சிறுத்தைக்கு வில்லனான சிங்கம்.. காரணம் ரஜினி.. கோடம்பாக்கத்தில் புது பஞ்சாயத்து!

By Staff

சென்னை: நான் யானை இல்ல. விழுந்தா எழுந்திருக்க முடியாம போறதுக்கு. நான் குதிரை. விழுந்தா, அடுத்து துள்ளி எழுவேன்.. என்று எப்போதோ ஒரு மேடையில் டயலாக் பேசிய ரஜினியை இப்போது வெச்சு செய்ய துவங்கிவிட்டனர் கோடம்பாக்கத்தின் இரண்டாம் நிலை ஹீரோக்கள்.

தனது கோமாளி படத்தில் ரஜினிகாந்த் பல வருடங்களாக அரசியலுக்கு வருகிறேன், வருகிறேன்...என்று இழுப்பதை ஒரு ஸீனாக வைத்து சீண்டியிருக்கிறார் ஜெயம் ரவி. இந்த பஞ்சாயத்து முடிவதற்குள் சூர்யாவும் ரஜினிக்கு ஒரு இம்சையை இழுத்து விட்டிருக்கிறார்.

Rajini or Surya, siruthai sivas dilemma

அதாவது ஸ்டுடியோ க்ரீன் ஞானவேல் ராஜாவுக்கு 'சிறுத்தை' பட சமயத்திலேயே இன்னொரு படம் செய்து தருவதாக ஒப்பந்தம் போட்டிருந்தார் இயக்குநர் சிறுத்தை சிவா. அதை இந்தா அந்தா என்று இழுத்தடித்துக் கொண்டே இருந்தார். விஸ்வாசத்தின் மெஹா ஹிட்டுக்குப் பிறகு சிவாவை ஞானம் ஓவராய் நச்சரிக்க துவங்கினார். ஆனால் இந்த நேரத்தில் ரஜினியிடம் ஒரு கதையை சொல்லிவிட்டு, அவரது ரியாக்ஷனுக்காக காத்திருந்தார் சிவா. ஆனால் உருப்படியாக ஒன்றும் நடக்கவில்லை.

இந்த நிலையில், ஞானவேல் ராஜாவும் ஓவராய் கேட்டதால், சூர்யா நடிப்பில், சிவா இயக்கும் பிராஜெக்ட் ஒன்றை கையிலெடுக்கும் முடிவுக்கு வந்தனர். இதற்கான அடிப்படை திட்டங்கள் போடப்பட்டன. தொடர் ஃபிளாப்புகளால் சுருண்டு கிடக்கும் சூர்யாவும், கமர்ஸியல் என்டர்டெயினர் சிவாவின் மூலமாக மீண்டும் மேலே வரலாம் என ஆசைப்பட்டு, சூரரைப் போற்று படத்துடன் சேர்த்து இதற்கும் தயாரானார்.

Rajini or Surya, siruthai sivas dilemma

இந்த நிலையில்தான் ரஜினி வடிவில் வந்தது சூர்யாவுக்கு ஆப்பு. அதாவது தர்பார் படத்தின் கடைசி ஷெட்யூலை நெருங்கிவிட்ட ரஜினி, அதன் பிறகு சில நாட்கள் இமயமலை போகிறார். அதற்குப் பிறகு உடனடியாக ஒரு படத்தில் நடிக்க இறங்குகிறார். இந்த அவசரத்துக்கு காரணம், அரசியல் கட்சி துவங்க வேண்டும் எனும் நிர்பந்தத்தில் இருந்து தப்பிக்கத்தான்.

எனவேதான் சிவாவை அழைத்து 'அந்த கதை ஓ.கே. சின்னச்சின்ன மாற்றங்கள் பண்ணிடலாம். நான் ஷூட்டுக்கு ரெடியாகிடுறேன்.' என்று இன்ப அதிர்ச்சி கொடுத்தார் ரஜினி. சிவாவுக்கு தலைகால் புரியலை. ஒரு ஸ்வீட் பாக்ஸுடன் ஞானவேல்ராஜாவிடம் இந்த விஷயத்தை சிவா சொல்ல, அது அடுத்த நொடியே சூர்யாவிடம் போக, அவரோ சிவாவின் லைனுக்கு வந்து 'சூப்பர் ஸ்டாரை வெச்சு படம் பண்றீங்களாமே, வாழ்த்துக்கள்! ஆனா நம்ம படத்தை முடிச்சுட்டு அங்கே போங்க. இதுல எந்த மாற்றமும் இல்லை.' என்று செம்ம செக் வைத்துவிட்டார்.

Rajini or Surya, siruthai sivas dilemma

சிவாவுக்கு உண்மையிலேயே சிறுத்தை ஒண்ணு ஓங்கி தன் மூஞ்சியில அடிச்சா மாதிரி ஆகிடுச்சு. காரணம்? ரஜினியே டேட்ஸ் இருக்குதுன்னு சொல்லி அழைச்சிருக்கார். இப்போ அதை ஏத்துக்காம சூர்யாட்ட போயிட்டா, பிறகு ரஜினி கால்சீட் கிடைக்கிறதெல்லாம் குதிரைக்கு கொம்பு முளைச்சு, அதுல பெயிண்டும் தடவி விடுற மாதிரி நடக்காத விஷயங்கள்.

ஆனாலும் சூர்யாவை சொல்லியும் தப்பில்லை. அவர் நியாயப்படிதான் நடக்கிறார் என்றாலும், இளம் நடிகரான சூர்யாவை அடுத்து எப்போது வேண்டுமானாலும் இயக்கலாம், ஆனால் ரஜினியை பிடிப்பது மிக மிக அரிது! என்பதே சிவாவின் வருத்தம்.

கட்ட கடைசியில இப்படி சிவாவுக்கு வில்லனாயிட்டாரே சூர்யா!

- ஜி.தாமிரா

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X