பிரமாதம்... கபாலி குழுவுக்கு ரஜினி பாராட்டு!
கபாலி படக் குழுவினருக்கு தனது பாராட்டுக்களைத் தெரிவித்துள்ளார் நடிகர் ரஜினிகாந்த்.
ரஜினியின் ‘கபாலி' பட டீசருக்கு உலகம் முழுவதும் பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது.

பாராட்டு
2 கோடிக்கும் அதிகமானோர் இதைப் பார்த்து ரசித்துள்ளனர். ரஜினியின் வித்தியாச நடிப்பு மற்றும் இயக்குநர் ரஞ்சித்தின் திறமைக்கு மிகப்பெரிய பாராட்டும் கிடைத்துள்ளது.

மூன்று ரஜினி
பா.ரஞ்சித் இயக்கத்தில் ரஜினியுடன் ராதிகா ஆப்தே, தன்ஷிகா, தினேஷ், கலையரசன், மைம்கோபி உள்பட பலர் நடித்திருக்கிறார்கள். ரஜினி மூன்றுவித தோற்றங்களில் நடித்துள்ளார்.

மகிழ்ச்சி
‘கபாலி' படத்துக்கு பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் ரஜினியுடன் நடித்த நடிகர் - நடிகைகள் படத்தில் நடித்த போது அவர் தங்களை தட்டிக் கொடுத்து பாராட்டியதையும், அதனால் சிறப்பாக நடித்தையும் தெரிவித்து மகிழ்ந்துள்ளனர்.
ரஜினி சூப்பர் ஸ்டாராக இருந்தாலும் உடன் நடித்த ஜூனியர் நடிகர் - நடிகைகளிடம் எந்த வித பாகுபாடும் காட்டவில்லை. எங்களுடன் நெருங்கி பழகினார். ஒவ்வொரு காட்சியிலும் அவர்கள் நடிப்பை பாராட்டி உற்சாக மூட்டினார். இதனால் நாங்கள் உற்சாகமாக செயல்பட முடிந்தது என்று மைம் கோபி, ஒளிப்பதிவாளர் முரளி, சண்டைப் பயிற்சியாளர்கள் உள்ளிட்டோர் தெரிவித்துள்ளனர்.

ரஞ்சித்துக்கும்....
இது மட்டுமல்ல படம் தயாரான பிறகு அதைப் பார்த்து விட்டு இயக்குநர் பா.ரஞ்சித்தையும் ரஜினி பாராட்டு தெரிவித்து மகிழ்ந்திருக்கிறார். டீசர் பெற்ற வெற்றிக்காகவும் வாழ்த்தியுள்ளார்.


Click it and Unblock the Notifications











