Bigg Boss 3 வீட்டில் இருந்து நீக்கப்பட்ட ரஜினி ஓவியம்: இது தான் காரணமா?

By Siva

சென்னை: ரஜினிகாந்த் ரசிகர்கள் பிக் பாஸ் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் மீது கடும் கோபத்தில் உள்ளனர்.

பிக் பாஸ் 3 நிகழ்ச்சி துவங்கிவிட்டது. இனி ரசிகர்களுக்கு அதிலும் குறிப்பாக மீம்ஸ் கிரியேட்டர்களுக்கு 100 நாட்களுக்கு கொண்டாட்டம் தான். பிக் பாஸ் 3 வீட்டில் விருமாண்டி கமல் ஹாஸனின் ஓவியம் உள்ளது.

அதே போன்று பேட்ட ரஜினிகாந்தின் ஓவியமும் பிக் பாஸ் வீட்டில் இருந்தது. பிக் பாஸ் 3 வீட்டை சுற்றிப் பார்க்க பத்திரிகையாளர்கள் சென்றபோது கூட ரஜினியின் ஓவியம் இருந்தது.

பிக் பாஸ்

பிக் பாஸ்

பிக் பாஸ் 3 நிகழ்ச்சி துவங்கும் முன்பு ரஜினியின் ஓவியத்தை நீக்கிவிட்டார்கள். ரஜினியின் ஓவியத்தை நீக்கியது அவரின் ரசிகர்களுக்கு பிடிக்கவில்லை. ரஜினி புகைப்பிடிப்பது போன்று இருந்ததால் அந்த ஓவியத்தை நீக்கியிருக்கக்கூடும் என்று கூறப்படுகிறது. இந்நிலையில் இன்று காலை வெளியான பிக் பாஸ் 3 ப்ரொமோ வீடியோவை பார்த்த ரஜினி ரசிகர்கள் மகிழ்ச்சி மற்றும் கோபம் அடைந்தார்கள். பிக் பாஸ் 3 நிகழ்ச்சி துவங்கியதும் தலைவர் பாடலை போட்டதால் அருமை என்று ரஜினி ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்தார்கள். மேலும் எங்கள் தலைவரின் ஓவியத்தை நீக்கிவிட்டு அவர் பட பாடலை மட்டும் பயன்படுத்துகிறீர்களா என்று அவர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

பிரச்சனை

பிரச்சனை

ஹீரோக்கள் யாராவது புகைப்பிடிப்பது போன்ற புகைப்படத்தை பார்த்தாலே சிலர் எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் குதிப்போம் என்று கிளம்பிவிடுகிறார்கள். பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு அத்தகைய இலவச விளம்பரம் எல்லாம் வேண்டாம் என்று நினைத்து ரஜினியின் ஓவியத்தை நீக்கிவிட்டார்களோ என்னவோ?

கமல் ஹாஸன்

கமல் ஹாஸன்

பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு ரசிகர்களும், நெட்டிசன்களும் சமூக வலைதளங்களில் அமோகமாக விளம்பரம் கொடுத்துக் கொண்டிருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. கமல் ஹாஸன் அரசியலில் இருப்பதால் ரசிகர்கள் ஏதேதோ யோசித்து ரஜினியின் ஓவியம் நீக்கப்பட்டதற்கு புதுக் காரணம் கண்டுபிடித்துள்ளனர்.

அரசியல்வாதி

அரசியல்வாதி

ரஜினியின் ஓவியத்தை நீக்கச் செய்யும் அளவுக்கு வில்லன் அரசியல்வாதி அல்ல எங்க ஆண்டவர், இது அவர் வேலை இல்லை என்று கமல் ஹாஸனின் ரசிகர்கள் தெரிவித்துள்ளனர். ஆரம்பமே, கமல்-ரஜினி பிரச்சனையுடன் அமர்க்களமாக துவங்கியுள்ளது. போகப் போக இன்னும் என்னென்ன பிரச்சனைகள் எல்லாம் பிக் பாஸ் 3 வீட்டில் நடக்கப் போகிறதோ?. பிரச்சனை, பிரச்சனை, பிரச்சனையோ பிரச்சனை செய்யத் தானே அந்த நடிகையை பிக் பாஸ் வீட்டிற்கு அழைத்து வந்துள்ளனர். அதனால் நிச்சயம் நிறைய நடக்கும்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X