'சென்னை என்கிற மெட்ராஸ்' பைலட் மூவியை பாராட்டிய ரஜினி... வைரலாகும் போட்டோ!

By Vignesh Selvaraj

Recommended Video

'சென்னை என்கிற மெட்ராஸ்' பைலட் மூவியை பாராட்டிய ரஜினி... வைரலாகும் போட்டோ!- வீடியோ

சென்னை : சினிமாவுக்கான விசிட்டிங் கார்டாக குறும்படங்கள் இருந்த காலம் போய், இப்போது பைலட் ஃபிலிம்கள் வரத் தொடங்கிவிட்டன.

யார் வேண்டுமானாலும் ஷார்ட் ப்லிம் எடுத்து விடலாம் எனும் நிலைதான் பைலட் ஃபிலிம் நோக்கி மக்களின் கவனத்தைக் குவித்திருக்கிறது.

'சென்னை என்கிற மெட்ராஸ்' என்ற பெயரில் ஒரு பைலட் மூவி உருவாகியிருக்கிறது. இந்தப் படத்தை அரவிந்த் குமார் இயக்கியிருக்கிறார். இந்தப் படத்தின் ட்ரெய்லரை பார்த்து ரசித்த ரஜினிகாந்த் படக்குழுவினருக்கு பாராட்டுகளைத் தெரிவித்துள்ளார்.

சென்னை என்கிற மெட்ராஸ்

சென்னை என்கிற மெட்ராஸ்

இந்தப் படத்தின் கதை இந்திய திரைப்பட எழுத்தாளர்கள் சங்கம், தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர்கள் சங்கம், அமெரிக்க திரைப்பட எழுத்தாளர்கள் கில்டு என பல இடங்களிலும் பதிவு செய்யப்பட்டிருக்கிறது. எனவே, இந்தப் படத்தின் கதை எந்த மொழியின் காப்பியும் அல்ல என நம்பலாம்.

அண்டர்கவர் இன்வெஸ்டிகேட்டிவ் ஜர்னலிசம்

அண்டர்கவர் இன்வெஸ்டிகேட்டிவ் ஜர்னலிசம்

அண்டர்கவர் இன்வெஸ்டிகேட்டிவ் ஜர்னலிசம் எனும் கான்செப்ட்டை கையில் எடுத்து, அதை வடசென்னையில் நடைபெறும் சம்பவங்களோடு இணைத்து படத்தை உருவாக்கியிருக்கிறார் இயக்குநர் அரவிந்த் குமார்.

சினிமாட்டோகிராஃபி பக்கா

சினிமாட்டோகிராஃபி பக்கா

சிறப்பான சினிமாட்டோகிராஃபி, பின்னணி இசை என பக்காவாக இந்தப் படத்தை உருவாக்கி இருக்கிறார்கள். இந்தப் படத்திற்கு 5 பேர் இணைந்து பின்னணி இசை கம்போஸ் செய்திருக்கிறார்கள்.

ட்ரெய்லர்

இந்தப் படத்தின் பரபர ட்ரெய்லர் ரிலீஸ் ஆகியிருக்கிறது. இந்த ட்ரெய்லரை நடிகர் சூர்யா கடந்த சனிக்கிழமை வெளியிட்டார். ட்ரெய்லரை பார்த்து ரசித்த ரசிகர்கள் படத்தின் வெளியீட்டுக்காகக் காத்திருக்கிறார்கள்.

ரஜினிகாந்த் பாராட்டு

இந்நிலையில், இந்தப் படக்குழுவினரின் ஆசைக்கு ஏற்ப, 'சென்னை என்கிற மெட்ராஸ்' படத்தின் ட்ரெய்லரை பார்த்த ரஜினிகாந்த் சிறப்பாக இருப்பதாகப் பாராட்டி இருக்கிறார்.

படக்குழுவினருடன் புகைப்படம்

படக்குழுவினருடன் புகைப்படம்

இந்தத் தகவலை 'சென்னை என்கிற மெட்ராஸ்' படத்தின் இயக்குநர் அரவிந்த் குமார் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அவர் படத்தைப் பாராட்டிய ரஜினிக்கு நன்றி தெரிவித்துள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X