்பட்டது.

அதில் பங்கேற்ற சூப்பர் ஸ்டார் ரஜினி, மீனாவுடன் நடித்த சில முக்கியமான தருணங்களை நினைவுகூர்ந்துள்ளார்.

 Rajini opened up about his experience of acting with Meena

மீனாவ அப்படி பார்த்து ஆடி போய்ட்டேன்
குழந்தை நட்சத்திரமாக திரையுலகில் அறிமுகமான மீனா, பின்னர் முன்னணி நடிகையாக வலம் வந்தார். ரஜினி, கமல், விஜயகாந்த், சரத்குமார், கார்த்திக், பிரபு, முரளி, சத்யராஜ், அஜித் போன்ற முன்னணி ஹீரோக்களுக்கு ஜோடியாக நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், திரையுலகிற்கு வந்து 40 ஆண்டுகளை நிறைவுசெய்துள்ள மீனாவுக்கு, சமீபத்தில் பாராட்டு விழா நடைபெற்றது.

மீனா 40 என்ற பெயரில் நடைபெற்ற இந்த விழாவில் சூப்பர் ஸ்டார் ரஜினி, சரத்குமார், ராஜ்கிரண், பிரபுதேவா, போனி கபூர் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். அப்போது பேசிய ரஜினி, தன்னுடன் நடித்த நடிகைகளில் தனக்கு மிகவும் பிடித்த இரண்டு பேர், ஸ்ரீதேவியும் மீனாவும் தான் என்றார். இவர்களை பிடிக்கும் என சொல்வதால் மற்ற நடிகைகள் கோபப்பட மாட்டார்கள் என சிரித்துக்கொண்டே பேசினார் ரஜினி.

மேலும், முதன்முறையாக 'எங்கேயோ கேட்டக் குரல்' படத்தின் ஷூட்டிங்கில் மீனாவை சிறுமியாக பார்த்தேன். நல்ல பப்ளியாகவும் சஃப்பியாகவும் க்யூட்டாக இருந்தார். அதேபோல் அன்புள்ள ரஜினிகாந்த் படத்திலும் மீனாவை சிறுமியாக பார்த்தது இப்போதும் நினைவில் உள்ளது. ஆனால், தன்னால் நம்பவே முடியாதது என்றால், அது எஜமான் படம் தான் என்றுள்ளார்.

எஜமான் படத்தின் பேச்சுவார்த்தை ஏவிஎம் ஸ்டுடியோவில் நடைபெற்று கொண்டிருந்தது. அப்போது தன்னிடம் யாரை ஹீரோயினாக போடாலாம் என கேட்டனர். ஆனால், தான் சொன்னவர்களை இயக்குநரும் தயாரிப்பாளரும் ஓக்கே பண்ணவில்லை. அவர்கள் தான் மீனாவை நடிக்க வைக்கலாம் என்றார்கள். என்னால் அப்போது அதை ஏற்றுக்கொள்ள முடியவில்லை.

அதனால், அந்நேரம் மீனா நடித்திருந்த தெலுங்கு படத்தில் இருந்து இரண்டு பாடல்களை போட்டுக் காட்டினர். அதைப் பார்த்ததும் நான் அப்படியே ஆடிப்போய்ட்டேன். இது நாம பார்த்த அமுல் பேபி மீனாவா என எனக்கே சந்தேகம், அப்படியே அவ்ளோ அழகா மாறிருந்தாங்க. நமக்கு பொண்ணா நடிச்ச மீனா இப்ப ஜோடியா நடிக்குற அளவுக்கு மாறிடுச்சே, இப்படியும் நடக்குமான்னு எனக்கே ஆச்சர்யம் என தெரிவித்துள்ளார்.

 Rajini opened up about his experience of acting with Meena

மேலும், எஜமான் படப்பிடிப்பு தொடங்கியபோது என் முன்னால் வர வெட்கப்பட்ட மீனா, முடியும் போது பேசிக்கிட்டே இருந்தாங்க. அதன்பின்னர் தான் வீரா படத்திலும் ஜோடியாக நடித்தோம். ஆனால், படையப்பா படத்தில் நீலாம்பரி கேரக்டரில் நான் தான் நடிப்பேன் என மீனா அடம்பிடித்தார். அந்த கேரக்டர் அவருக்கு செட் ஆகாது என நானும் கேஎஸ் ரவிக்குமாரும் சொல்லி புரியவைத்தோம்.

அதேநேரம் அவரிடம் செளந்தர்யா நடித்த கேரக்டரில் வேணும்ன்னா நடிங்கன்னு சொல்லிப் பார்த்தோம். ஆனா, மீனாவுக்கு நீலாம்பரி கேரக்டர் தான் பிடித்திருந்தது. அதில் ரம்யா கிருஷ்ணன் நடித்ததால் மீனாவுக்கு என் மேல கோபம். அந்த கோபம் இன்னும் அவங்களுக்கு போகவே இல்லை என செம்ம ஜாலியாக மீனாவை கலாய்த்துள்ளார் ரஜினிகாந்த். இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X