பிறந்த நாள்... கமலுக்கு ரஜினி மற்றும் நடிகர் நடிகைகள் வாழ்த்து!
இன்று தனது 59 வது பிறந்த நாளைக் கொண்டாடும் கமலுக்கு சக நடிகர் நடிகைகள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
உலக நாயகன் என்றும் கலைஞானி என்றும் போற்றப்படும் கமலஹாசன் இன்று தனது 59-வது பிறந்த நாளை கொண்டாடினார்.

ரஜினி
நள்ளிரவு 12 மணிக்கு கமலுக்கு பிறந்த நாள் வாழ்த்து சொன்ன முதல் நபர், அவரது நெருங்கிய நண்பர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்.
தொடர்ந்து இன்று நடிகர், நடிகைகள் பலர் நேரிலும் போனிலும் வாழ்த்தினார்கள்.

விருந்து
முன்னதாக பிறந்த நாளையொட்டி நேற்று நள்ளிரவு முக்கியஸ்தர்களுக்கு சென்னையில் உள்ள ஒட்டல் ஒன்றில் விருந்து கொடுத்தார். இதில் நடிகர்கள் ஆர்யா, தனுஷ், இயக்குநர்கள் மணிரத்னம், செல்வமணி, நடிகை சுகாசினி உள்ளிட்ட பலர் பங்கேற்று கமலுக்கு பூங்கொத்து கொடுத்து வாழ்த்தினார்கள்.

கேக் வெட்டினார்
நடிகை கவுதமியும் இந்த கொண்டாட்டத்தில் பங்கேற்றார். பின்னர் கமல் ‘கேக்' வெட்டினார்.

அர்ஜூன் வாழ்த்து
கமலுக்கு நடிகர் அர்ஜுன் தன் வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார். அவர் கூறுகையில், "இந்திய சினிமாவில் நவீன தொழில் நுட்பங்களை அறிந்து வைத்துள்ள ஒரே நடிகர் கமல். பல்துறைகளில் திறமை வாய்ந்தவர். என்னைப் போன்ற நடிகர்களுக்கு துண்டுதலாக இருக்கிறார். அவருடன் யாரும் போட்டியிட முடியாது. அடுத்த ஐம்பது ஆண்டுகள் அவர் ஆரோக்கியமாக வாழ வேண்டும், சினிமாக்களைப் படைக்க வேண்டும்," என்றார்.

குஷ்பு
நடிகை குஷ்பு தன் வாழ்த்து செய்தியில், "கமல் எனது சிறந்த நண்பர்களில் ஒருவர். அவரை வாழ்த்துவதில் பெருமையடைகிறேன்," என்றார்.


Click it and Unblock the Notifications











