தர்பாரின் பொங்கல் வாழ்த்து… ரசிகர்கள் ஹாப்பி
சென்னை : நடிகர் ரஜினிகாந்த் ரசிகர்களுக்கு பொங்கல் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த தர்பார் திரைப்படம் நாளை வெளியாகவுள்ள நிலையில் படப்பிடிப்புக்காக வெளியூர் சென்ற அவர் இன்று சென்னை திரும்பினார். இந்த தகவல் அறிந்து ஏராளமான ரசிகர்கள் சென்னை விமான நிலையத்தில் திரண்டனர். ரஜினி, ரஜினி என்று கோஷம் எழுப்பி அவரை வரவேற்றனர். அப்போது ரசிகர்களுக்கு அவர் பொங்கல் வாழ்த்துக்களை தெரிவித்தார்.

தர்பார் படம் இந்தியா முழுவதும் சுமார் 4000 ஆயிரம் திரையரங்குகளில் வெளியாக உள்ளது. உலகம் முழுவதும் 7000 மேற்பட்ட திரையரங்குகளில் இந்த படம் வெளியாக உள்ளது. இது போல எந்த ஒரு நடிகர்களின் படமும் இவ்வளவு பெரிய வரவேற்பை பெற்றது இல்லை. இது ரஜினி ஒருவரால் மட்டுமே சாத்தியமாகும்.
நாளை வெளியாக உள்ள திரைப்படத்தை கொண்டாட ரசிகர்கள் இப்போதே கொண்டாட்டத்திற்கு தயாராகி விட்டனர். இது ரஜினி ரசிகர்களுக்கு இன்னொரு தீபாவளி என்றே சொல்லலாம், அந்த அளவுக்கு ஆட்டம் பாட்டம் கொண்டாட்டம் களைகட்டும்.

தமிழகத்தின் முக்கிய நகரங்கள் ஆன சென்னை, கோவை, திருச்சி,மதுரை போன்ற இடங்களில் டிக்கெட் விற்பனை அமோகமாக நடைப்பெற்று வருகின்றன. மேலும் பல மாதங்களுக்கு முன்பே ஆன்லைன் புக்கிங்கும் தொடங்கியது. சென்னையை பொறுத்த வரை ரோகினி திரையரங்கம் மற்றும் காசி திரையரங்கங்களில் டிக்கெட் வாங்குவதற்கு ரசிகர்கள் கூட்டம் அலைமோதுகிறது. ரஜினி ரசிகர்களுக்கு நாளைய தர்பார் பட வெளியீடு அவர்களுக்கு பட வெளியீடு மட்டும் அல்ல அவர்களுக்கு அது திருவிழா.


Click it and Unblock the Notifications











