படையப்பாவாக பிரதீப் ரங்கநாதன்.. நீலாம்பரியாக பிரியங்கா மோகன்.. எடிட்டா இருந்தாலும் ஒரு நியாயம் வேண்டாமா?
சென்னை: ரஜினிகாந்த், சிவாஜி கணேசன், ரம்யா கிருஷ்ணன் உள்ளிட்டோர் நடிப்பில் கே.எஸ்.ரவிக்குமார் இயக்கத்தில் கடந்த 1999ஆம் ஆண்டு வெளியான படம் படையப்பா. மெகா ப்ளாக் பஸ்டர் ஆகி வசூல் சாதனை படைத்த அப்படம் மீண்டும் நாளை ரீ ரிலீஸ் ஆகவிருக்கிறது. இதனால் எங்கும் படையப்பா ஃபீவராக இருக்கிறது. இந்நிலையில் படையப்பா படத்தில் தற்போதைய நடிகர்களை வைத்து உருவாக்கப்பட்ட எடிட் வீடியோவால் பிரதீப் ரங்கநாதன், பிரியங்கா மோகன் உள்ளிட்டோர் சிக்கியிருக்கிறார்கள்.
முத்து படத்தின் வெற்றிக்கு பிறகு ரஜினியும், கே.எஸ்.ரவிக்குமாரும் இணைந்த படம் படையப்பா. அப்படம் அறிவிக்கப்பட்ட சமயத்தில் தமிழ்நாடெங்கும் அந்தப் படம் பற்றிய பேச்சாகத்தான் இருந்தது. படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானபோது அதில் ரஜினி ஸ்டைலாக அடித்த சுருட்டு, போட்டிருந்த ஜீன்ஸ் ஷர்ட் பேண்ட் உள்ளிட்டவைகள் எல்லாம் மார்க்கெட்டில் அதிகம் வியாபாரம் ஆகின. படையப்பா பேண்ட், படையப்பா கூலிங் கிளாஸ் என அத்தனையிலும் படையப்பாவின் படையெடுப்பே நடந்தது.
படம் மெகா ஹிட்: அறிவிக்கப்பட்டபோதே எக்கச்சக்க ஹைப்பை பெற்ற படம் கடந்த 1999ஆம் ஆண்டு வெளியானது. ரஜினி, சிவாஜி, ரம்யா கிருஷ்ணன், சௌந்தர்யா, செந்தில், வடிவுக்கரசி, ராதாரவி, நாசர, அப்பாஸ், ரமேஷ் கண்ணா என பெரிய நட்சத்திர பட்டாளமே இதில் களமிறங்கியிருந்தது. ரசிகர்கள் ரிலீஸின்போது திருவிழா போல் கொண்டாடினார்கள். படம் ஏகோபித்த ஆதரவை பெற்று மெகா ப்ளாக் பஸ்டர் ஆனது.

சிறப்பான நினைவுகள்: இப்போதும் படையப்பா படத்தை டிவியில் போட்டால் அனைத்தையும் விட்டுவிட்டு அமர்ந்து பார்க்கும் கூட்டம் இருக்கத்தான் செய்கிறது. குறிப்பாக 90ஸ் கிட்ஸ்களுக்கு படையப்பா என்பது படம் மட்டுமில்லை; அது ஒரு எமோஷன். ரஜினியின் ஸ்டைல், பஞ்ச் வசனம், ஊஞ்சலை தனது சால்வையால் இழுக்கும் சீன், நீலாம்பரியின் வெறி பிடித்த காதல் என்று ஒவ்வொன்றையும் அந்தப் படத்தில் ரசித்துக்கொண்டே இருப்பார்கள். அதனால்தான் அந்தப் படம் இத்தனை வருடங்கள் கழித்தும் வாழ்ந்துகொண்டிருக்கிறது.
ரீ ரிலீஸ்: இப்படி பல சிறப்புகளை கொண்ட படையப்பா ரஜினிகாந்த்தின் பிறந்தநாளை முன்னிட்டு நாளை ரீ ரிலீஸ் ஆகிறது. 25 வருடங்களுக்கு முன்பு ரிலீஸான ஒரு படத்துக்காக ரஜினியே 35 நிமிடங்கள்வரை பேசி வீடியோ வெளியிட்டதிலிருந்தே தெரிந்துகொள்ளலாம் அந்தப் படம் அவரது வாழ்க்கையிலும் எவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்த படம் என்பதை. இப்படி சோஷியல் மீடியா எங்கும் படையப்பா வாசமாகத்தான் இருக்கிறது. கண்டிப்பாக நாளை படத்தை பார்க்க பெரிய கூட்டம் தியேட்டரில் கூடும் என்பது கூடுதல் எதிர்பார்ப்பு.
எடிட் வீடியோ வைரல்: இந்நிலையில் படையப்பா படத்தை வைத்து எடிட் செய்யப்பட்ட வீடியோ ஒன்று சென்சேஷனல் ஆகியிருக்கிறது. அதாவது படையப்பாவில் ரஜினிக்கு பதிலாக பிரதீப் ரங்கநாதன், சிவாஜிக்கு பதிலாக சிவகார்த்திகேயன், ரம்யா கிருஷ்ணனுக்கு பதிலாக பிரியங்கா மோகன் நடித்தால் எப்படி இருக்கும் என்ற கற்பனைதான் அது. மேலும் அந்த வீடியோவின் பின்னணியில் டியூட் படத்தின் ஊரும் ப்ளஸ் பாடலை ஒலிக்கவிட்டிருக்கிறார்கள். இந்த வீடியோ தற்போது பலரது கவனத்தை ஈர்த்திருந்தாலும்; எப்படிப்பட்ட படம் படையப்பா; அதில் நடித்தவரக்ள் எப்பேற்பட்ட நடிகர்கள்; அவர்கள் இடத்தில் இவர்களா? எடிட்டா இருந்தாலும் ஒரு நியாயம் வேண்டாமா என்று கேட்டு கிண்டலும் செய்ய ஆரம்பித்திருக்கிறார்கள்.


Click it and Unblock the Notifications











