என்கேபி பார்த்துட்டு அஜித்தை பாராட்டிய ரஜினி.. இனிமே நீங்க சண்டை போடக்கூடாது.. ஓகேவா ரசிகாஸ்!
நேர்கொண்ட பார்வை படத்தைப் பார்த்து அஜித்தை போனில் பாராட்டியுள்ளார் ரஜினி.
சென்னை: நேர்கொண்ட பார்வை படத்தை பார்த்த நடிகர் ரஜினிகாந்த், அஜித்தை போனில் அழைத்து வெகுவாக பாராட்டியுள்ளளார்.
எச்.வினோத் இயக்கத்தில் அஜித் நடித்துள்ள நேர்கொண்ட பார்வை திரைப்படம் கடந்த வாரம் வெளியாகி திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. இப்படத்தை பார்த்துவிட்டு பலரும் பாராட்டி வருகின்றனர்.
திரைப்பிரபலங்கள் மட்டுமின்றி அரசு அதிகாரிகள்கூட வெளிப்படையாக படத்தை பாராட்டியுள்ளனர். இதனால் திரையரங்குகளில் மக்கள் கூட்டம் அதிகரித்து வருகிறது.

ரஜினி:
இந்நிலையில் நடிகர் ரஜினி நேர்கொண்ட பார்வை படத்தை நேற்று பார்த்ததார். படத்தில் சொல்லப்பட்டுள்ள கருத்து ரஜினிக்கு வெகுவாக பிடித்து விட்டதாம். மேலும் இந்த படத்தில் அஜித்தின் நடிப்பையும் ரஜினி வெகுவாக ரசித்துள்ளார்.

அஜித்துக்கு பாராட்டு:
எப்போதுமே நல்ல படங்களைப் பார்த்தால் சம்பந்தப்பட்ட நடிகர்கள் மற்றும் இயக்குநர்களை போனில் அழைத்து பாராட்டுவது ரஜினியின் வழக்கம். அந்தவகையில், நேர்கொண்ட பார்வை படம் தொடர்பாக அஜித்துக்கு போன் செய்த பேசிய ரஜினி, அவரது நடிப்பை வெகுவாக பாராட்டியுள்ளார். பதிலுக்கு அஜித்தும் ரஜினிக்கு நன்றி தெரிவித்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

ரசிகர்கள் மோதல்:
பேட்ட, விஸ்வாசம் பட ரிலீஸ் சமயத்தில் ரஜினி, அஜித் இடையே பிரச்சினை ஏற்பட்டதாக பேசப்பட்டது. இதனால் இருவரின் ரசிகர்களும் டிவிட்டரில் வார்த்தை போர் நடத்தினர். படத்தில் இடம் பெற்ற காட்சிகளை வைத்து இருதரப்பும் வீடியோ மூலம் கூட மோதிக் கொண்டனர்.

தீர்ந்தது பிரச்சினை:
இந்நிலையில் அஜித்துக்கு போன் செய்து ரஜினி பாராட்டியுள்ளதன் மூலம், இருவருக்கும் இடையே எந்த பிரச்சினையும் இல்லை என்பது தெளிவாகியுள்ளது. இனிமேலாவது ரஜினி மற்றும் அஜித் ரசிகர்கள் தங்கள் மோதல் போக்கை தவிர்த்து நட்புடன் இருப்பார்கள் என எதிர்பார்க்கலாம்.


Click it and Unblock the Notifications











