Rajini: "ரஜினி 2 முறை கூப்பிட்டும் முடியாதுன்னு சொல்லிட்டேன்..” ட்ரெண்டாகும் பிரபலத்தின் பேட்டி!

சென்னை: அருணாச்சலம் படப்பிடிப்பில் சூப்பர் ஸ்டார் ரஜினி தன்னிடம் ஜாலியாக விளையாடியது குறித்து நடிகை ரம்பா பேசிய பேட்டி வைரலானது. இது விஜய் ரசிகர்களின் வேலை என நெட்டிசன்கள் கூறி வந்தனர். இந்நிலையில், "ரஜினி 2 முறை கூப்பிட்டும் முடியாதுன்னு சொல்லிட்டேன்" எனக் கூறிய இன்னொரு பிரபலத்தின் பேட்டியும் டிவிட்டரில் தீயாகப் பரவி வருகிறது.

ரஜினியிடம் நோ சொன்ன சின்ன திரை பிரபலம்: சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தற்போது வேட்டையன் படத்தில் நடித்து வருகிறார். தசெ ஞானவேல் இயக்கும் இந்தப் படத்தின் ஷூட்டிங் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இதனைத் தொடர்ந்து லோகேஷ் கனகராஜ் இயக்கும் தலைவர் 171 படத்தில் நடிக்கவுள்ளார் ரஜினிகாந்த். இதனிடையே அடிக்கடி சூப்பர் ஸ்டார் டைட்டில் குறித்து ரஜினி ரசிகர்களுக்கும் விஜய் ரசிகர்களுக்கும் இடையே டிவிட்டரில் மோதல் நடக்கிறது.

 Rajini: Pepsi Uma explains her refusal to act with Rajinikanth

இதில் உச்சக்கட்டமாக ரம்பாவின் பேட்டியை வைத்து ரஜினியை ட்ரோல் செய்து வந்தனர். அதாவது அருணாச்சலம் படத்தின் ஷூட்டிங்கின் போது, ரஜினியை கட்டிப் பிடிக்காததால் அவர் ஜாலியாக கோபமானது பற்றியும், திடீரென வந்து தனது பின்னால் தட்டி விளையாடியது குறித்தும் ரம்பா பேசியிருந்தார். இந்த பேட்டி திடீரென வைரலான நிலையில், "ரம்பாவிடம் அத்துமீறிய ரஜினிகாந்த்" என்ற ஹேஷ்டேக் ட்ரெண்டானது.

இந்நிலையில், அடுத்தக்கட்டமாக பெப்சி உமா பேசிய வீடியோ வைரலாகி வருகிறது. அதில் "ரஜினி சார் தன்னை முத்து படத்தில் நடிக்க சான்ஸ் கொடுத்தார். எல்லோருமே ரஜினிக்கு ஜோடியாக நடிக்க ஆசைப்படும் போது அந்த வாய்ப்பு தனக்கு இரண்டு முறை தேடி வந்தது. ஆனால், நான் இரண்டு படங்களிலும் நடிக்க மறுத்துவிட்டேன். அப்போதும் கூட நான் கூப்பிட்டும் நடிக்க மாட்டீங்கன்னு சொல்லிட்டீங்கள" என ரஜினி கலாய்த்ததாக பெப்சி உமா கூறியிருந்தார்.

 Rajini: Pepsi Uma explains her refusal to act with Rajinikanth

அதேபோல், எத்தனை பேருடன் நின்றுகொண்டிருந்தாலும் எனது பார்வையெல்லாம் உங்க மேல தான் இருக்கும் எனவும் ரஜினி தன்னிடம் கூறியதாக பெப்சி உமா பேசியுள்ளார். இந்த வீடியோவும் தற்போது டிவிட்டரில் வைரலாகி வருகிறது. இதனையும் விஜய் ரசிகர்கள் தான் ட்ரெண்ட் செய்து வருவதாக ரஜினி ஃபேன்ஸ் கமெண்ட்ஸ் செய்து வருகின்றனர். 1990களில் சன் டிவியில் பெப்ஸி உங்கள் சாய்ஸ் என்ற நிகழ்ச்சியை தொகுத்து வழங்கியவர் உமா.

அப்போது முதலே பெப்ஸி உமா என ரசிகர்களால் பிரபலமான அவருக்கு ஏராளமான ரசிகர்கள் இருந்தனர். பெப்ஸி உமா உச்சத்தில் இருந்த போதே அவர் சினிமாவில் நடிப்பார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அவர் சூப்பர் ஸ்டார் ரஜினி கூப்பிட்டே மறுத்துவிட்டது தற்போது தான் 90ஸ் கிட்ஸ் ரசிகர்களுக்கே தெரியவந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X