முதல்வனில் ரஜினி அல்லது விஜய் நடிச்சிருக்க வேண்டியது: கே.வி. ஆனந்த்
சென்னை: ஷங்கரின் முதல்வன் படத்தில் ரஜினிகாந்த் அல்லது விஜய் நடித்திருக்க வேண்டியது என்று இயக்குனரும், ஒளிப்பதிவாளருமான கே.வி.ஆனந்த் ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.
ஷங்கர் இயக்கத்தில் அர்ஜுன், மனிஷா கொய்ராலா, ரகுவரன் நடித்த சூப்பர் டூப்பர் ஹிட் படம் முதல்வன். அந்த படத்தில் ஒளிப்பதிவாளராக பணியாற்றியவர் கே.வி. ஆனந்த். ஒளிப்பதிவாளரான அவர் தற்போது இயக்குனராக உள்ளார். கனா கண்டேன் படத்தில் இயக்குனர் அவதாரம் எடுத்த அவர் தற்போது தனுஷை வைத்து அனேகன் படத்தை இயக்கி வருகிறார்.
இந்நிலையில் அவர் முதல்வன் படம் குறித்து ட்விட்டரில் சுவாரய்ஸமான தகவலை அளித்துள்ளார்.

முதல்வன் பார்க்கிறேன்
சன் டிவியில் முதல்வன் படம் பார்த்துக் கொண்டிருக்கிறேன். அந்த படத்தின் படப்பிடிப்புக்கு செல்லும்போது எல்லாம் போருக்கு செல்வது போன்று இருந்தது. மவுண்ட் ரோட்டில், பேருந்து மேல் இருந்து, மக்கள் கூட்டத்தில் ஷூட்டிங் எடுத்தோம் என்று கே. வி. ஆனந்த் தெரிவித்துள்ளார்.

அழகான ராட்சசி
முதல்வன் படத்தில் ஷங்கர், சுஜாதா, ஏ.ஆர். ரஹ்மான், வி.டி. விஜயன், தோட்டா தரணி, கனல் கண்ணன் என்று ஒரு பிராமதமான டீம் இருந்தை மறக்கவே முடியாது. அழகான ராட்சசியே பாடலை 15 நாட்களிலும், முதல்வனே பாடலை 6 நாட்களிலும் படமாக்கினோம் என்றார் ஆனந்த்.

ஹேட்ஸ் ஆஃப்
ஷங்கர் கடினமாக உழைத்தார். அனைத்து உதவி இயக்குனர்கள் மற்றும் எனது உதவியாளர்களுக்கு ஹேட்ஸ் ஆஃப் என்று தெரிவித்துள்ளார் ஆனந்த்.

ரஜினி, விஜய்
அர்ஜுன் கதாபாத்திரத்தில் ரஜினி சார் அல்லது விஜய் நடித்திருக்க வேண்டியது. ஆனால் அவர்கள் ஏனோ சில காரணங்களால் அந்த படத்தில் நடிக்க முடியாமல் போனது என்று ஆனந்த் தெரிவித்துள்ளார்.


Click it and Unblock the Notifications











